நாட்டு நடப்பு
மகசூல்
Published:Updated:

இயற்கை விவசாயம்... உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல; மன ஆரோக்கியத்திற்கும்!

பயிற்சியில்
பிரீமியம் ஸ்டோரி
News
பயிற்சியில்

பயிற்சி

யற்கை விவசாயத்தில் வெற்றி பெறும் வழிகள்’ என்ற தலைப்பில் நேரடி களப்பயிற்சி திருப்பூரில் நடைபெற்றது. அக்டோபர் 23 மற்றும் 24-ம் தேதிகளில் திருப்பூர் அறப்பொருள் வேளாணகம் பண்ணையில் நடைபெற்ற களப்பயிற்சியைப் பசுமை விகடன் மற்றும் அறப்பொருள் வேளாணகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. தமிழகத் தின் பல பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கிய திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் வனிதா, ‘‘இன்றைக்கு அவசர காலத்தில் வாழ்ந்து வருகிறோம். உடல் ஆரோக்கியம் தொடர் பான பல சிக்கலுக்கும் காரணம் நாம் பாரம்பர்யத்தை மறந்து போனதுதான். ஆரோக்கியமான உணவுகளை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்திய நாம், இன்றைக்கு நாகரிகம் என்ற பெயரில் இறக்குமதி உணவுகளை உண்டு, நோயாளி களாக அலைகிறோம். அதனால் முடிந்த வரை பாரம்பர்யத்தைக் காப்பாற்ற வேண்டும். இயற்கை விவசாயத்தை அனைவரும் கைக்கொள்ள வேண்டும். அது உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்லாமல் மன ஆரோக்கியத்துக்கும் உதவியாக இருக் கும். தற்போது நாம் வாழவில்லை. பிழைத்துக் கொண்டிருக்கிறோம். இயற்கை சார்ந்த வாழ்க்கையைக் கடைப்பிடிக்கும்போதுதான் வாழ்வு அர்த்தமுள்ளதாக இருக்கும்’’ என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய அறப்பொருள் வேளாணகத்தின் நிறுவனர் சிவராம், “இயற்கை விவசாயத்தைப் படித்து, கேட்டுத் தெரிந்துகொள்வதோடு களத்தில் இறங்கிச் செயல்படும்போதுதான் முழுமையான வெற்றி பெற முடியும். அதற்காகத்தான் இந்தக் களப்பயிற்சி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. தலைசிறந்த வல்லுநர்கள் பயிற்சி அளிக்க இருக்கிறார்கள். இதை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

மரம் வளர்ப்பு குறித்து தமிழ்நாடு வனக் கல்லூரியின் மரச்சாகுபடி துறையின் தலைவர் முனைவர் பாலசுப்பிரமணியன், பாரம்பர்ய விதைகள் குறித்து மரபு விதை சேகரிப்பாளர் பிரியா ராஜநாராயணன், பசுமைக்குடில் தொழில்நுட்பங்கள் குறித்து ரமணக்குமார், விற்பனை வாய்ப்புகள் குறித்து உதவி வேளாண்மை இயக்குநர் பிரபாகரன், நீர் மேலாண்மை குறித்து வேளாண் பொறி யாளர் பிரிட்டோ ராஜ், பூச்சி மேலாண்மை குறித்து பூச்சியியல் வல்லுநர் நீ.செல்வம், இயற்கை விவசாயச் சான்று குறித்து விதைச் சான்று உதவி இயக்குநர் சுரேஷ், வட்டப்பாத்தி, இயற்கை இடுபொருள் தொடர்பாக விதைகள் யோகநாதன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிற்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. வனத்துக்குள் திருப்பூர் அமைப்பின் திட்ட இயக்குநர் குமார் துரைசாமி நன்றியுரையுடன் பயிற்சி நிறைவு பெற்றது.