Published:Updated:

நீலகிரி: லாக்டௌன் பதற்றம்... அவசரகதியில் அறுவடையைத் தொடங்கிய விவசாயிகள்!

carrot harvesting
carrot harvesting

கொரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்க கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்படலாம் என்ற அச்சத்தால் அவசரகதியில் காய்கறி அறுவடையில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தில் தொழில் முடக்கம் ஏற்பட்டு பல்வேறு தரப்பினரும் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிர்த்தனர்.

vegetable
vegetable

அதிலும் குறிப்பாக விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருள்களை சந்தைக்கு எடுத்துச் செல்ல முடியாமல் கால்நடைகளுக்கு உணவாக ரோட்டில் கொட்டினர். நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகள் விளைவித்த கேரட், பீட்ரூட் போன்றவற்றை இலவசமாக மக்களுக்கு வழங்கினர். எஞ்சியவற்றை ஆற்றிலும் ரோட்டிலும் கொட்டினர்.

கொரோனா பெருந்தொற்று பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில், மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. முழு ஊரடங்கு வரும் என்ற அச்சத்தால் விவசாயிகள் அவசரகதியில் அறுவடையில் ஈடுபட்டு வருகின்றனர்.

carrot washing
carrot washing

இது குறித்து நம்மிடம் பேசிய கேரட் விவசாயி பரமசிவம், "ரெண்டு வாரத்துக்கு முன்னாடியே பூண்டு‌ விலை சரிய ஆரம்பிச்சது. மறுபடியும் லாக்டௌன் வருமோங்குற பயம் எல்லாத்துக்கிட்டயும் இருக்கு. பத்து இருபது நாள்‌ கழிச்சு அறுவடை செய்ய வேண்டிய கேரட்ட இப்போவே அறுவடை செய்றோம். ஒரு நாளைக்கு 5 டன் கேரட் போக வேண்டிய எடுத்துக்கு 12 டன் கேரட் போகுது. பீட்ரூட், டர்னிப், நூல்கோல் என எல்லா காய்கறிக்கும் இதே சிக்கல்தான். கோயம்பேடு மார்கெட்ல சில்லறை விற்பனையத்‌ தடை செஞ்சது இங்க வரைக்கும் பாதிப்பு ஏற்படுத்தியிருக்கு. கெடைக்கிற விலைக்கு போனா போதும். வேற வழியே இல்லாம அவசர அவசரமா அறுவடை செய்றோம்" என்றார்.

இது குறித்து ஊட்டியைச் மலைகாய்கறி வியாபாரி ஒருவர், "இந்த ஒரு வாரமா வரத்து அதிகமாவே இருக்கு. உரிய பருவத்தை எட்டும் முன்னே சிலர் அறுவடை செஞ்சி கொண்டுவரத பாக்க முடியுது‌" என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு