Published:Updated:

இயற்கை வேளாண்மை : 4 - மகசூலைக் கூட்ட உதவும் பசுந்தாள் உரம் + தொழுவுரம்!

நரிப் பயறு
பிரீமியம் ஸ்டோரி
நரிப் பயறு

ஆய்வுப் பார்வையும் அறிவியல் உண்மையும்!

இயற்கை வேளாண்மை : 4 - மகசூலைக் கூட்ட உதவும் பசுந்தாள் உரம் + தொழுவுரம்!

ஆய்வுப் பார்வையும் அறிவியல் உண்மையும்!

Published:Updated:
நரிப் பயறு
பிரீமியம் ஸ்டோரி
நரிப் பயறு
யற்கை விவசாயமும் அறிவியல் அடிப்படையில் உருவானதுதான். அதைப் புரிந்துகொண்டு செயல்படுத்தினால், அட்சய பாத்திரமாகவே பயன்படும். இயற்கை விவசாயத்தை அறிவியல் பார்வையில் அலசுகிறது இந்தத் தொடர்...

மட்கிய அங்கக உரம்

மண்ணின் உயிர்த் தன்மையைப் பாதுகாக்க, வேதியியல் அல்லாத இயற்கைவழியில் நன்கு மட்கவைக்கப்பட்டு வழங்கப்படும் அனைத்து உரங்களும் மட்கிய அங்கக உரங்கள்தான். மண்ணின் வளத்தை அதிகரிக்கும் பணியில் இவை முக்கியப் பங்காற்றுகின்றன. அதனால் இந்த உரத்தை `கறுப்புத் தங்கம்’ என்கிறார்கள். அங்கக உரங்களில் அடிப்படையானது பசுந்தாள் உரம்.

இயற்கை வேளாண்மை
இயற்கை வேளாண்மை

பசுந்தாள் உரம்

பசுந்தாள் உரங்களை மண்ணில் இடும்போது இலைகள் மட்கி, மண்ணில் கலந்து உரமாகின்றன. இதனால் மண்ணின் இறுக்கம் குறைகிறது. மண்ணில் வாழக்கூடிய நன்மை செய்யும் நுண்ணுயிர்களுக்கு பசுந்தாள் உரம் தன்னை உணவாகக் கொடுத்து உரமாகவும் மாறுகிறது. நன்கு மட்கிய நிலையில் இடப்படும் இந்த உரம் மண்ணின் பௌதிக, வேதியியல், உயிரியல் கட்டமைப்புகளைச் சரிசெய்கிறது. மண்ணின் துகள்களுக்கு இடையேயுள்ள இடைவெளியை அதிகரித்துக் கொடுக்கிறது. இதனால் மண்ணுக்குள் காற்றோட்டம் நன்றாக இருக்கும். மண்ணில் நடக்கும் வேதியியல் மாற்றங்களுக்கான சக்தியையும் மட்கிய இந்தப் பசுந்தாள் உரங்கள்தான் நுண்ணுயிர்களுக்குக் கொடுக்கின்றன. எனவே, பசுந்தாள் உரங்களை நிலத்தில் கட்டாயம் இட வேண்டும். பசுந்தாள் உரங்களை இட்ட பிறகுதான் தொழுவுரத்தைப் பற்றி யோசிக்க வேண்டும். மாட்டுச் சாண உரங்கள் மண்ணில் சிறந்த பலனைக் கொடுக்க வேண்டுமென்றால், அந்த மண் பசுந்தாள் உரம் இடப்பட்ட மண்ணாக இருக்க வேண்டும்.

இயற்கை வேளாண்மை
இயற்கை வேளாண்மை

நெல் நடவுக்கு முன்னதாக சணப்பை, மற்ற பயிர்களுக்கு முன்பாகக் கொழிஞ்சி எனப் பசுந்தாள் உரங்களை விளையவைத்து மடக்கி உழவு செய்யும் முறை பாரம்பர்யமாகத் தமிழர்கள் கையாண்ட முறை. இன்றைக்குக் கொழிஞ்சி என்ற அற்புதமான இயற்கை உரக்கிடங்கைப் பற்றி விவசாயிகளுக்குத் தெரிந்திருந்தாலும், அதைப் பயன்படுத்துவோர் மிகக் குறைவு. `பசுந்தாள் உரங்களின் மகுடம் கொழிஞ்சி’ என்று சொல்லலாம். இதுதான் மண்ணில் நுண்ணுயிர் பெருக்கத்துக்கான மண் கட்டமைப்பை உருவாக்கும் கிரியா ஊக்கி.

நாம் இடப்போகும் தொழுவுரம் உள்ளிட்ட இயற்கை உரங்கள் அனைத்தும் சிறந்த வீரர்கள்தான். நிச்சயம் போட்டியில் வெற்றி பெறுவார்கள். ஆனால், அவர்களை ஊக்கப்படுத்த ஒரு பயிற்றுநர் வேண்டுமல்லவா... அந்தப் பயிற்றுநர் வேலையைத்தான் பசுந்தாள் உரங்கள் செய்கின்றன. மண்ணில் இடும் அத்தனை இடுபொருள்களையும் பயிர் எடுத்துக்கொள்ளும் வகையில் நுண்ணுயிர்களால் வேதியியல் செயல்பாடு நடக்கும். அதற்காக நுண்ணுயிர்களை ஊக்குவிக்கும் பணியைப் பசுந்தாள் உரங்கள் தொழுவுரத்துடன் செய்கின்றன. எனவே, `இயற்கை விவசாயத்தின் அடிப்படை பசுந்தாள் உரங்கள்’ என்பதை மறக்கக் கூடாது.

`பசுந்தாள் உரங்களின் மகுடம் கொழிஞ்சி’ என்று சொல்லலாம். மட்கவைத்துத் தொழு உரமாகப் பயன்படுத்தினால்தான் பயிருக்குத் தகுந்த சத்துகளாக மாறும்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பசுந்தாள் உரம்தான் முதல்படி

பஞ்சகவ்யா, மாட்டுச்சாண உரம், அமுதக்கரைசல் போன்ற இடுபொருள்களை மட்டும் பயன்படுத்திவிட்டு, `நானும் ஓர் இயற்கை விவசாயி’ என்று சொல்லிக்கொள்வதில் அர்த்தமில்லை. ஒரு செயலை அதன் அடிப்படையிலிருந்து செய்தால்தான் அதன் முழுமையான பலன் கிடைக்கும். நம் முன்னோர்கள் பண்டைக்காலத்தில் பசுந்தாள் உரங்கள் இன்றி, எந்த ஒரு வேளாண் முறையையும் அனுமதித்ததில்லை. இயற்கை விவசாயத்தின் அடிப்படை அஸ்திவாரம் பசுந்தாள் உரம். இன்றைக்கு அஸ்திவாரம் இல்லாமலேயே நம்மில் பலர் கட்டடம் எழுப்பிக்கொண்டிருக்கிறோம். சில மாதங்களுக்குப் பிறகு, `கட்டடம் சரியில்லை விழுந்துவிட்டது’ என்று புகார் கூறுகிறோம். ஆனால் அஸ்திவாரமே இல்லாமல் கட்டடம் கட்டியது யார் தவறு? ஒன்றாம் வகுப்பில் ஆரம்பித்துதான் பட்டப் படிப்பை முடிக்க முடியும். ஒருவருக்கு நன்றாக விவரம் தெரியும் என்பதற்காக, ஒன்றாம் வகுப்புகூடப் படித்திராத அவர், நேரடியாகப் பத்தாம் வகுப்பில் இணைய முடியாது அல்லவா... அப்படித்தான் இயற்கை விவசாயமும். காதால் கேட்பது, பார்ப்பதை வைத்து விவசாயம் செய்து இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவது வருமான இழப்பில் கொண்டுபோய்விடும். ஆனால் உண்மையில், முறையான செயல்பாடுகள் மட்டும்தான் ஒரு பண்ணையை முழுமையான இயற்கை விவசாயப் பண்ணையாக மாற்றும். ஆக, ஒரு நிலத்தை இயற்கை விவசாய நிலமாக மாற்றுவதற்கு முதல்படி, பலதானிய விதைப்பு போன்ற பசுந்தாள் உரங்களை விதைத்து, அவற்றை மடக்கி உழுது மண்ணுக்குள் செலுத்துவதுதான்.

இயற்கை வேளாண்மை : 4 - மகசூலைக் கூட்ட உதவும் பசுந்தாள் உரம் + தொழுவுரம்!

சணப்பு, தக்கைப் பூண்டு, பில்லிப் பயறு, கொழிஞ்சி, நரிப் பயறு போன்றவை பசுந்தாள் உரங்கள். மண்ணில் வளர்த்து மடக்கி உழவு செய்வதன் மூலம் உரமாக மாறும். நிலத்தில் ஏற்கெனவே இருக்கும் சில தாவரங்களின் இலை தழைகளையும் இப்படிப் பயன்படுத்தலாம். உதாரணமாக, அகத்தி, கிளரிசீடியா, சூபாபுல் போன்றவை. அவை `பசுந்தழை உரங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. கடலைக்கொடி, உளுந்துச் செடி போன்றவற்றையும் பசுந்தழை உரங்களாகப் பயன்படுத்தலாம். அவற்றிலிருந்து ஒரு மகசூலை எடுத்துக்கொண்டு அதை உரமாக்கலாம்.

எதுவுமே கிடைக்காவிட்டாலும், பார்த்தீனியம், சாரணை உள்ளிட்ட பல களைச் செடிகளையும் அறுகு போன்ற புல் வகைகளையும் பசுந்தழை உரமாகப் பயன்படுத்தலாம். பசுந்தாள், பசுந்தழை உரங்களைப் பயன்படுத்துவதால் மண்ணிலுள்ள தழைச்சத்து 2 முதல் 3.26 சதவிகிதம் மண்ணில் சேர்கிறது. பாஸ்பரஸ் (மணிச்சத்து) 0.5 முதல் 6 சதவிகிதம் அதிகரிக்கிறது. பொட்டாசியம் (சாம்பல் சத்து) 1 முதல் 2 சதவிகிதம் அதிகரிக்கிறது. பசுந்தாள் பயிர்களின் ஆயுட்காலம் 60 நாள்கள்.

எனவே, பசுந்தாள் உரங்களை 40 முதல் 60 நாள்களுக்குள் மடக்கி உழவு செய்ய வேண்டும். ஒரு ஹெக்டேரில் பசுந்தாள் உரங்களை விதைத்தால் 20 முதல் 25 டன் கிடைக்கும். இதை ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து செய்யும்போதுதான் மண் மேன்மேலும் வளமாகிக்கொண்டே இருக்கும்.

சுருக்கமாகச் சொல்வதென்றால், மண்ணில் இடும் இடுபொருள்களைப் பயிர்கள் எடுத்துக்கொள்ளும் வகையில் சிதைத்துக்கொடுக்கும் பணியை மண்ணிலுள்ள கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் செய்கின்றன. அந்தச் சமையல்காரர்கள்தான் இடுபொருள்களைச் சத்துகளாக மாற்றுகிறார்கள். அந்தப் பணியைச் செய்வதற்கு அவர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமல்லவா... நாம் இடும் மற்ற இடுபொருள்களில் அவர்களுக்கான உணவு இருக்கிறது. ஆனால், இறுக்கமான, காற்றோட்டம் இல்லாத நிலையில் அந்த உணவை முழுமையாக எடுத்துக்கொள்ள முடியாத நிலையிலிருக்கும் நுண்ணுயிர்களுக்கு உதவி செய்கின்றன பசுந்தாள் உரங்கள். மண்ணின் இறுக்கத்தைக் குறைத்து, காற்றோட்டத்தை அதிகப்படுத்துகின்றன. அத்துடன், சத்துகளைப் பயிருக்குக் கடத்தும் வகையில் நுண்ணுயிர்களைத் தூண்டுகின்றன.

இவற்றை வயலில் வளர்த்தால் களைகள் அதிகம் வளராது. இவை வேகமாக வளரக்கூடிய பயிர்கள் என்பதால் களைகளைக் கட்டுப்படுத்திவிடும். இவை வளர்ந்து மண்ணில் ஈரப்பதத்தை அதிகரித்துவிடும். நிலம் பசுமையாக இருப்பதால் நீர் ஆவியாகும் திறன் குறைகிறது. நிலத்தைப் பெரும்பாலும் தரிசாக விடக் கூடாது. அப்படி விடும்போது நேரடியாகச் சூரிய ஒளிபட்டு தரையிலிருந்து ஓரடி ஆழத்தில் இருக்கக்கூடிய நுண்ணுயிர்கள் இறந்து போக வாய்ப்பிருக்கிறது. எனவே, நிலத்தின் மீது பசுந்தாள் உரங்கள் இருந்துகொண்டே இருக்க வேண்டும்.

தொழுவுரம்

மாட்டுத் தொழுவத்திலிருந்து கிடைக்கக்கூடிய மட்கிய கழிவுகளை, `தொழுவுரம்’ என்கிறோம். மாட்டுச் சாணம், சிறுநீர், தீவனக்கழிவு ஆகியவற்றின் சிதைக்கப்பட்ட கலவைதான் தொழுவுரம். ஆதிகாலம்தொட்டே விவசாயத்தில் பயன்படுத்தப்படும் உரம். உழவன் கையாண்ட முதல் தொழில்நுட்பம். இன்றைக்கு அறிவியல் வளர்ந்த நிலையில், பசுந்தாள் உரங்களைத் தான் முதலில் இட வேண்டும். அதைத் தொடர்ந்துதான் தொழுவுரத்தைப் பயன்படுத்த வேண்டும் எனச் சொல்கிறோம். ஆனால், அறிவியல் அறிவு விசாலமாவதற்கு முன்னர் நேரடியாகத் தொழுவுரத்தைத்தான் பயன்படுத்தினார்கள். இது அருமையான தொழில்நுட்பம். இதை மேலும் உயிர்த் தன்மை உள்ளதாக மாற்றி, வயலுக்குக் கொடுக்கும்போது சிறப்பான மகசூல் கிடைக்கும்.

சூபாபுல், அகத்தி
சூபாபுல், அகத்தி

வழக்கமாக, தொழுவத்துக்கு அருகில் குழி அல்லது கட்டாந்தரை மீது கழிவுகளை அள்ளிக்கொண்டு வந்து மொத்தமாகக் கொட்டுகிறார்கள். தினம் தினம் மேலே மேலே கொட்டுகிறார்கள். இப்படிச் செய்வதால், அது தரமான உரமாக மாறுவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் குறைந்தபட்சம் 12-18 மாதங்கள். இப்படி உருவாகும் உரத்தைச் சோதனை செய்தால், அதில் அதிக நுண்ணுயிர்கள் இருக்காது. அறிவியல்பூர்வமாகச் செய்வதாக இருந்தால், மூன்று மீட்டர் நீளம், மூன்று மீட்டர் அகலம், ஓரடி ஆழத்தில் குழியெடுத்து அதில் தொழுவத்தின் கழிவுகளைச் சேமிக்க வேண்டும். அதிக மாடுகள் வைத்திருப்பவர்கள், ஆறு மீட்டர் நீளம், இரண்டு மீட்டர் அகலம், ஒரு மீட்டர் ஆழத்தில் குழியெடுக்க வேண்டும். தொழுவத்தில் கிடைக்கக்கூடிய கழிவுகளை இந்தக் குழியில் போட வேண்டும். இந்தக் குழி நிறைந்த பிறகு, கிளறிவிட்டு எடுத்துப் பயன்படுத்தலாம். இப்படிச் செய்வதால் ஏழு மாதங்களில் உரம் தயாராகிவிடும்.

தக்கைப்பூண்டு, சணப்பு
தக்கைப்பூண்டு, சணப்பு

வீட்டுத்தோட்டமாக இருந்தால் நான்கு பங்கு மண்ணுக்கு, ஒரு பங்கு தொழுவுரம் என்ற கணக்கில், தொழுவுரம் இட வேண்டும். வயலாக இருந்தால் 10 பங்கு மண்ணுக்கு ஒரு பங்கு தொழுவுரம் இட வேண்டும். இந்த அளவுக்கு மேல் போடக் கூடாது. ஒரு ஏக்கர் நிலத்துக்கு, 12 டன் தொழுவுரம் என்பதுதான் பரிந்துரைக்கப்பட்ட அளவு. இந்த அளவில் எந்த ஓர் இயற்கை விவசாயத்திலும் உரத்தை நாம் பயன்படுத்துவதில்லை. இதற்கு அதிகமாகவும் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. தோராயமாக 10 பங்கு மண்ணுக்கு ஒரு பங்கு தொழுவுரம் இருக்குமாறு பார்த்து உரமிடல் வேண்டும். நம்மிடம் தொழுவுரம் அதிகமாக இருக்கிறதே என்பதற்காக அள்ளிப் போடக் கூடாது. அளவுக்கு மீறித் தொழுவுரம் போடும்போது நிலத்துக்குக் கீழேயுள்ள பயிர்களான கேரட், முள்ளங்கி போன்றவற்றில் கிழங்கு நேராக இல்லாமல் கிளைவிட்டு இரண்டாகப் பிரியும். உருளைக்கிழங்கு சரியான வடிவமில்லாமல் இருக்கும். இதற்கெல்லாம் காரணம் அளவுக்கு அதிகமான பயன்பாடுதான்.

கொழிஞ்சி, கிளரிசீடியா
கொழிஞ்சி, கிளரிசீடியா

செயற்கை விவசாயத்தில் அளவுக்கு அதிகமாகச் சில மில்லிகிராம் உரங்களைப் பயன்படுத்தும்போது ஏற்படும் எதிர்மறையான விளைவுகள், டன் கணக்கில் சில இயற்கை உரங்களை அதிகம் பயன்படுத்தும்போதும் நடைபெறும். இயற்கை விவசாயம், செயற்கை விவசாயம்... எதுவாக இருந்தாலும் பரிந்துரைக்கப்பட்ட அளவு என்பதைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

இந்த உரக்குழிகள், நேரடியாகச் சூரிய ஒளி படாமல் மரத்துக்குக் கீழே இருப்பது நல்லது. வெட்டவெளியில்கூட இருந்துவிடலாம். ஆனால், முழுவதும் நிழலில் இருக்கக் கூடாது... வெயிலிலிருந்து கிடைக்கக்கூடிய சக்தியைக் கொண்டு நுண்ணுயிரிகள் மேலும் பெருகிக் கொண்டேயிருக்கும். இப்படித் தயாரிக்கப்படும் தொழுவுரத்தில் அங்கக கரிமம் மற்றும் தழைச்சத்து 20:1 என்ற அளவில் இருக்கும். 20 சதவிகிதம் அங்கக கரிமம், ஒரு சதவிகிதம் தழைச்சத்து.

நரிப் பயறு
நரிப் பயறு

தொழுவுரம் தயாரிக்க ஆடு, மாடு, கோழி ஆகியவற்றின் கழிவுகள், வைக்கோல் கழிவுகள், பண்ணைக் கழிவுகள், இலை தழைகள், வீட்டுக் கழிவுகள், ஆலைக் கழிவுகள் அனைத்தையும் பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் தவிர வீணாகும் அனைத்துப் பொருள்களையும் உரம் தயாரிக்கப் பயன்படுத்திக்கொள்ளலாம். மாமிசம் உண்ணும் விலங்குகளின் கழிவுகளைப் பயன்படுத்தக் கூடாது. கோழி, மீன் இறைச்சிக் கழிவுகளைச் சேர்க்கக் கூடாது. இவற்றைவைத்துத் தனியாக உரம் தயாரிக்கலாம். ஆனால் தொழுவுரத்தில் பயன்படுத்தக் கூடாது. இதற்காக அதிக பூச்சி, புழுக்கள் வரும். அவை நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் பெருக்கத்துக்கு இடையூறாக இருக்கும். வேர் அழுகல் நோய் போன்ற பிரச்னைகளுக்கு இதுவும் ஒரு காரணமாகிவிடும். வீணாகும் பால் கழிவுகள், கிரீஸ், ஆயில் போன்ற மட்காத பொருள்கள் எதையும் சேர்க்கக் கூடாது. அதேபோல பூச்சி, நோய் தாக்கிய பயிர்களையும் உரக்குழியில் போடக் கூடாது.

இயற்கை வேளாண்மை : 4 - மகசூலைக் கூட்ட உதவும் பசுந்தாள் உரம் + தொழுவுரம்!

உரமாக மாறிய பிறகு அதை வெயில், மழைக்குப் பாதுகாப்பாக வைக்க வேண்டும். ஓர் ஆண்டு வரை வைத்திருந்து பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால், தரையிலிருந்து அரையடி உயரத்தில் பட்டி அமைத்து, தார்ப்பாயை விரித்து அதில் சேமிக்கலாம். சேமித்து வைத்திருக்கும்போது 15 நாள்களுக்கு ஒரு முறை உரத்தைக் கிளறிவிட வேண்டும். அது சாத்தியமில்லை என்றால், மாதம் ஒரு முறையோ அதிகபட்சம் மூன்று மாதத்துக்கு ஒரு முறையோ நிச்சயமாகக் கிளறிவிட வேண்டும். இல்லாவிட்டால் உரம் கெட்டியாகிவிடும். நுண்ணுயிரிகள் மடிந்துவிடும்

மாடு போடும் சாணத்தை அப்படியே வயலில் போட்டுவிடலாமே... அதை ஏன் தொழுவுரமாக மாற்ற வேண்டும்? சாணத்தில் செல்லுலோஸ், ஹெமி செல்லுலோஸ், கடின உலோகங்கள் அதிகமாக இருக்கும். சாணத்தை அப்படியே பயன்படுத்தும்போது எதிர்வினைகளை உண்டாக்கும். ஏற்கெனவே வளமாக இருக்கும் மண், இப்படிப் போடுவதால் வளம் குறைய வாய்ப்பிருக்கிறது. எனவே, எந்த ஓர் உரத்தையும் மட்கவைத்து, தொழுவுரமாக மாற்றிப் பயன்படுத்துவது நல்லது. லிக்னின், செல்லுலோஸ், செமி செல்லுலோஸ், பாலிசாக்ரைடு, லிபிட் ஆகியவை பயிருக்குத் தேவையானவை. ஆனால், நேரடியாகப் பயன்படுத்தும்போது எதிர்வினைகள் உருவாகலாம். மட்கவைத்து, தொழுவுரமாகப் பயன்படுத்தினால்தான் பயிருக்குத் தகுந்த சத்துகளாக மாறும்.

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் பரிந்துரைப்படி மூன்றுவிதங்களில் தொழுவுரத்தைத் தயாரிக்கலாம். அது பற்றி அடுத்த இதழில்...

பேராசிரியர் முனைவர் செந்தூர்குமரன்