நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

“தேங்காய் சிப்ஸுக்கு வரவேற்பு அதிகம்!” - மதிப்புக்கூட்டும் மந்திரம் நேரலைப் பயிற்சி!

நேரலையில் அனந்தராமகிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
News
நேரலையில் அனந்தராமகிருஷ்ணன்

பயிற்சி

விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்த விளைபொருள்களை மதிப்புக்கூட்டினால், கூடுதல் லாபம் பார்க்க முடியும்.

இதற்கு வழிகாட்டும் வகையில் பசுமை விகடன் ஏற்பாட்டில், கடந்த ஜூலை 16-ம் தேதி ‘மதிப்புக்கூட்டும் மந்திரம்’ என்ற தலைப்பில் நேரலை [ஆன்லைன்] பயிற்சி நடைபெற்றது.

“தேங்காய் சிப்ஸுக்கு வரவேற்பு அதிகம்!” - மதிப்புக்கூட்டும் மந்திரம் நேரலைப் பயிற்சி!

தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவு பதனீட்டு தொழில்நுட்பக்கழகத்தின் இயக்குநர், முனைவர் அனந்தராமகிருஷ்ணன் இதில் கலந்துகொண்டு, மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பங்கள், இதற்கான சந்தை வாய்ப்புகள் உள்பட இன்னும் பல பயனுள்ள தகவல்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டார். விவசாயிகள் எழுப்பிய சந்தேகங்களுக்கு விரிவாக விளக்கம் அளித்தார். குறிப்பாக “எளிதில் அழுகக்கூடிய தக்காளி உள்ளிட்ட விளைபொருள்களை மதிப்புக்கூட்டுவதற்கான பயிற்சியை, விவசாயிகள் இருக்கும் இடத்திற்கு நேரடியாகச் சென்று வழங்குவதற்கான நடமாடும் பயிற்சிக்கூடம் எங்களிடம் உள்ளது. இதை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம். தஞ்சாவூரில் உள்ள எங்களது தொழில்நுட்பக்கழகத்திற்கு வந்தும் பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். இங்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. தேங்காய் சிப்ஸுக்குத் தற்போது வரவேற்பு அதிகமாக உள்ளது. தேங்காய் பவுடராகவும் மதிப்புக்கூட்டலாம். சிறுதானியங்களில் ஐஸ்கிரீம் தயார் செய்யலாம். வெங்காயத்தை அப்படியே விற்பனை செய்யாமல், தோல் நீக்கி விற்பனை செய்தால் கூடுதல் விலை கிடைக்கும். சின்ன வெங்காயத்தைத் தரம்பிரித்து, தோல் நீக்கித் தருவதற்கான நவீன இயந்திரம் எங்களிடம் உள்ளது.

நேரலையில் அனந்தராமகிருஷ்ணன்
நேரலையில் அனந்தராமகிருஷ்ணன்

முருங்கை இலையைப் பதப்படுத்தி பவுடராக மதிப்புக்கூட்டி விற்பனை செய்யலாம். இதற்கு வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது” எனவும் தெரிவித்தார். மதிப்புக்கூட்டுதல் மற்றும் பதனீட்டு தொழில்களுக்கு மத்திய அரசு வழங்கும் சிறப்புத் திட்டங்கள், கடனுதவி உள்ளிட்ட தகவல்களையும் முனைவர் அனந்தராமகிருஷ்ணன் பகிர்ந்துக்கொண்டார். ‘‘இது மிகவும் பயனுள்ள நிகழ்ச்சியாக இருந்தது; இதுபோல பல நிகழ்ச்சிகளை நடத்துங்கள்” என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள்.