பசுமை விகடன், வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் இணைந்து ஆகஸ்ட் 27-ம் தேதி, ‘தேக்கு, சந்தனம், செம்மரங்கள்... விற்பனை செய்வது எப்படி?’ என்ற நேரலைப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.
இந்நிகழ்வில் வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தைச் சேர்ந்த வனப் பாதுகாவலர் கதிர்வேல் ஐ.எஃப்.எஸ் கலந்துகொண்டு, விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS
“தனியார் காடுகளில் மரங்களை வெட்ட மாவட்ட அளவிலான குழுவிடம் அனுமதி வாங்க வேண்டும். சந்தன மரங்களை வெட்டத் தமிழ்நாடு சந்தன மரங்கள் விதிகள் 2008, இருப்பு வைக்க விதிகள்-1970, இடம் மாற்றுதலுக்கு விதிகள்-1967 எனப் பல விதிகள் இருக்கின்றன. சந்தன மரங்கள் பயிரிட்டிருக்கும் விவசாயி வெட்டவோ, எடுத்துச் செல்லவோ இணையத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தின் மூலம் மாவட்ட வன அலுவலர் 15 நாள்களுக்குள் நிலத்தில் உள்ள சந்தன மரங்களின் உண்மைத் தன்மையை அறிந்து அடையாளக் குறி இடுவார். ஆய்வு முடித்த பிறகு, 48 மணி நேரத்துக்குள் ஆய்வறிக்கையை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வார். அடுத்த மூன்று நாள்களுக்குள் டிஜிட்டல் முறையில் கையொப்பமிட்ட இறுதி அனுமதிச் சீட்டை மாவட்ட வன அலுவலர் வழங்குவார். அந்த அனுமதிச் சீட்டை உரிமையாளர் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இந்த முழு செயல்பாடும் அதிகபட்சமாக 37 நாள்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். உரிமையாளர் மரத்தை வெட்டி அரசின் மரக்கிடங்குக்கு அனுப்ப வேண்டும். அங்கே தரம் பிரிக்கப்பட்டு விலை நிர்ணயம் செய்யப்படும். கிடைக்கும் விலையில் 80 சதவிகிதம் உரிமையாளருக்கும், 20 சதவிகிதம் வனத்துறைக்கும் செல்லும்.

https://www.facebook.com/189745421100410/videos/338242360638082
அதேபோலச் செம்மரங்கள், தேக்கு, கருங்காலி ஆகிய மரங்களை வெட்டத் தமிழ்நாடு தொழிற்சாலை மரங்கள் பராமரிப்பு விதிகள் 1988 விதிகளைப் பின்பற்ற வேண்டும். வெட்டுவதற்கு அனுமதி தேவையில்லை. ஆனால், வெட்டுவதற்கு முன்னர் 15 நாள் களுக்குள் மாவட்ட வன அலுவலருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். வெட்டிய பிறகு கையிருப்பு வைக்க ஃபார்ம் 4-ஐ பூர்த்திச் செய்து சொத்துரிமை குறியீடு செய்வது அவசியம். வேறு இடங்களுக்குக் கொண்டு செல்ல ஃபார்ம் 2 அல்லது 4-ஐ பூர்த்திச் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விற்பனை செய்வதற்கான நடைமுறைகளையும் ஆன்லைன் மூலமே செய்துவிடலாம்” என்றவர் மேலும் சில கூடுதல் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.