Published:Updated:

`55 பாரம்பர்ய நெல் ரகங்கள்; இயற்கை வேளாண் பயிற்சி!' - அசத்தப்போகும் `நெல்’ ஜெயராமன் ஆராய்ச்சி மையம்

பாரம்பர்ய நெல் ஆராய்ச்சி மையம்
News
பாரம்பர்ய நெல் ஆராய்ச்சி மையம்

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். அவரது மறைவுக்குப் பின்னர் `நெல்’ ஜெயராமன், இதில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டார்.

Published:Updated:

`55 பாரம்பர்ய நெல் ரகங்கள்; இயற்கை வேளாண் பயிற்சி!' - அசத்தப்போகும் `நெல்’ ஜெயராமன் ஆராய்ச்சி மையம்

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். அவரது மறைவுக்குப் பின்னர் `நெல்’ ஜெயராமன், இதில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டார்.

பாரம்பர்ய நெல் ஆராய்ச்சி மையம்
News
பாரம்பர்ய நெல் ஆராய்ச்சி மையம்

பாரம்பர்ய நெல் ரகங்களை விவசாயிகளிடம் பரவலாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த நெல் ஜெயராமன், புற்றுநோயால் கடந்த ஆண்டு காலமானார். அவரது நினைவைப் போற்றும் வகையில் திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகில் உள்ள பருத்தியூரில், நெல் ஜெயராமன் இயற்கை வேளாண்மை மற்றும் பாரம்பர்ய நெல் விதை ஆராய்ச்சி நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இது இயற்கை விவசாயிகள் மத்தியில் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

திறப்பு விழா
திறப்பு விழா

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். அவரது மறைவுக்குப் பின்னர் `நெல்' ஜெயராமன் இதில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டார்.

`கிரியேட் நமது நெல்லை காப்போம்' இயக்கத்தின் சார்பாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ஆண்டுதோறும் `தேசிய அளவிலான நெல் திருவிழாவை `நெல்' ஜெயராமன் சிறப்பாக நடத்திவந்தார். அவர் மறைந்தாலும், அவர் விட்டுச்சென்ற பணியை எந்தவிதமான சுணக்கமும் இல்லாமல் தொடர வேண்டும் எனவும் விவசாயிகளுக்குப் பயன் அளிக்கக்கூடிய வகையிலும் `நெல்' ஜெயராமன் பெயரில் இயற்கை வேளாண்மை மற்றும் பாரம்பர்ய நெல் விதை ஆராய்ச்சி நிலையம் தொடங்க வேண்டும் எனவும் `கிரியேட் நமது நெல்லை காப்போம்' அமைப்பினர் உறுதியேற்றனர்.

இந்தநிலையில், தற்போது குடவாசல் அருகே பருத்தியூரில் `நெல்' ஜெயராமன் பெயரில் ஆராய்ச்சி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மிக முக்கிய செயல்பாடாக, தரமான, இனத் தூய்மையுள்ள பாரம்பர்ய நெல் ரகங்களை உற்பத்தி செய்து, முதல்கட்டமாக, 2020-ம் ஆண்டு நடைபெறவுள்ள நெல் திருவிழாவில் 8,000 விவசாயிகளுக்கு வழங்கப்போவதாகவும் இதன் நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.

இதுதொடர்பாக, நம்மிடம் பேசிய நிர்வாகிகள் சிலர், ``காட்டுயாணம், மாப்பிள்ளை சம்பா, கறுப்பு கவுணி, வெள்ளை பொன்னி, தூய மல்லி, கருங்குருவை, இலுப்பைப்பூ சம்பா, சொர்ண மசூரி, ஆத்தூர் கிச்சலி சம்பா, சீரக சம்பா உள்ளிட்ட மேலும் 55-க்கும் மேற்பட்ட அரிய வகை பாரம்பர்ய நெல் ரக விதைகளை, இந்த மையத்தில் தொடர் பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபடுத்த இருக்கிறோம். விவசாயிகளுக்கு இயற்கை விவசாயப் பயிற்சிகளையும் இங்கு வழங்க இருக்கிறோம்” என்கின்றனர் உறுதியான குரலில்.