Published:Updated:

முருங்கை இலையில் முத்தான லாபம்! ஆன்லைன் பண்ணை பார்வையிடல்!

நேரலையில் பூபதி சுந்தரம்
பிரீமியம் ஸ்டோரி
News
நேரலையில் பூபதி சுந்தரம்

நிகழ்ச்சி

சுமை விகடன் நடத்தும் ஆன்லைன் நிகழ்ச்சிகளிலே புதிய முயற்சியாகக் கடந்த பசுமை விகடன் இதழ் அட்டைப் படக் கட்டுரையாக ‘3 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ.5,25,000 வருமானம்! - முருங்கை இலையில் முத்தான லாபம்!’ எனும் தலைப்பில் வெளியாகி இருந்தது. இந்த அட்டைப்பட கட்டுரை விவசாயி வயலிலிருந்தே நேரடியாக முருங்கைச் சாகுபடி குறித்த பண்ணை பார்வையிடல் நிகழ்ச்சியை, கடந்த செப்டம்பர் 4-ம் தேதி பசுமை விகடன் நடத்தியது.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுக்கா, காகம் கிராமத்திலிருந்து முருங்கை இலை விவசாயி பூபதி சுந்தரம் பேசும்போது, “எங்க பகுதியில முருங்கை விவசாயம் கொஞ்சம் அதிகம். பக்கத்துல ஒரு கம்பெனி இயற்கை முறையில விளைஞ்ச முருங்கை இலையைக் கொள்முதல் செய்துகிட்டிருந்தாங்க. இப்போ என்னோட தோட்டத்துல 3 ஏக்கர்ல செடி முருங்கை போட்டிருக்கேன். முருங்கை இலையை வாங்குற கம்பெனிக்காரங்களே வந்து இலையைப் பறிச்சுட்டுப் போயிடுறாங்க. நான் போட்டிருக்கிறது நாட்டு ரக முருங்கை. ஈரோடு மாவட்டத்துல முருங்கை இலை பவுடர் தயாரிக்கிற கம்பெனிக நிறைய இருக்குது. அவங்க முருங்கை இலையை வாங்கிக்கிறாங்க. முருங்கை இலைக்கு விற்பனை வாய்ப்பு இருக்கிறதால, இந்தச் சாகுபடியில இறங்கினேன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

4 அடிக்கு 2 அடி இடைவெளியில் முருங்கை விதையை விதைக்க வேண்டும். ஏக்கருக்கு ஒரு கிலோ விதை தேவைப்படும். 30-ம் நாள் கொழுந்தைக் கிள்ளி விட வேண்டும். அப்போதுதான் செடியில் அதிக கிளைகள் உருவாகும். இல்லை என்றால் செடி மேல்நோக்கி உயரமாக வளர்ந்துவிடும்.

நேரலையில் பூபதி சுந்தரம்
நேரலையில் பூபதி சுந்தரம்

120-ம் நாள் முதல் முருங்கை இலைகளை அறுவடை செய்யலாம். தொடர்ந்து 60 நாள்களுக்கு ஒருமுறை அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கருக்கு, ஒரு அறுவடைக்கு 5 முதல் 9 டன் வரை மகசூல் கிடைக்கும். சராசரியாக ஏக்கருக்கு 7 டன் கிடைக்கும். 10 வருஷத்துக்கு மேல இலை நல்லா தழைக்கிற வரைக்கும் மகசூல் எடுக்கலாம். களை அதிகம் இல்லாமல் பார்த்துக்கணும். ஒவ்வோர் அறுவடைக்குப் பிறகும் ஒரு களை எடுக்கணும். முருங்கையைப் பொறுத்தவரை முதல் அறுவடைக்குத்தான் உழவு, விதைச் செலவுன்னு இருக்கும். அடுத்தடுத்த அறுவடைக்குச் செலவு ஒரு ஏக்கருக்குக் கம்மியாத்தான் செலவாகும்’’ என்றார். நிகழ்ச்சியை பல்வேறு பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் பார்வையிட்டு பயன்பெற்றனர்.

முருங்கை இலையில் முத்தான லாபம்! ஆன்லைன் பண்ணை பார்வையிடல்!

இன்னும் விரிவான தகவல்களை வீடியோவாகக் காண இந்த க்யூ.ஆர்கோடை ஸ்கேன் செய்யவும்.