கொரோனா காலத்தில் மனிதர்களுக்கு மட்டும்தான் ஊரடங்கு. ஆனால், பயிர்களில் தங்கள் தாக்குதலை வழக்கம்போல் செய்துகொண்டே இருக்கின்றன பூச்சிகள். அதற்காகப் பயிர்களில் பூச்சிகளை மேலாண்மை செய்யும் வழிமுறைகள் தொடர்பான ஆன்லைன் பயிற்சியை வழங்கியது பசுமை விகடன்.

செப்டம்பர் 17-ம் தேதி ‘வேளாண்மையில் பூச்சிகளைச் சமாளிக்கும் வழிகள்’ என்ற தலைப்பில் நடந்த நேரலைப் பயிற்சியில் பூச்சியியல் வல்லுநர் செல்வம் கலந்துகொண்டு, பூச்சி மேலாண்மை தொடர்பான கருத்துகளை விவசாயிகளிடம் பகிர்ந்து கொண்டார். பூச்சிகளின் உலகம், அவற்றின் வாழ்க்கை முறைகளைப் பற்றிப் பேசியவர், “பூச்சி மேலாண்மைக்குப் பூச்சிகளைப் பற்றி முழுமை யாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அதன் நான்கு பருவங்கள், அது எந்தப் பருவத்தில் எப்படி செயல் புரியும் என்பது போன்ற விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் பூச்சி மேலாண்மையில் வெற்றிகொள்ள முடியும். எறும்புகள், கறையான்கள், தேனீக்கள் ஆகியவை மனிதர்களைப்போல் கூட்டுக் குடும்ப வாழ்க்கை வாழ்பவை. இவை விவசாயத்துக்குப் பலவிதமான நன்மைகள் செய்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS
பூச்சிகள் உலகம் வித்தியாசமானது. பச்சை கண்ணாடி இறக்கைப்பூச்சியின் நான்கு பருவங்களும் ஒவ்வோர் அவதாரம். முக்கியமான சில பூச்சிகளை அடையாளம் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்குத் தினமும் காலையில் வயலைச் சுற்றி வர வேண்டும். பயிர்களைப் பார்வையிட வேண்டும். அந்த நேரம்தான் பூச்சிகள் அதிகம் உலவும் நேரம். அதேபோல மாலை வேளைகளிலும் பூச்சிகளைப் பார்க்கலாம்.
ஒரு பண்ணை இயற்கை விவசாய பண்ணை என்பதற்குச் சான்றிதழ் பெற வேண்டும். அது அரசாங்கம் அல்லது தனியார் அமைப்புகள் கொடுக்கும் சான்றிதழ். ஆனால், ஒரு பண்ணையில் சிலந்திகள் அதிக எண்ணிக்கையில் இருந்தால் அது இயற்கையே கொடுக்கும் இயற்கை வேளாண்மைச் சான்றிதழ்.”