Published:Updated:

இயற்கை வேளாண்மை: 8 - மண்ணை விரைவில் வளமாக்கும் மண்புழு உரம்!

இயற்கை வேளாண்மை
பிரீமியம் ஸ்டோரி
இயற்கை வேளாண்மை

ஆய்வுப் பார்வையும் அறிவியல் உண்மையும்!

இயற்கை வேளாண்மை: 8 - மண்ணை விரைவில் வளமாக்கும் மண்புழு உரம்!

ஆய்வுப் பார்வையும் அறிவியல் உண்மையும்!

Published:Updated:
இயற்கை வேளாண்மை
பிரீமியம் ஸ்டோரி
இயற்கை வேளாண்மை
ண்புழுக்களைப் பயன்படுத்தித் தொட்டியில் உரம் தயாரிக்கும் முறை குறித்துக் கடந்த இதழில் பார்த்தோம். தற்போது பெரும்பாலான விவசாயிகள், தரையில் படுக்கை அமைத்து மண்புழு உரம் தயாரிக்கிறார்கள். அதைப் பற்றிப் பார்ப்போம்.
இயற்கை வேளாண்மை
இயற்கை வேளாண்மை

`தொட்டி கட்டுவது செலவு’ என நினைப்பவர்கள் தென்னந்தோப்புகளில் திறந்தவெளிக் குவியலாக மண்புழு உரப் படுக்கைகள் அமைத்து உரம் தயாரிக்கலாம். அப்படித் தயாரிக்கும்போது நீளம் 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது. நீளம் அதிகமாக இருக்கும்போது ஒரு சிக்கல் இருக்கிறது. ஒருபக்கம் அதிகம் தண்ணீர் தெளித்து, மறுபக்கம் குறைவாகத் தெளித்தால் தண்ணீர் அதிகமுள்ள பக்கம்தான் மண்புழுக்கள் நகரும். அதனால் 10 அடியில் இடைவெளிவிட்டு அடுத்த படுக்கைகளை அமைத்தால் இந்தச் சிக்கல் ஏற்படாது. மண்புழு நகர்வு குறுகிய இடத்திலிருந்தால்தான் விரைவில் உரமாகும். 20 அடி அல்லது அதற்கும் மேல் நீளமாகப் படுக்கைகள் இருந்தால் உரமாக மாறும் காலம் அதிகமாகும். எனவே, திறந்தவெளி மண்புழுப் படுக்கையின் நீளம் 10 அடி, அகலம் மூன்றடி, உயரம் இரண்டடி (உரப்படுக்கையின் மையக் குவியல் பகுதி) என்பதுதான் சரியான அளவு. இந்த முறையில் புழுக்கள் மண்ணுக்குள்ளும் போக வாய்ப்பிருப்பதால் ஒரு படுக்கைக்கு வழக்கமாகத் தேவைப்படும் 1,000 புழுக்களிலிருந்து சிறிது அதிகமாக 1,500 புழுக்களை விட வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இயற்கை வேளாண்மை: 8 - மண்ணை விரைவில் வளமாக்கும் மண்புழு உரம்!

தயாரான உரத்தைச் சேகரித்து வெயிலில் வைக்கக் கூடாது. சிலர் வெயிலில் காயவைத்து, சலித்துச் சேமிக்கிறார்கள். அப்படிச் செய்யக் கூடாது. உரத்தை எடுத்து அப்படியே பையில் போட்டுச் சேமிக்கிறார்கள்; அதுவும் தவறு. இன்னும் சிலர் யூரியா பையில் சேமிக்கிறார்கள். அது அதிக சூட்டை உருவாக்கும். தயாரான உரத்தை உடனே பேக்கிங் பண்ணக் கூடாது. வெயில்படாத, சூடு அதிகம் இல்லாத இடத்தில் குவித்துவைக்க வேண்டும். தேவைப்படும்போதுதான் பேக்கிங் செய்ய வேண்டும். மண்புழு உரப் பண்ணைகளில் வாங்கி வரும் உரத்தை விவசாயிகள் அதிக நாள்கள் வெயிலில் வைக்கக் கூடாது. எப்போது தேவையோ, அப்போது வாங்கிப் பயன்படுத்தினால் போதும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
 மண்புழு உரம்
மண்புழு உரம்

இந்த விஷயத்தில் கவனம் தேவை!

ஆட்டு எரு, கோழி எரு, பன்றி எரு, இறைச்சிக் கழிவு ஆகியவற்றை மண்புழுக்கள் உள்ள தொட்டி மற்றும் படுக்கையில் போடக் கூடாது. புழுக்கள் அந்தப் பக்கமே திரும்பிப் பார்க்காது. அதே நேரம் அதிலிருந்து வெளிவரும் வேதியியல் அமிலங்கள் காரணமாக மண்புழுக்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படும். சில நேரங்களில் புழுக்கள் இறந்துவிடும். எனவே, மாட்டுச் சாண உரத்தை மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். ஆட்டு எருவைப் பயன்படுத்துவதாக இருந்தால் அதைச் சிதைத்து, தூளாக்கித்தான் பயன்படுத்த வேண்டும். கோழி எரு சூடு என்பதால் அதைப் பயன்படுத்தக் கூடாது. தொட்டியின் அகலம் கிழக்கு, மேற்காக இருக்க வேண்டும். காற்றோட்டம் நன்றாக இருக்க வேண்டும். ஓரளவுக்கு வெளிச்சம் இருக்க வேண்டும். தொட்டி அல்லது படுக்கை நிழலில்தான் இருக்க வேண்டும். தினமும் 10 லிட்டர் தண்ணீரைத் தொட்டியில் தெளிக்க வேண்டும்.

 மண்புழு உரம்
மண்புழு உரம்

மண்புழு உரத்தின் நன்மைகள்

மண்புழு உரம் பயன்படுத்துவதால் மண்ணில் காற்று உட்புகும் திறன் அதிகரிக்கும். மண்ணின் இறுக்கம் குறையும். பாஸ்பேட், செல்லுலோஸ் மற்றும் என்சைம்கள் செயல்திறன் அதிகரிக்கும். இவை மண்ணிலுள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களுக்குக் கூடுதல் ஊக்கம் கொடுப்பவை. எனவே, நுண்ணுயிர்களின் செயல்திறனும் அதிகரிக்கும். மண்ணிலுள்ள பாஸ்பேட் சாலுபைலைஸர், நைட்ரஸோமோனாஸ், அசிட்டோபாக்டர் மற்றும் அஸோஸ்பைரில்லம் போன்ற நன்மைசெய் நுண்ணுயிரிகளின் பெருக்கத்தையும் அவற்றின் செயல் திறன்களையும் பன்மடங்கு அதிகரிப்பதால் பயிர்களில் மகசூலும் அதிகரிக்கும். மண்புழு உரம் போடாத நிலத்திலுள்ள நுண்ணுயிர்கள் பெருக்கத்தையும், மண்புழு உரம் போட்ட நிலத்தில் நுண்ணுயிர்கள் பெருக்கத்தையும் ஆய்வு செய்து பார்த்ததில் மண்புழு உரம் போட்ட இடங்களில் 20 சதவிகிதம் அதிக அளவில் நுண்ணுயிர்கள் பெருகியது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக நிலத்தில் சுமார் ஆயிரம் நுண்ணுயிர்கள் இருந்தால் மண்புழு உரம் இட்ட நிலங்களில் 20,000 மண்புழுக்கள் இருக்கும். இத்தனை அதிக பெருக்கத்துக்குக் காரணம் இது நுண்ணுயிர்களுக்கான ஊக்க மருந்து என்பதுதான். மற்ற உரங்கள் அனைத்தும் நுண்ணுயிர்களுக்கான உணவு மட்டும்தான். ஆனால் மண்புழு உரம் அவற்றுக்கான விருந்து என்றே சொல்லலாம். இந்தச் சிறப்புப் பண்புதான், வழக்கமாக இடப்படும் தொழுவுரம் போன்ற இயற்கை உரங்களை அப்படியே பயிர்களுக்குப் போடாமல், 45 முதல் 60 நாள்கள் ஆன மண்புழு உரமாக இட வேண்டும் என்ற அறிவியல் சிந்தனைதான் மண்புழு உரம் தயாரிப்பு மற்றும் பயன்பாட்டுக்கு வழிவகுத்தது. மண்புழு உரமிடுவதால் மண்ணில் நன்மைசெய் நுண்ணுயிர் பெருக்கமடைந்து, நைட்ரஜன் மற்றும் பாஸ்பேட் சத்துகளைச் செடிகளுக்கு ஏற்ற வகையில், எடுத்துக் கொடுக்கக்கூடிய பணியைச் செய்கிறது. செடிகளின் துரித வளர்ச்சிக்கும் மகசூலுக்கும் இது பேருதவியாக இருக்கிறது.

இயற்கை வேளாண்மை: 8 - மண்ணை விரைவில் வளமாக்கும் மண்புழு உரம்!

தற்போதைய நமது வேளாண் நடைமுறைகளால் வழக்கமாக நமது நிலத்திலுள்ள மண்புழுக்கள் மறைந்துவிட்டன அல்லது மடிந்துவிட்டன. வேருக்குக் கீழே எங்காவது ஓரிரு புழுக்களைத் தேட வேண்டிய சூழலில் நம் விவசாய அணுகுமுறைகள். இயற்கை விவசாயத்தில் முன்னெடுக்கப்பட்ட மண் வளமாக இருந்தால், புழுக்களின் நடமாட்டம் மேற்பகுதி வரை இருக்கும். நமது நிலத்திலுள்ள மண்புழுக்களின் நடமாட்டம் மேற்பகுதி வரை இருந்தால் நிலம் வளமாக இருக்கிறது என்று அர்த்தம்.

இயற்கை வேளாண்மை: 8 - மண்ணை விரைவில் வளமாக்கும் மண்புழு உரம்!

ரசாயன விவசாயம் செய்யும் நிலம், முழுமையான இயற்கை விவசாய நிலமாக மாறுவதற்கு சுமார் 7-10 ஆண்டுகள் ஆகும். அதாவது, அந்த மண்ணை எடுத்துப் பரிசோதித்தால் அதில் ரசாயனங்களின் எச்சம் துளிக்கூட இருக்கக் கூடாது. அதுதான் முழுமையான இயற்கை விவசாய நிலம். இயற்கை விவசாயத்துக்கு மாறி, குறைந்தது 4-5 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ரசாயன எச்சங்களின் வேகம் குறையும். அதே நேரம் மண்புழு உரத்தைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தும்போது, மண்ணிலுள்ள மீத்தேன், நைட்ரஜன் ஆக்ஸைடு போன்ற வாயுக்களை வெளியேற்றிவிடும். அது ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் முழுமையான இயற்கை விவசாய நிலமாக மாறும். ‘இரண்டு ஆண்டுகளாக நான் இயற்கை விவசாயம்தான் செய்கிறேன்’ என்று சொன்னாலும், மண் ஆய்வகப் பரிசோதனையில் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி ரசாயன எச்சங்கள், மேலே சொன்ன வாயு வேதி நச்சுகள் இருப்பதைக் காட்டும். எனவே நமது மண், நச்சுகள் அற்ற வளமான மண்ணாக மாற எடுத்துக்கொள்ளும் காலத்தைக் குறைக்கிறது மண்புழு உரம்.

உரங்களை ஊட்டமேற்றும் உயிர் உரங்கள் பற்றி அடுத்த இதழில்...

மண்புழு உரத்திலுள்ள சத்துகள்

ஆர்கானிக் கார்பன் 9.8 முதல் 13.4 சதவிகிதம்.

தழைச்சத்து 0.51 - 1.16 சதவிகிதம்

பாஸ்பரஸ் 0.19 - 1.02

பொட்டாசியம் 0.15 - 0.73

கால்சியம் 1.18 - 7.61

மக்னீசியம் 0.093 - 0.568

சோடியம் 0.058 - 0.158

துத்தநாகம் 0.0042 - 0.11

தாமிரம் 0.0026 - 0.0048

இரும்பு 0.205 - 1.33

மாங்கனீஸ் 0.0105 - 0.203

மண்புழு தூங்குமா?

ண்புழு நகர்ந்துகொண்டே இருப்பதால் தூங்காது. சில நேரங்களில் உணவு எடுக்கும் வேகம் சற்று மட்டுப்படும், அவ்வளவுதான். அதற்குக் கண் இல்லை. இதயம் இல்லை. ஆனால், இதயம் மாதிரியான ‘ஆர்டெஸ்ட்’ என்ற உறுப்பு இருக்கிறது. இது இதயத்தின் வேலையைச் செய்யும். மனிதனுக்கு ஒரு இதயம் இருப்பதுபோல மண்புழுக்களுக்கு இதயம் போன்ற ஆர்டெஸ்ட் நான்கு இருக்கும். இவை நான்கும்தான் ரத்தத்தைத் தலை முதல் வால் பகுதி வரை அனுப்பும் பணியைச் செய்கின்றன. நுரையீரல் கிடையாது. தோல் வழியாகச் சுவாசிக்கும்.

இயற்கை வேளாண்மை: 8 - மண்ணை விரைவில் வளமாக்கும் மண்புழு உரம்!

ஐரோப்பிய வகை... பயன்பாட்டில் இல்லை!

டந்த இதழில், `உரப் பயன்பாட்டுக்காக ஐந்து வகையான மண்புழுக்கள் பயன்பாட்டில் இருக்கின்றன’ என்று குறிப்பிட்டிருந்தோம். அதில் ‘ஐசீனியா ஹார்ட்டன்ஸிஸ்’ என்ற ஐரோப்பிய வகை மண்புழு நம் நாட்டில் அதிக பயன்பாட்டில் இல்லை.

பராமரிப்புக் கவனம்

ண்புழு உரத்தொட்டியில் கண்ட குப்பைகளை அள்ளிப்போடக் கூடாது. தொட்டியின் ஈரப்பதம் 40 முதல் 60 சதவிகிதம் இருக்க வேண்டும். வெப்பநிலை 12 முதல் 26 டிகிரி செல்சியஸ் இருக்க வேண்டும். இந்த அளவுக்கும் மேல் வெப்பநிலை இருந்தால் புழுக்கள் இறந்துவிடும். உரத் தொட்டியில் களைச்செடிகளை விதையோடு எடுத்துப் போடக் கூடாது. அதேபோல ரசாயனங்கள் தெளித்த செடிகொடிகளையும் தொட்டியில் போடக் கூடாது.

மண்புழுவை வெட்டினால் இரண்டு பகுதிகளும் வளருமா?

`மண்புழுவை வெட்டினால் இரண்டு பகுதிகளும் தனித்தனிப் புழுவாக வளரும்’ என நினைக்கிறார்கள். அது தவறான கருத்து. அப்படி வளராது. மண்புழு உடல் முழுவதும் 120 முதல் 170 வளையங்கள் இருக்கும். அவற்றில் 14-வது வளையத்தில் பெண்ணுறுப்பும், 15-வது வளையத்தில் ஆணுறுப்பும் இருக்கும். அந்த 14, 15-ம் வளையத்துக்கு அப்புறம் வெட்டுப்பட்டால், மீதமுள்ள வால் பகுதிவரை மறுபடியும் உருவாகும்... பல்லிக்கு வால் அறுந்தால் முளைப்பதுபோல. ஆனால், ஆண், பெண் உறுப்புடன்கூடிய தலை அல்லாமல் வால் பகுதி மட்டும் மறுபடியும் ஒரு புழுவாக உருவெடுக்க முடியாது; உயிர் வாழவும் முடியாது. தலை எது, வால் எது எனக் குழப்பம் வேண்டாம். மண்புழு எந்தப் பக்கம் நகர்கிறதோ அந்தப் பக்கம் இருப்பதுதான் தலைப்பகுதி.