Published:Updated:

ஆக்சிஜன் பூங்கா உருவாக்கம்!

 நிகழ்வில்...
பிரீமியம் ஸ்டோரி
News
நிகழ்வில்...

நாட்டு நடப்பு

பூமியில் காணப்படும் தாவரங்களில் பீமா மூங்கில் மிக வேகமாக வளரக்கூடியது. ஒரு நாளைக்கு ஒன்றரை அடி உயரம் வளரும். அண்மையில் கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், பயிர் மேலாண்மை மையத்தின் கீழ் இயங்கும் உழவியல்துறையின் சார்பில் ஆக்சிஜன் பூங்கா உருவாக்கப்பட்டு, அதில் பீமா மூங்கில் நடும் விழா நடைபெற்றது.

பல்கழைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் நீ.குமார் தலைமை தாங்க, முன்னாள் முதன்மை வனப் பாதுகாவலர் முனைவர் எஸ்.பாலாஜி ஐ.எஃப்.எஸ் மரம் நடும் விழாவைத் தொடங்கிவைத்துப் பேசினார். “பீமா மூங்கில் இந்தியாவில் மிக வேகமாக வளரும் தன்மையுடைய மூங்கில் வகையைச் சேர்ந்தது. இந்த வகை மூங்கில்கள் வளிமண்டலத்திலுள்ள கரியமில வாயுவை உட்கிரகித்து மண்ணினுள் சேகரித்து வைத்துக்கொள்கின்றன. மேலும், இவை அதிகளவு ஆக்சிஜன் வாயுவை வெளியிடுவதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தீங்குகளையும் குறைக்கின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்த மூங்கில் நன்றாக வளர்ந்து, ஒரு வருடத்துக்கு 300 கிலோ ஆக்சிஜனை நிலைநிறுத்துகிறது. இந்த ஆக்சிஜன் அளவு ஒரு மனிதருக்கு ஒரு வருடத்துக்குப் போதுமானது. மேலும், இந்த மூங்கில் ஒரு ஏக்கரில் 80 டன் கரியமில வாயுவை கிரகித்துச் சேமித்துவைக்கிறது. நல்ல முதிர்ந்த பீமா மூங்கில் மரம் நான்கு வருடங்களில் 400 கிலோ கரியமில வாயுவை ஒவ்வொரு வருடமும் சேமிக்கிறது. இந்த மூங்கில் பாரம்பர்ய இனப்பெருக்கமுறையின் மூலம் உருவாக்கப்பட்டது.

 நிகழ்வில்...
நிகழ்வில்...

இந்த விழாவில் பயிர் மேலாண்மை மைய இயக்குநர் முனைவர் வெ.கீதாலஷ்மி, உழவியல்துறைத் தலைவர் முனைவர் சி.ஆர்.சின்னமுத்து, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர்.