Published:Updated:

``இயற்கை விவசாயம் அரசின் கொள்கையாக மாற வேண்டும்; வெறும் வார்த்தையாக இருக்கக் கூடாது!’’

இயற்கை விவசாயம்!

இயற்கை விவசாயம் குறித்த புரிதல் இன்றி ஏதேனும் திட்டம் கொண்டு வரப்படுமேயானால் அது ஏற்பில்லாதது. அது, இயற்கை விவசாயத்துக்கு எதிரானது என்கிறார் இயற்கை வேளாண் செயற்பாட்டாளரும் தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான அறச்சலூர் செல்வம்.

``இயற்கை விவசாயம் அரசின் கொள்கையாக மாற வேண்டும்; வெறும் வார்த்தையாக இருக்கக் கூடாது!’’

இயற்கை விவசாயம் குறித்த புரிதல் இன்றி ஏதேனும் திட்டம் கொண்டு வரப்படுமேயானால் அது ஏற்பில்லாதது. அது, இயற்கை விவசாயத்துக்கு எதிரானது என்கிறார் இயற்கை வேளாண் செயற்பாட்டாளரும் தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான அறச்சலூர் செல்வம்.

Published:Updated:
இயற்கை விவசாயம்!

குஜராத் மாநிலம் சூரத் நகரில் நடைபெற்ற இயற்கை விவசாயக் கருத்தரங்கில், காணொலி மூலமாகக் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ``இயற்கை விவசாயம் என்பது வெற்றிகரமான இயக்கமாக மாறும்” என்று கூறியிருக்கிறார். மேலும் ``இயற்கை விவசாயம் என்பது நமது பூமித்தாய்க்கு செய்யும் சேவையைப் போன்றது” என்றும், அந்த உரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்நிலையில், இயற்கை விவசாயத்தை வளர்த்தெடுக்க மோடி அரசு செய்தது என்ன? செய்ய வேண்டியது என்ன என, இயற்கை வேளாண் செயற்பாட்டாளரும் தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான அறச்சலூர் செல்வத்திடம் கேட்டோம்…

அறச்சலூர் செல்வம்
அறச்சலூர் செல்வம்

``வெறும் வாய்ப்பேச்சில் இங்கே எதுவும் நடந்துவிடாது. மிக அதிக அளவில் ஒன்றிய அரசும், சிறிய அளவில் மாநில அரசும் இயற்கை விவசாய வளர்ச்சி குறித்து உதட்டளவுப் பேச்சோடே நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இயற்கை விவசாயம் செய்கிறவர்களுக்கு மானியம் தருவது மாதிரியான சிறிய திட்டங்கள்தான் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதைத்தாண்டி ஒன்றிய / மாநில அரசின் கொள்கையாக இயற்கை விவசாயம் இருக்கிறதா என்பதுதான் நாம் எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இத்தனை ஆண்டுகளுக்குள் ஒட்டுமொத்த விவசாயமும் இயற்கை விவசாயமாக மாறும் என்று ஏதேனும் இலக்கு வைத்திருக் கிறார்களா? ஆபத்தான களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை தடை செய்திருக்கிறார்களா? க்ளைபோசைட் போன்ற மிகக்கொடிய களைக்கொல்லி விற்பனையில் இருக்கிறது. உலக நாடுகள் பலவற்றால் தடை செய்யப்பட்ட கொடிய பூச்சிக்கொல்லிகள், இங்கே விற்பனையில் இருக்கின்றன. வேளாண் பல்கலைக்கழகங்களில் இயற்கை விவசாயம் தொடர்பானவைதான் பயிற்றுவிக்கப்படும் எனச் சொல்லியிருக்கிறார்களா?

விவசாயத்துக்கென ஒதுக்கப்படும் பட்ஜெட்டில் இயற்கை விவசாயத்துக்கு எத்தனை சதவிகிதம் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று பார்த்தால் மிகக்குறைந்த அளவில்தான் ஒதுக்கியிருக்கிறார்கள். ஒன்றிய / மாநில இரு அரசுகளுமே இயற்கை விவசாயத்துக்கு பெரிதளவில் முக்கியத்துவம் அளிக்கவில்லை.

 பிரதமர் மோடி
பிரதமர் மோடி
ட்விட்டர்

முதலில், திட்டம் வகுக்கும் வேளாண் துறை அலுவர்களுக்கே இயற்கை விவசாயம் குறித்த புரிதல் மிகக்குறைவாகத்தான் இருக்கிறது. ரசாயன உரத்தைத் தவிர்ப்பது மட்டுமே இயற்கை விவசாயம் என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அது தொடக்கம் மட்டுமே. நாடு முழுவதும் உள்ள இயற்கை விவசாயிகளை சென்று சந்தித்து, அவர்களுடன் உரையாடுவதன் வாயிலாக இயற்கை விவசாயம் குறித்த புரிதலை வளர்த்துக் கொள்ள முடியும்.

கொள்கை அளவில் நிறைய மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். ஒரு புறம் இயற்கை விவசாயத்தை தூக்கிப் பிடிப்பது போல் பேசிக்கொண்டே, இன்னொரு புறம் மரபணு மாற்று மக்காச்சோள விதைகளின் களப்பரிசோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதை என்னவென்று சொல்வது? அப்பட்டமான இரட்டை வேடம் இது என்பது, பிரதமர் மோடிக்குத் தெரியாமல் இருக்காது.

விவசாயிகளுக்குத் தரும் விளக்க அறிக்கைகளில், விவசாயம் சார்ந்த பிரச்னைகளுக்கு, இயற்கை வழித்தீர்வுகள் பற்றி அறிவிக்கப்படுவதில்லை. வேளாண்மைத்துறை ரசாயன உரத்தைத்தான் தூக்கிப் பிடிக்கிறது. ஏனெனில் ரசாயன உர விவசாயம்தான் இந்திய அரசின் கொள்கையாக இருக்கிறது. அதைத்தான் மாற்ற வேண்டும். இந்திய வேளாண் அறிவியல் கழகம், இயற்கை விவசாயத்தை வளர்க்க என்ன செய்திருக்கிறது என்றால் ஏதும் இல்லை.

இயற்கை விவசாயம்
இயற்கை விவசாயம்

முதலில் இயற்கை விவசாயம் என்றால் என்னவென்பதை உரையாடல் வழியாகப் புரிந்துகொள்ள வேண்டும். அந்த புரிதலுக்குப் பிறகே அரசின் கொள்கை முடிவுகளையும், திட்டங்களையும் வகுக்க முடியும். இயற்கை விவசாயம் குறித்த புரிதல் இன்றி ஏதேனும் திட்டம் கொண்டு வரப்படுமேயானால் அது ஏற்பில்லாதது. செருப்புக்கேற்ப கால்களை மாற்றுவதாக அமையும். அது இயற்கை விவசாயத்துக்கு எதிரானது.

இயற்கை விவசாயத்துக்கு ஏற்புள்ளபடியாக அரசின் கட்டமைப்பை மாற்ற வேண்டும். இயற்கை விவசாயத்தை வளர்த்த வேண்டும் என்று வாய்ப்பேச்சில் பேசுவதை செயலில் காட்ட முன் வர வேண்டும்” என்கிறார் அறச்சலூர் செல்வம்.