Published:Updated:

யூரியா தட்டுப்பாட்டால் தவிக்கும் விவசாயிகள்; இழப்பைத் தடுக்க மாற்றுவழி கூறும் இயற்கை விவசாயி!

டெல்டா

``சாகுபடி பரப்பைக் கணக்கிட்டு இதுக்குத் தேவையான உரங்களை போதுமான அளவுக்கு முன்கூட்டியே ஏற்பாடு செய்து வைக்க வேண்டியது, தமிழக வேளாண்மைத்துறை அதிகாரிகளின் கடமை. ஆனால்..."

யூரியா தட்டுப்பாட்டால் தவிக்கும் விவசாயிகள்; இழப்பைத் தடுக்க மாற்றுவழி கூறும் இயற்கை விவசாயி!

``சாகுபடி பரப்பைக் கணக்கிட்டு இதுக்குத் தேவையான உரங்களை போதுமான அளவுக்கு முன்கூட்டியே ஏற்பாடு செய்து வைக்க வேண்டியது, தமிழக வேளாண்மைத்துறை அதிகாரிகளின் கடமை. ஆனால்..."

Published:Updated:
டெல்டா

தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் யூரியா உரத்துக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதிகளில் குறுவை நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளார்கள். உரிய நேரத்தில் உரம் போடவில்லையென்றால், நெற்பயிரின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, மகசூல் இழப்பு ஏற்படும் எனக் கவலை தெரிவிக்கிறார்கள். இந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதால், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி பணிகளில் இப்பகுதி விவசாயிகள் மிகுந்த உற்சாகத்தோடு ஈடுபட்டார்கள்.

விவசாயி
விவசாயி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுமார் மூன்றரை லட்சம் ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில்தான் தற்போது டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் யூரியா தட்டுப்பாடு நிலவுவதால் இப்பகுதி விவசாயிகள், மன உளைச்சல் அடைந்திருக்கிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் துணைச் செயலாளர் சுகுமாறன், ``வேளாண் விரிவாக்க மையம், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் எதுலயுமே கடந்த 20 - 25 நாள்களாகவே யூரியா கிடைக்கலை. தனியார் உரக்கடைகள்லயாவது கிடைக்குதானு பார்ப்போம்னு அங்கயும் விவசாயிகள் அலைஞ்சிப் பார்த்துட்டோம். அங்கயும் இதே நிலைமைதான். கோடை, குறுவை, சம்பா, தாளடி எந்தப் பருவமாக இருந்தாலும், சாகுபடி பரப்பைக் கணக்கிட்டு இதுக்கு தேவையான உரங்களை போதுமான அளவுக்கு முன்கூட்டியே ஏற்பாடு செஞ்சி வைக்க வேண்டியது, தமிழக வேளாண்மைத்துறை அதிகாரிகளின் கடமை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால், அலட்சியமாக இருந்துட்டாங்க. இதனால் விவசாயிகள்தான் சிரமப்பட வேண்டியதா இருக்கு. நாற்று நடவு செஞ்ச 15-ம் நாள் களையெடுத்துட்டு, யூரியா கொடுத்தாகணும். அதே மாதிரி 35-ம் நாள் இரண்டாம் களையெடுத்து, மறுபடியும் யூரியா கொடுத்தாகணும். குறுவை நெல் ரகங்கள் குறைஞ்ச நாள் வயசுடையதுங்கறதுனால, எப்படிப் பார்த்தாலும் அதிகபட்சம் 50 நாள்களுக்குள்ளார இரண்டு முறை மேலுரமாக யூரியா கொடுத்தாகணும். ஆனால், இதுக்கு தட்டுப்பாடு நிலவுறதுனால, உரிய நேரத்துல உரம் கொடுக்க முடியாமல் விவசாயிகள் திண்டாடிக்கிட்டு இருக்கோம். தமிழக அரசு அறிவிச்ச குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டத்துல பயன் அடையக்கூடிய விவசாயிகளுக்கு, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள்ல யூரியா கொடுத்தாகணும். ஆனால் இதுமாதிரியான விவசாயிகளுக்கே கூட யூரியா கிடைக்கலை.

சுகுமாறன்
சுகுமாறன்

தமிழக வேளாண்மைத்துறை அதிகாரிகள் இதுக்கு மேலயும் காலதாமதம் செய்யாமல், டெல்டா மாவட்டங்கள்ல உடனடியாக, யூரியா கிடைக்க, ஏற்பாடு செய்யணும். இல்லைனா, பயிர்களோட வளர்ச்சி குன்றிப்போயி, இந்த ஆண்டு விவசாயிகளுக்கு கடுமையான மகசூல் இழப்பு ஏற்படும்’’ எனத் தெரிவித்தார்.

யூரியா தட்டுப்பாட்டுக்கான காரணம் குறித்து வேளாண்மைத்துறை அலுவலர்களிடம் விசாரித்தபோது, ``மத்திய அரசுதான், ஒவ்வொரு மாநிலங்களுக்கும் தேவையான உரங்களை ஒதுக்கீடு செய்யும். இந்த ஆண்டு தமிழ்நாட்டுக்கு போதுமான அளவு யூரியா ஒதுக்கீடு செய்யப்படலை. உரிய நேரத்துலயும் வழங்கப்படலை. டெல்டா மாவட்டங்கள்ல இந்த ஆண்டு குறுவை சாகுபடி பரப்பு அதிகரிச்சிருக்கு. இதற்கேற்ப, திட்டமிட்டு, தமிழக அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, தேவையாள அளவு யூரியாவை, சரியான காலத்துல வாங்கியிருக்கணும். ஆனால், கவனக்குறைவாக இருந்துட்டாங்க’’ எனத் தெரிவித்தார்கள்.

யூரியா தட்டுப்பாட்டால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, தஞ்சை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ஜஸ்டினிடம் நாம் பேசியபோது, ``ரசாயன உரங்கள், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இவை வந்து சேருவதில் சற்றுத் தாமதம் ஏற்பட்டதாலும், வடமாநிலங்களில் ஏற்பட்ட இயற்கை இடர்ப்பாடுகளாலும், கடந்த சில நாள்களாக டெல்டா மாவட்டங்களில் யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டது. இன்னும் சில நாள்களில் இப்பிரச்னை தீர்ந்துவிடும்’’ என்றார்.

யூரியா கிடைக்கும் வரையிலும் நெற்பயிர்களால் காத்திருக்க முடியாது. அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு சாகுபடி பருவத்தின் போதும், விவசாயிகள் யூரியாவையே சார்ந்திருக்கவும் முடியாது. இதற்கு என்னதான் மாற்று?

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தைச் சேந்த முன்னோடி இயற்கை விவசாயி ஸ்ரீராமிடம் இது குறித்து நாம் கேட்டபோது, ``பயிர்களுக்கு தேவையான நைட்ரஜன் சத்து கொடுக்கத்தான் யூரியா போடுறாங்க. இதற்கு மாற்றாக, 10 கிலோ ஈர சாணத்தோடு (மாடு புதிதாகப் போட்ட சாணம்) 100 மில்லி புங்கெண்ணெய்யைக் கலந்து, ஒரு சணல் சாக்கில் கட்டி, அதை 100 லிட்டர் தண்ணீர் உள்ள பிளாஸ்டிக் கேனில் இறக்கி, நன்கு குலுக்க வேண்டும்.

ஸ்ரீராம்
ஸ்ரீராம்

சாணம் தண்ணீரில் கரைந்துவிடும். கசடுகள் மட்டும் சாக்கில் தங்கிவிடும். தெளிந்த சாணல் கரைசலை தெளிப்பான் மூலம், பயிர்களுக்கு தெளிக்க வேண்டும். இதை நெற்பயிரைப் பார்த்தவாறு தெளிக்கக் கூடாது. வானத்தை நோக்கி தெளிக்க வேண்டும். சாணக் கரைசலில் உள்ள நுண்ணூயிரிகள், காற்றில் உள்ள நைட்ரஜனை, கிரகித்துக் கொண்டு, வேர்களின் மூலமாகப் பயிர்களுக்கு பலன் அளிக்கும். மேற்கொண்ட அளவு ஒரு ஏக்கருக்கு போதுமானது. 15 நாள்களுக்கு ஒரு முறை இது போல் தெளிக்க வேண்டும். யூரியா தட்டுப்பாடு இருப்பதால் மட்டும் அல்ல, விவசாயிகள் எப்போதுமே, யூரியாவுக்கு மாற்றாக இதுபோல் சாணக்கரைசல் தயார் செய்து கொடுப்பது மிகவும் சிறப்பானது. பயிர் செழிப்பாக வளர்வதைக் கண்கூடாகப் பார்க்கலாம். எந்த மாட்டுச் சாணமாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், நாட்டுப் பசு மாட்டு சாணமாக இருந்தால், விரைவாக அதிகமான பலன் கிடைக்கும்’’ என்றார்.