Published:Updated:

​பழ​நி​; வெடி மருந்து தொழிற்சாலை அமை​க்க எதிர்ப்பு; விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு!

விவசாயிகள் குறைதீர் கூட்டம்
News
விவசாயிகள் குறைதீர் கூட்டம்

​தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டால் குறைந்தது 10 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு பாதிப்புகள் உண்டாகும் என மா​​சு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அதனை கருத்தில் கொண்டாவது, விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் வெடி மருந்து தொழிற்சாலை அமைவதை தடுக்க வேண்டும்.

​பழ​நி​; வெடி மருந்து தொழிற்சாலை அமை​க்க எதிர்ப்பு; விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு!

​தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டால் குறைந்தது 10 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு பாதிப்புகள் உண்டாகும் என மா​​சு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அதனை கருத்தில் கொண்டாவது, விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் வெடி மருந்து தொழிற்சாலை அமைவதை தடுக்க வேண்டும்.

Published:Updated:
விவசாயிகள் குறைதீர் கூட்டம்
News
விவசாயிகள் குறைதீர் கூட்டம்

​திண்டுக்கல் மாவட்டம் பழனி ஐவர் மலை அடிவாரத்தில் தனியார் நிறுவனம் வெடி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை ​அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதனால் பழநி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் பாதிக்கும் என்பதால் தொழிற்சாலை அமைக்க தடைவிதிக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் பேசிய கலெக்டர் விசாகன்
கூட்டத்தில் பேசிய கலெக்டர் விசாகன்

​கூட்டத்தில் பேசிய விவசாயிகள், வெடி மருந்து தொழிற்சாலைக்கு மூலக்கூறுகள் வெளி மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு வெடி மருந்து தயார் செய்யப்ப​ட உள்ளதாகத் ​தெரி​கிறது. இங்கு ​​தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டால் குறைந்தது 10 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு பாதிப்புகள் உண்டாகும் என மா​​சு கட்டுப்பாட்டு வாரியம் தனது அறிக்கையில் அறிவித்துள்ளது. அதனை கருத்தில் கொண்டாவது, விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் வெடி மருந்து தொழிற்சாலை அமைவதை தடுக்க வேண்டும். 

​இ​ல்லையெனில் 45 கிராமங்கள், அமராவதிநதி, சண்முகா நதி ஆகிய நீர்நிலைகளும் பாழாகிப் போய்விடும். 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்புக்குள்ளாகிவிடும். இதனை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் வெடி மருந்து தொழிற்சாலை நிறுவுவதை தடை செய்ய வேண்டும். இல்லையெனில் உண்ணாவிரத போராட்டம், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்து​வோம். 

விவசாயிகள்
விவசாயிகள்

மேலும் ​சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றளவில் காடு அழிப்பு ஏற்பட்டு விவசாய நிலங்கள் பாலைவனமாக மாறும் விவசாயிகள் வாழ்வாதாரம் அழிந்து போகும் நிலத்தடி நீர் அதிகப்படியாக உறிஞ்சுவதாலும், கழிவுநீர் கலப்பதாலும் குடிநீர் மற்றும் விவசாய கிணறுகளும் பாதிக்கபடும். சல்பர் டை ஆக்சைடு போன்ற நச்சு வாயு வெளியேற்றத்தினால் அமில மழை பொழிவு ஏற்பட்டு ,மண் மலட்டுத்தன்மை ஏற்பட்டு, மண்வளம் அழியக்கூடிய சூழல் உள்ளது. நைட்ரஜன் டை ஆக்சைடு வளிமண்டலத்தை மாசுபடுத்துவதோடு இங்கு விளைவிக்கப்படும் நச்சுத்தன்மை வாய்ந்த விவசாய விளைவுகள் வேறு பகுதி மக்களையும் பாதிப்பதோடு பயிர்கள் வளர்ச்சியையும் பூப்பறிக்கும் தன்மையையும் பாதித்து விவசாயத்தை முற்றிலும் அழித்து விடும். 

​தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் 1100 ஆண்டுகள் பழமையான சமணர் கோவில் வரலாறு சின்னங்களும் கடுமையான பாதிப்பில் சிக்கிவிடும். ஆலையில் வெடி மருந்து கேட்டங்கில் டன் கணக்கான வெடிமந்து சேமிக்கப்படுவதாக பேரிடர் காலங்களில் பேராபத்து வர வாய்ப்புள்ளது. நைட்ரிக் அமிலம் பொன்ட்டா எரித்திரட்டால் போன்ற மூலப் பொருட்கள் அதிக அளவில் கண்டெய்னர்களில் கொண்டு வரும்போது காற்று மாசு ஏற்படுவதோடு விபத்து ஏற்பட்டால் அதிக பாதிப்புகள் ஏற்படும்.

பழநி
பழநி

பொது மக்களுக்கு சுவாசப் பிரச்சினைகள் கருத்தரிப்பின்மை கேன்சர் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு எனவும் உடனடியாக தொழிற்சாலைக்கு தடை விதிக்க வேண்டும் என்றனர். விவசாயிகள் கோரிக்கை குறித்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.