Published:Updated:

தென்னையில் ஊடுபயிராகத் தக்காளி… இயற்கைக்கு வழிகாட்டிய பசுமை விகடன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தக்காளியுடன் அகத்தீஸ்வரன்...
தக்காளியுடன் அகத்தீஸ்வரன்...

மகசூல்

பிரீமியம் ஸ்டோரி

சாம்பார், ரசம், கறிக்குழம்பு, பிரியாணி என எந்த வகையான உணவாக இருந்தாலும் சரி, அதில் தக்காளி கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும். தக்காளி இல்லாத சமையலே இல்லை என்று சொல்லும் அளவுக்குத் தினசரி சமையலில் பயன்படுத்தக்கூடிய காய்களில் ஒன்று, தக்காளி. அதேபோல, விவசாயிகளுக்குத் தினசரி வருமானம் கொடுக்கக்கூடிய காய்கறிப் பயிர்களில் முதன்மையானதாகவும் இருக்கிறது, தக்காளி.

தக்காளித் தோட்டம்
தக்காளித் தோட்டம்

தக்காளி விலை, திடீரென்று உச்சத்துக்குப் போய் விவசாயிகளை மகிழவும் வைக்கும், அதேசமயம் விலை அதலபாதாளத்தில் வீழ்ந்து விவசாயிகளை அழவும் வைக்கும். மகிழ வைத்தாலும் சரி, அழ வைத்தாலும் சரி… அதைப்பற்றிக் கவலைப்படாமல், தொடர்ந்து தக்காளிச் சாகுபடியை மேற்கொண்டு வரும் விவசாயிகள் பலர் உண்டு. அவர்களில் ஒருவர்தான், கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டம, எஸ்.அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அகத்தீஸ்வரன். இவர் தென்னையில் ஊடுபயிராக ஒரு ஏக்கர் நிலத்தில் தக்காளிச் சாகுபடி செய்து வருகிறார்.

கனகராஜுடன்...
கனகராஜுடன்...

ஒரு காலைவேளையில் அறுவடைப் பணியிலிருந்த அகத்தீஸ்வரனைச் சந்தித்தோம். அறுவடை செய்து கொண்டு வந்து கொட்டிய பழங்களைத் தரம்பிரித்துக் கொண்டிருந்தனர், அவரது பெற்றோர் பழனிச்சாமி- சுமதி ஆகியோர்.

தக்காளி பிரித்தெடுக்கும் பணியில்...
தக்காளி பிரித்தெடுக்கும் பணியில்...

பணியை முடித்துவிட்டு வந்த அகத்தீஸ்வரன், “எங்க பூர்வீகம் இந்த ஊர்தான். மொத்தம் 6 ஏக்கர் 50 சென்ட் நெலம் எங்க குடும்பத்துக்கு இருக்கு. வீடு, களத்து வாசல் தொழுவம் எல்லாம் 50 சென்ட் நெலத்துல இருக்கு. மீதமுள்ள 6 ஏக்கர்ல பயிர் பண்றோம். பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத் தண்ணீர் ரெண்டு வருஷத்துக்கு ஒரு வாட்டிதான் கிடைக்கும். அதனால, கிணற்றுப்பாசனம் மூலம்தான் விவசாயம் செய்றோம். அஞ்சு ஏக்கர்ல தென்னை இருக்கு. ஒரு ஏக்கர் நிலத்துல கொத்தமல்லி விதைச்சிருக்கோம். தென்னைக்குள் ஒரு ஏக்கர் நிலத்தில் மட்டும் ஊடுபயிரா தக்காளி நட்டிருக்கோம். தென்னை நடவு செஞ்சு 7 வருஷமாச்சு. 25 அடி இடைவெளியில மரங்கள் இருக்குறதால, தக்காளிக்குப் போதுமான சீதோஷ்ண நிலை கிடைக்குது.

1 ஏக்கர் நிலத்தில் ஊடுபயிராக நடவுசெய்ய 7,500 நாற்றுகள் தேவைப்படும். பூச்சிகள் தென்பட்டால், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசல் தெளிக்க வேண்டும். முழுக்க முழுக்க இயற்கை முறையில சாகுபடி செய்யணும்னு ஆர்வம் இருக்கு.

‘பாதி இயற்கை பாதி ரசாயனம்’ என்கிற முறையில்தான் தக்காளிச் சாகுபடி செய்றோம். முழுக்க முழுக்க இயற்கை முறையில சாகுபடி செய்யணும்னு ஆர்வம் இருக்கு. ‘பசுமை விகடன்’ அதுக்கான வழிமுறைகளைச் சொல்லிக்கொடுத்தால் அடுத்த போகத்திலேயே இயற்கை விவசாயத்துக்கு மாறிடுவேன்” என்றார்.

தக்காளியுடன் அகத்தீஸ்வரன்...
தக்காளியுடன் அகத்தீஸ்வரன்...

உடனே, செஞ்சேரிமலை கிராமத்தில், இயற்கை முறையில் தக்காளிச் சாகுபடி செய்துவரும் முன்னோடி விவசாயி கனகராஜை செல்போனில் அழைத்து, அகத்தீஸ்வரனுடன் உரையாட வைத்தோம். அதன்பிறகு சில நாள்கள் கழித்துக் கனகராஜை அழைத்துக்கொண்டு அகத்தீஸ்வரனின் தோட்டத்துக்குச் சென்றோம். அங்கே அகத்தீஸ்வரனுக்கு நேரடி ஆலோசனை கொடுத்தோம். ஒரு ஏக்கர் தென்னந்தோப்பில் ஊடுபயிராக இயற்கை முறையில் தக்காளிச் சாகுபடி செய்யும் விதம்குறித்து அகத்தீஸ்வரனுக்குக் கனகராஜ் சொல்லித்தந்த விஷயங்கள் இங்கே…

“தென்னந்தோப்பில் 10 டன் தொழுஉரத்தைக் கொட்டி இறைத்து இரண்டு முறை உழ வேண்டும். அடுத்துச் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து 2 அடி இடைவெளியில் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். 1 ஏக்கர் நிலத்தில் ஊடுபயிராக நடவுசெய்ய 7,500 நாற்றுகள் தேவைப்படும். 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி பஞ்சகவ்யா கரைசலைக் கலந்து, அதில் நாற்றுக்களின் வேர்ப்பகுதியை நனைத்த பிறகு நடவு செய்தால், வேர் சம்பந்தப்பட்ட நோய்களைத் தடுக்கலாம்.

தென்னையில் ஊடுபயிராகத் தக்காளி… இயற்கைக்கு வழிகாட்டிய பசுமை விகடன்!

நடவு செய்த 10 மற்றும் 30-ம் நாள்களில் களைகளை அகற்ற வேண்டும். நடவு செய்ததிலிருந்து 15 நாள்களுக்கு ஒருமுறை… 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி பஞ்சகவ்யா என்ற விகிதத்தில் கலந்து, காலை நேரத்தில் தெளிக்க வேண்டும். பாசன நீருடனும் பஞ்சகவ்யாவைக் கலந்து கொடுக்கலாம்.

நடவு செய்த 10, 30 மற்றும் 40-ம் நாள்களில் பிண்ணாக்குக் கரைசலைப் பாசன நீருடன் கலந்துவிட வேண்டும் (கடலைப்பிண்ணாக்கு 15 கிலோ, பருத்திப் பிண்ணாக்கு 30 கிலோ ஆகியவற்றை மூழ்கும் அளவு நீர்விட்டு 3 நாள்கள் ஊறவைக்க வேண்டும். பிறகு பிண்ணாக்கு ஊறவைத்த பீப்பாயில் 200 லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கலக்க வேண்டும். அதில், தலா ஒன்றரை கிலோ அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்தால் பிண்ணாக்குக் கரைசல் தயார்).

‘‘10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி பஞ்சகவ்யா கரைசலைக் கலந்து, அதில் நாற்றுக்களின் வேர்ப்பகுதியை நனைத்த பிறகு நடவு செய்தால், வேர் சம்பந்தப்பட்ட நோய்களைத் தடுக்கலாம்.’’

பூச்சிகள் தென்பட்டால், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசல் தெளிக்க வேண்டும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகிய மூன்றிலும் தலா 1 கிலோ எடுத்துத் தனித்தனியாக அரைக்க வேண்டும். பிறகு மூன்றையும் ஒன்றாகக் கலந்து 300 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தால் பச்சைப்புழு, காய்ப்புழு, அசுவினி, வெள்ளை ஈ உள்ளிட்ட பூச்சிகள் கட்டுப்படும். நடவு செய்த 60-ம் நாளிலிருந்து தொடர்ந்து 90 நாள்கள் காய்ப்பில் இருக்கும். ஒருநாள் விட்டு ஒருநாள் காய் பறிக்கலாம்” என்றார் கனகராஜ்.

கனகராஜ் சொன்ன விஷயங்கள் அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக் குறிப்பெடுத்து வைத்துக்கொண்ட அகத்தீஸ்வரன், “அடுத்த போகத்திலேயே இந்த விஷயங்கள் அனைத்தையும் கடைப்பிடித்து இயற்கை முறையில் தக்காளி சாகுபடி செய்வேன்” என்று சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு : ப.அகத்தீஸ்வரன், செல்போன்: 98435 06666. கனகராஜ், செல்போன்: 98421 19652.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பூச்சிகளை விரட்டும் எண்ணெய்க் கரைசல்

1 லிட்டர் புங்கன் எண்ணெய், 4 லிட்டர் வேப்பெண்ணெய் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். 1 காதிசோப் கட்டியைத் தண்ணீரில் கரைத்து, எண்ணெய்க் கலவையோடு சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். இக்கரைசலில் 100 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தால் பூச்சிகள் கட்டுப்படும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு