Published:Updated:

`புளியங்குடி’ கோமதிநாயகம்: ரசாயன விவசாயிகளை இயற்கை விவசாயத்துக்கு மாற்றிய மாமனிதர்!

கோமதிநாயகம்

`விவசாய சேவா அமைப்பு’ என்ற அமைப்பைத் துவக்கி அதில் புளியங்குடியைச் சேர்ந்த விவசாயிகளை உறுப்பினராக சேர்த்தார். `தற்சார்பு விவசாயத்தை முழு மூச்சாகக் கொண்டு விவசாயத்தை முன்னெடுக்க வேண்டும்’ என வலியுறுத்தினார்.

`புளியங்குடி’ கோமதிநாயகம்: ரசாயன விவசாயிகளை இயற்கை விவசாயத்துக்கு மாற்றிய மாமனிதர்!

`விவசாய சேவா அமைப்பு’ என்ற அமைப்பைத் துவக்கி அதில் புளியங்குடியைச் சேர்ந்த விவசாயிகளை உறுப்பினராக சேர்த்தார். `தற்சார்பு விவசாயத்தை முழு மூச்சாகக் கொண்டு விவசாயத்தை முன்னெடுக்க வேண்டும்’ என வலியுறுத்தினார்.

Published:Updated:
கோமதிநாயகம்

தென் மாவட்டங்களில் இயற்கை விவசாயத்தை பரப்பி வந்ததுடன், நூற்றுக்கணக்கான ரசாயன விவசாயிகளை இயற்கை விவசாயத்தின் பாதைக்குத் திருப்பி, தற்சார்பு விவசாயத்தை கற்றுக் கொடுத்த `முன்னோடி இயற்கை விவசாயி’ புளியங்குடி கோமதிநககம் உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார்.

திருநெல்வேலியில் இருந்து பிரிக்கப்பட்ட தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகிலுள்ள புளியங்குடியைச் சேர்ந்தவர் கோமதிநாயகம். இவர், ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் மட்டுமல்ல, முன்னோடி இயற்கை விவசாயியும் கூட. `வீதியெங்கும் சோலை' என்ற திட்டத்தை ஏற்படுத்தி வனத்துறை, ரோட்டரி சங்கங்களின் உதவியுடன் புழுதி பறக்கின்ற ஊராக இருந்த புளியங்குடி நகராட்சி பகுதிக்குட்பட்ட சாலைகளின் இரு புறங்களிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்களின் ஒத்துழைப்பினால் ஆண்டுக்கு 5,000 மரக்கன்றுகள் வீதம் கடந்த 11 ஆண்டுகளில் 55,000 மரக்கன்றுகளை நட்டு பராமரித்தார்.

அத்துடன், ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் மரக்கன்று நட்டுப் பராமரிக்க வேண்டும் என்று கூறி, வீடு வீடாகச் சென்று மரக்கன்றுகளையும் கொடுத்தவர். இன்று புளியங்குடி நகரெங்கும் தென்றல் காற்று வீசுகிறதென்றால், அதற்கு இவரின் தூண்டுதலே காரணம்.

விவசாயம் கற்க வந்தவர்களுடன் கோமதிநாயகம்
விவசாயம் கற்க வந்தவர்களுடன் கோமதிநாயகம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1975-ல் `விவசாய சேவா அமைப்பு’ என்ற அமைப்பைத் துவக்கி அதில் புளியங்குடியைச் சேர்ந்த விவசாயிகளை உறுப்பினராகச் சேர்த்தார். ``தற்சார்பு விவசாயத்தை முழு மூச்சாகக் கொண்டு விவசாயத்தை முன்னெடுக்க வேண்டும்"என வலியுறுத்தினார். தொடர்ந்து, மண் வள மேம்பாடு, இயற்கை இடுபொருள் தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்புகள் எடுத்ததுடன், நேரடிப் பண்ணைப் பார்வையிடலுக்காக பல பண்ணைகளுக்கும் விவசாயிகளை அழைத்துச் சென்று அங்கும் செயல்வழியாகக் கற்பித்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த சேவா அமைப்பில், சொட்டுநீர் அமைப்பு, உழவுக்கருவிகள், மின்மோட்டார், ஆயில் இன்ஜின் பழுதுபார்ப்பு ஆகியவற்றிலும் விவசாயிகள் தற்சார்பு நிலையைக் கடைப்பிடிக்க பயிற்சி அளிக்கப்பட்டது. விவசாயிகளுக்குத் தேவையான நிதி ஆதாரத்தை சுயநிறைவுடன் வட்டியில்லாக் கடனாகப் பெறும் வகையில் 100 உறுப்பினர்களாகக் கொண்ட தனித்தனி குழுக்களை ஏற்படுத்தி சீட்டு நிர்வாகமும் ஏற்படுத்தப்பட்டு நடந்து வருகிறது.

கோமதிநாயகம் குறித்து புளியங்குடி அந்தோணிசாமி கூறுகையில், ``அண்ணாச்சி, பள்ளி ஆசிரியர் என்ற போதிலும் தன்னை ஒரு விவசாயி என்றே காட்டிக் கொள்வார். பள்ளி நேரம் முடிந்தும், விடுமுறை நாட்களிலும் அவரது தென்னந்தோப்பில் தலையில் தலைப்பாகையைக் கட்டிக்கிட்டு விவசாய வேலைகளைத்தான் செஞ்சிக்கிட்டிருப்பார்.

அந்தோணிசாமி (நடுவில் பச்சைத்துண்டு போட்டிருப்பவர்),
அந்தோணிசாமி (நடுவில் பச்சைத்துண்டு போட்டிருப்பவர்),

புளியங்குடியில் துவக்கப்பட்ட `விவசாய சேவா அமைப்பு’ மூலம் தமிழ்நாட்டு சமூக ஆர்வலர்கள், இயற்கை விவசாயத் தொழில் நுட்ப வல்லுனர்கள், வனத்துறை, தோட்டக்கலைத்துறை, நறுமணப்பொருள் வாரியம் சார்ந்த வல்லுனர்களை புளியங்குடிக்கு வரவழைத்து உரையாற்ற வைத்திருக்கிறார் கோமதி நாயகம்.

விவசாயிகள் பிரச்னைகள் மட்டுமல்ல, ஊர் சார்ந்த பிரச்னைகளையும் வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சித்தலைவர் என சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வு வாங்கித் தந்ததுண்டு. ``பிரச்னையை ஐயாக்கிட்ட சொல்லுவோம். நிச்சயம் தீர்வு கிடைக்கும்" என, ஊர்மக்கள் சொல்லும் அளவுக்கு உயர்ந்தவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புளியங்குடியிலிருந்து மேற்குத்தொடர்ச்சி மலை வரை பொதுப்பணித்துறை உதவியுடன் விவசாய சேவா அமைப்பின் முயற்சியால் 5 கி.மீ தூரம் சாலை அமைக்கப்பட்டது. இது வேளாண் விளைபொருள் போக்குவரத்துக்கு உதவியுள்ளது. அதேபோல, விவசாயிகளின் தோட்டங்களுக்குச் சென்று வரும் வகையில் 21 கி.மீ. தூரம் சாலை அமைக்கவும் உறுதுணையாக இருந்தார். `பாரம்பர்ய ரக நெல்லைதான் சாகுபடி செய்ய வேண்டும்' என விவசாயிகள் மத்தியில் எடுத்துரைத்ததுடன் அதற்கான விதை நெல்லையும் கொடுத்தார்.

கலந்துரையாடல்
கலந்துரையாடல்

அறுவடை செய்த நெல்லை நெல்லாக விற்பனை செய்யாமல், அரிசியாகவும், அவலாகவும் மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய வலியுறுத்தினார். நெல்லுடன், `தங்கப்பழம்’ எனச் சொல்லப்படும் எலுமிச்சையை இயற்கை முறையில் சாகுபடி செய்யவும் ஊக்குவித்தவர். எந்த ஊரில் இருந்து நெல் ரகத்தில் எந்த ரகத்தை எந்த விவசாயி கேட்டாலும் தன் கைவசம் இல்லாவிட்டாலும், பிற விவசாயிகளிடம் பெற்று அனுப்பி வைப்பார். புளியங்குடி சுற்று வட்டாரம் மட்டுமில்லாமல் தென் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகளை இயற்கைப் பாதைக்கு அழைத்து வந்தவர் அவர். அவரின் இழப்பு எங்களைப் போன்றோருக்குப் பேரிழப்பு” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism