Published:Updated:

இயற்கையும் உழைப்பும் கொடுத்த வெற்றி! - வேளாண் தொழிலில் அசத்தும் தம்பதியர்

மகேஷ் மெல்வின் – ப்ரியா மெல்வின்
பிரீமியம் ஸ்டோரி
மகேஷ் மெல்வின் – ப்ரியா மெல்வின்

தொழில் வளர்ச்சி குறித்துப் பேசும் மகேஷ், “ரசாயன விவசாயம் செய்துகிட்டிருந்த வங்கள்ல, எங்களுடன் இணைய விரும்பிய விவசாயிகளை ஒன்றிணைச்சு விழிப்புணர்வு கொடுத்தோம்.

இயற்கையும் உழைப்பும் கொடுத்த வெற்றி! - வேளாண் தொழிலில் அசத்தும் தம்பதியர்

தொழில் வளர்ச்சி குறித்துப் பேசும் மகேஷ், “ரசாயன விவசாயம் செய்துகிட்டிருந்த வங்கள்ல, எங்களுடன் இணைய விரும்பிய விவசாயிகளை ஒன்றிணைச்சு விழிப்புணர்வு கொடுத்தோம்.

Published:Updated:
மகேஷ் மெல்வின் – ப்ரியா மெல்வின்
பிரீமியம் ஸ்டோரி
மகேஷ் மெல்வின் – ப்ரியா மெல்வின்

பச்சைப்பட்டு போர்த்தியதுபோல, திரும்பிய பக்கமெல்லாம் பசுமை. மலைகளின் அரசியான ஊட்டியில் விளையக்கூடிய மலைப்பயிர்கள் பலவும், தமிழகம் மட்டு மன்றி அண்டை மாநிலங்களின் காய்கறித் தேவைகளையும் பெருமளவில் பூர்த்தி செய்கின்றன. அதிக அளவிலான ரசாயன உரப் பயன்பாடு, விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற சிக்கல்களுக்கு இடம் கொடுக்காமல், நிலையான விற்பனை வாய்ப்பை உறுதிசெய்துள்ள மகேஷ் மெல்வின் – ப்ரியா மெல்வின் தம்பதியர், நீலகிரியில் வேளாண் தொழிலில் அசத்தும் நம்பிக்கைத் தொழில்முனைவோர்.

மாதச் சம்பள வாழ்க்கை முறையில் இருந்து விலகி, இயற்கை விவசாயம் செய்பவர்கள், குறு விவசாயிகளை இயற்கை வேளாண் முறைக்கு மாற்றி, அவர்களிடம் இருந்து விளைபொருள்களைப் பெற்று பெரு நகரங் களுக்கு விற்பனை செய்கின்றனர். குறுகிய காலத்திலேயே வெற்றியை அறுவடை செய் துள்ள இந்தத் தம்பதியர் உடனான பசுமை யான சந்திப்பிலிருந்து...

“எனக்குப் பூர்வீகம் திண்டுக்கல். நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கணவருக்கு விவசாயம்தான் குடும்பத் தொழில். காலேஜ் முடிச்சதும், விவசாயம் சார்ந்த வேலையைச் செய்துகிட்டிருந்தார்.

இயற்கையும் உழைப்பும்
கொடுத்த வெற்றி! - வேளாண் தொழிலில் அசத்தும் தம்பதியர்

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயாவின் பல்வேறு கூட்டங்கள்ல கலந்துகிட்டார். அதுல, கீழ்நோக்கு நாள், மேல்நோக்கு நாள், அமாவாசை, பெளர்ணமினு குறிப்பிட்ட சில நாள்களில் மூலிகைகளைப் பயன்படுத்தி, விதைப்பு மற்றும் நடவு வேலை களை முறைப்படுத்தி செய்யுற ‘பயோ டைனமிக்’ விவசாய முறைகள் பத்தின பயிற்சி களை ஐயாவுடன் இணைந்து கற்றுக்கொடுத் தார். கல்யாணத்துக்குப் பிறகு, நானும் நீலகிரிக்கு வந்துட்டேன். ரெண்டு பேரும் தனியார் வேலைக்குப் போனோம். இந்த நிலையில, சில ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து, இவர் இயற்கை விவசாயம் செஞ்சார்.

எங்களுக்குத் தெரிஞ்ச சிறு, குறு விவசாயிகள் பலரும் ரசாயன விவசாய முறையால் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டாங்க. அவங்கள்ல பலருக்கும், ஆர்கானிக் காய்கறி களுக்கான சந்தை வாய்ப்பு, இயற்கை விவசாயம் பத்தின விழிப்புணர்வு இல்லை. இதனாலேயே விவசாயிகள் பலரும் தங்களோட நிலத்தைக் குத்தகைக்கு விட்டுட்டு, கூலி வேலைக்குப் போக ஆரம்பிச்சாங்க. இதுபோன்ற விவசாயிகளுடன் தொழில்ரீதியா இணைஞ்சு, கூட்டு முயற்சியுடன் வளரலாம்னு முடிவெடுத்தோம்” என்கிற ப்ரியா, ஐ.டி பணியில் இருந்தும் விலகியிருக்கிறார்.

இயற்கையும் உழைப்பும்
கொடுத்த வெற்றி! - வேளாண் தொழிலில் அசத்தும் தம்பதியர்

தொழில் வளர்ச்சி குறித்துப் பேசும் மகேஷ், “ரசாயன விவசாயம் செய்துகிட்டிருந்த வங்கள்ல, எங்களுடன் இணைய விரும்பிய விவசாயிகளை ஒன்றிணைச்சு விழிப்புணர்வு கொடுத்தோம். அவங்க நிலங்களை இயற்கை முறைக்கு மாத்தி, இயற்கை வேளாண்மைக்கான சான்றிதழை வாங்கினோம். ஆரம்பத்துல எல்லா விளைபொருள்களையும் உள்ளூர் மார்க்கெட்டுல விற்பனை செஞ்சோம். உரிய விலை கிடைக்காம பல நேரங்கள்ல நஷ்டத்தை எதிர்கொண்டோம். ரொம்பவே மெனக்கெட்டு வெளியூர் இயற்கை அங்காடிகளுடன் தொழில் நட்பை விரிவுபடுத்தினோம். கடந்த 2015 முதல் தொழில் பயணம் வேகமெடுத்துச்சு.

தாங்களே எல்லா வேலைகளையும் செய்துக்கிற மாதிரி 1 – 2 ஏக்கர் நிலம் வெச் சிருக்கும் குறு விவசாயிகள் மட்டுமே எங்கக் குழுவில் இருக்காங்க. அவங்களுக்கு நாற்றுகள், விதைகளை நாங்களே கொடுத்து, இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பு மற்றும் பயன்படுத்தும் முறைகளையும் சொல்லிக் கொடுப்போம். விதை நடவுல இருந்து அறுவடைவரை வழிகாட்டுவோம். ஒரே பயிரை நம்பியிருக்கும்போது, அறுவடை நேரத்துல விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காம பெரும்பாலான விவசாயிகள் சவால்களைச் சந்திக்கிறாங்க. பல பயிர் சாகுபடி முறையால இந்தச் சிக்கலைத் தவிர்க்கலாம். அதன்படி, ஒரு ஏக்கர் நிலத்துலயே சென்ட் கணக்குல பல பயிர்களையும் சுழற்சி முறையில சாகுபடி செய்ய விவசாயிகளை ஊக்கப்படுத்துவோம். இதனால, மண் வளமும் அதிகரிச்சு, விளைச்சலும் சீராக இருக்கும்.

இயற்கையும் உழைப்பும்
கொடுத்த வெற்றி! - வேளாண் தொழிலில் அசத்தும் தம்பதியர்

அறுவடை நேரத்துல விவசாயிகளின் தோட்டத்துக்குப் போய் நேரடியா விளை பொருள்களைக் கொள்முதல் செய்வோம். கேரட், பீன்ஸ், பீட்ரூட், உருளை, முட்டை கோஸ், காலிஃப்ளவர், முள்ளங்கி, நூல்கோல், செளசெள, பச்சைப் பட்டாணி, பூண்டு, புரொக்கோலி, லெட்யூஸ், செலரி உள்ளிட்ட 17 வகையான காய்கறிகளுடன், ஸ்ட்ராபெர்ரி, அவகாடோ உள்ளிட்ட பல வகையான பழங்களையும் விற்பனை செய்யுறோம். நீலகிரி மாவட் டத்துல அஞ்சு இடங்கள்லயும், கர்நாடக மாநிலத்துல ஓர் இடத்துலயும் எங்களுக்குக் குத்தகை நிலம் இருக்கு. மொத்தமுள்ள 18 ஏக்கர் நிலத்துல, நாங்களும் பல பயிர் சாகுபடி முறையைத்தான் கடைப்பிடிக்கிறோம்” என் கிறார்.

15 பெண்கள் உட்பட 22 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கிறார்கள். பணியாளர் களை ஒருங்கிணைத்து, காய்கறி களை வெளியூருக்கு அனுப்பி விட்டு வந்த ப்ரியா விற்பனை விஷயங்களைப் பகிர்ந்தார்.

இயற்கையும் உழைப்பும்
கொடுத்த வெற்றி! - வேளாண் தொழிலில் அசத்தும் தம்பதியர்

“தற்சமயம் 30 விவசாயிகள் எங்களோட தனிப்பட்ட உழவர்குழுவுல இருக்காங்க. சப்ளை செய்யும் அளவைப் பொறுத்து, எவ்வளவு பரப்பளவுல வெவ்வேறு காய் கறிகளைச் சாகுபடி செய் யணும்னு முன்கூட்டியே விவசாயிகள்கிட்ட சொல்லிடு வோம். அறுவடை முடிஞ்சு அவங்ககிட்ட இருந்து எங்களுக்கு வரும் காய்கறி களைச் சுத்தம் செஞ்சு, தரம் பிரிச்சு, வெவ்வேறு எடை அளவுகள்ல பார்சல் பண்ணி லாரி, ஆம்னி பஸ் போன்ற வாகனங்கள்ல இரவுக்குள் டெலிவரி பண்ணிடுவோம். ஹோல்சேல் விற்பனையிலதான் அதிக கவனம் செலுத்துறோம். சனிக்கிழமை தவிர மற்ற எல்லா நாளும் டெலிவரி செய்வோம். மார்க்கெட் நிலவரத்தைப் பொறுத்து, விவசாயிகளின் உழைப்புக்கான உரிய விலை கொடுத்து விளைபொருள்களைக் கொள்முதல் செய்வோம். எங்க உழைப்புக்கு 20 சதவிகிதம் கூடுதல் விலை வெச்சு, வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யுறோம்” என்கிறார்.

இயற்கையும் உழைப்பும்
கொடுத்த வெற்றி! - வேளாண் தொழிலில் அசத்தும் தம்பதியர்

சென்னை, பெங்களூரு, கொச்சி, ஹைதராபாத், கோயம்புத்தூர், மதுரை, மைசூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலுள்ள இயற்கை அங்காடிகளுக்கு, வாரம்தோறும் சராசரியாக 6,000 கிலோ காய்கறிகள் மற்றும் 1,000 கிலோ பழங்களை விற்பனை செய் கின்றனர். மாதம்தோறும் பல லட்சம் ரூபாய் வர்த்தகம் செய்தும் அசத்துகின்றனர்.

“பருவநிலை மாற்றம், விலங்குகள் தொந்தரவு, டீசல் விலையேற்றம்னு தொடர் சிக்கல்கள் இருந்தாலும்கூட, இதுக்கெல்லாம் தீர்வு காண்பதே சுவாரஸ்யமான அனுபவமா மாறிடுச்சு. தரமான பொருள்களை உற்பத்தி செய்யுறது, சரியான விலை நிர்ணயம், நிலையான சந்தை வாய்ப்புகளை உறுதி செஞ்சா போதும். எந்த பிசினஸிலும் வெற்றி பெறலாம்”

- வெற்றி அனுபவத்துடன், நஞ்சில்லாத வேளாண்மைக்கான முக்கியத்துவத்தையும் அழுத்தமாகப் பகிர்கின்றனர் வெற்றித் தம்பதியர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மகிழ்ச்சியும் மனநிறைவும்!

இந்தத் தம்பதியரின் குழுவில் இடம்பெற்றுள்ள பெண் விவசாயியான மினி எட்வின், “லவுடேல் பகுதியில எங்களுக்கு ரெண்டு ஏக்கர் நிலம் இருக்கு. ரசாயன விவசாயத்தால ரொம்பவே நொந்துபோன நிலையில, கடந்த ஏழு வருஷமா இவங்க குழுவுல நானும் என் கணவரும் இருக் கோம். கேரட், உருளை, பீட்ரூட்னு எப்போதும் அதிக தேவை இருக்குற காய்கறி களைப் பயிரிட்டு, மனநிறைவுடன் வேளாண்மை செஞ் சுட்டு இருக்கோம்” என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism