Published:Updated:

`அப்படி வாங்க வழிக்கு' ஹரியானா அரசை இறங்கி வந்து பேச வைத்த விவசாயிகள் போராட்டம்!

நெடுஞ்சாலையில் போராட்டம்

ஹரியானாவில் நெல் கொள்முதல் செய்யவேண்டும் என்று கோரி விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம் 21 மணிநேரத்திற்கு பிறகு விலக்கிக்கொள்ளப்பட்டது.

`அப்படி வாங்க வழிக்கு' ஹரியானா அரசை இறங்கி வந்து பேச வைத்த விவசாயிகள் போராட்டம்!

ஹரியானாவில் நெல் கொள்முதல் செய்யவேண்டும் என்று கோரி விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம் 21 மணிநேரத்திற்கு பிறகு விலக்கிக்கொள்ளப்பட்டது.

Published:Updated:
நெடுஞ்சாலையில் போராட்டம்

ஹரியானா மாநிலத்தில் விவசாயிகள் மாநில அரசு நெல் கொள்முதலை முன்கூட்டியே தொடங்கவேண்டும் என்று கோரி நேற்று அம்பாலா - டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குருஷேத்ரா அருகில் உள்ள சஹாபாத் என்ற இடத்தில் இந்த போராட்டத்தை பாரதீய கிஷன் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. விவசாயிகள் போராட்டம் காரணமாக டெல்லி-சண்டிகர் போக்குவரத்து முடங்கியது. வாகனங்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டன. இரவு முழுக்க விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸார் பேச்சுவார்த்தை
போலீஸார் பேச்சுவார்த்தை

இப்பிரச்னை குறித்து பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணை நள்ளிரவு வரை நடந்தது. இதில் கருத்து தெரிவித்த நீதிமன்றம், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுவதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கும்படியும், கடைசி வாய்ப்பாக போலீஸ் படையை பயன்படுத்தும் படியும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.

மாநில அரசு தரப்பில் விவசாயிகள் கொண்டு வந்து மார்க்கெட்டில் வைத்திருக்கும் நெல் மூட்டைகள் உடனே அங்கிருந்து கொண்டு செல்லப்படும் என்று உத்தரவாதம் கொடுக்கப்பட்டது. மார்க்கெட்டில் நெல் மூட்டைகள் பல நாட்களாக சேமித்து வைக்கப்பட்டிருப்பதால் ஈரப்பதம் காரணமாக சேதமாகிக்கொண்டிருப்பதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாநில அரசு தரப்பில் இந்த உத்தரவாதம் கொடுக்கப்பட்டது.

அதேசமயம் முறைப்படி நெல் கொள்முதல் வரும் 1ம் தேதிதான் தொடங்கும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் 5 மாவட்டங்களில் ஒரு ஏக்கருக்கு 22 குவிண்டால் நெல் கொள்முதல் செய்யப்படும் என்ற விதியை தளர்த்தி 30 குவிண்டாலாகவும் சில மாவட்டங்களில் 28 குவிண்டாலாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மார்க்கெட்களில் இருக்கும் நெல் அங்கிருந்து வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படும் என்று அரசு தெரிவித்திருப்பதால் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

நெல் கொள்முதல்
நெல் கொள்முதல்

இதனால் இன்று காலையில் குருஷேத்ரா போலீஸ் கண்காணிப்பாளர் சுரிந்தர் சிங் சாலையில் இருந்த அனைத்து தடுப்புக்களையும் அகற்ற உத்தரவிட்டார். பிரச்னைக்கு சுமூக தீர்வு எட்டப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"போராட்டத்தில் இறங்கியதால்தான்பிரச்னைக்குத் தீர்வு கிடைத்திருக்கிறது. அரசு இயந்திரத்தை வழிக்கு கொண்டு வர போராட்டங்கள்தான் தீர்வாக இருக்கிறது. கோரிக்கை விடும்போதே தீர்வு காணப்பட்டிருந்தால், நாங்கள் ரோட்டுக்கு வந்து போராடவேண்டிய அவசியமில்லை. எப்படியோ நெல்லை கொள்முதல் செய்ய முன்வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று தெரிவித்துள்ளனர்.