Published:Updated:

மண்ணுக்கு ஏற்ற மரங்கள்..!

நேரலையில் சிவராம் மற்றும் குமார் துரைச்சாமி.
பிரீமியம் ஸ்டோரி
நேரலையில் சிவராம் மற்றும் குமார் துரைச்சாமி.

பயிற்சி

மண்ணுக்கு ஏற்ற மரங்கள்..!

பயிற்சி

Published:Updated:
நேரலையில் சிவராம் மற்றும் குமார் துரைச்சாமி.
பிரீமியம் ஸ்டோரி
நேரலையில் சிவராம் மற்றும் குமார் துரைச்சாமி.
ரடங்கு காலத்தில் விவசாயி களுக்குப் பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறது பசுமை விகடன். அந்த வகையில் செப்டம்பர் 10-ம் தேதி மரம் வளர்ப்பு பயிற்சி நடைபெற்றது. பசுமை விகடன் மற்றும் வனத்துக்குள் திருப்பூர் இணைந்து வழங்கிய இப்பயிற்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

முதலில் பேச்சைத் தொடங்கிய வெற்றி அமைப்பின் தலைவர் சிவராம், “வனத்துக்குள் திருப்பூர் அமைப்புமூலம் திருப்பூர் மாவட்டத்தில் 8.5 லட்சம் மரங்களை வளர்த்து வருகிறோம். பொதுவாக, மரம் நடுவதை நாங்கள் செய்வதில்லை. மரம் வளர்ப்பதைச் செய்து வருகிறோம். விவசாய நிலங்களில் இலவசமாக மரக்கன்றுகளை நடவு செய்து தருகிறோம். ஆரம்பகாலத்தில் மரங்கள் நடவு செய்து, முதல் இரண்டு ஆண்டுகள்வரை தண்ணீர் ஊற்றி வளர்த்துக் கொடுத்தோம்.

தற்போது வேலி, சொட்டுநீர்ப் பாசன வசதியுள்ள விவசாயிகளுக்கு, குழியெடுத்துச் செடிகளை நடவு செய்து தருகிறோம். இதன் மூலமாகத் திருப்பூர் மாவட்டம் முன்பு இருந்ததைவிடப் பசுமையாக மாறியுள்ளது. பல்வேறு சூழலியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பறவைகள், பட்டாம்பூச்சிகள் அதிகரித்துள்ளன. இதைப் போன்று தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளையும் மாற்ற முடியும். அதற்கு முதலில் குழுவாக ஒன்று சேர வேண்டும். அந்தந்த பகுதியில் வளரும் மரங்களை முதல் தேர்வாக வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு மண்ணுக்கு ஏற்ற மரங்கள், அடுத்ததாக வருமானம் தரும் மரங்கள் என அனைத்து வகையான மரங்களையும் வளர்க்கலாம்’’ என்றார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
நேரலையில் சிவராம் மற்றும் குமார் துரைச்சாமி.
நேரலையில் சிவராம் மற்றும் குமார் துரைச்சாமி.

தொடர்ந்து வனத்துக்குள் திருப்பூர் அமைப்பின் திட்ட இயக்குநர் குமார் துரைச்சாமி, வனத்துக்குள் திருப்பூர் அமைப்பு மூலமாகத் திருப்பூர் மாவட்டம் பசுமையான விதம், அதற்காகச் சந்தித்த பிரச்னைகள், மரம் வளர்ப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்துப் பேசினார்.

அடுத்து வாசகர்களின் கேள்விக்குப் பதில் அளித்த சிவராம், வனத்துக்குள் திருப்பூர் அமைப்பு மூலமாகத் திருப்பூர் மாவட்டத்தைப் பசுமையாக்கியதுபோல, தமிழகத்தைப் பசுமையாக்கலாம். வனத்துக்குள் திருப்பூர் அமைப்பின் மூலம் 5 ஆண்டுகளுக்கு மேலாகப் பெற்ற அனுபவங்களை மூலமாக அதைச் சாத்தியமாக்கலாம். இது தொடர்பான ஆலோசனைகள் தேவைப்படுவோர் எங்களை அணுகலாம்’’ என்றார்.