Published:Updated:

நெல், காய்கறிச் சாகுபடி; இயற்கை விவசாயத்தில் அசத்தும் அரசு ஊழியர்!

இயற்கை விவசாய வயலில் மணிமாறன்

நான் அரசு வேலையில் உள்ளேன். என் மாமனார் மின்சாரத்துறையில் வேலையில் இருக்கிறார். என் மாமனார், அத்தை, மைத்துனர், மனைவி என நாங்கள் அனைவருமே சாகுபடி பணிகளைச் செய்கிறோம்.

நெல், காய்கறிச் சாகுபடி; இயற்கை விவசாயத்தில் அசத்தும் அரசு ஊழியர்!

நான் அரசு வேலையில் உள்ளேன். என் மாமனார் மின்சாரத்துறையில் வேலையில் இருக்கிறார். என் மாமனார், அத்தை, மைத்துனர், மனைவி என நாங்கள் அனைவருமே சாகுபடி பணிகளைச் செய்கிறோம்.

Published:Updated:
இயற்கை விவசாய வயலில் மணிமாறன்

நாகப்பட்டினத்தை அடுத்த வடக்கு பால்பண்ணைசேரியில் வறண்டு கிடந்த நிலத்தைச் செம்மைப்படுத்தி பாரம்பர்ய நெல் ரகங்கள், பழங்கள், காய்கறிகள் என இயற்கை விவசாயம் செய்து அசத்தி வருகிறார் அரசு சுகாதாரத்துறை ஆய்வாளராக இருக்கும் மணிமாறன்.

இயற்கை விவசாய வயலில் மணிமாறன்
இயற்கை விவசாய வயலில் மணிமாறன்

மணிமாறனிடம் பேசியபோது, ``வடக்கு பால்பண்ணைசேரியில் `சம்பா தோட்டம்' என்ற பெயரில் எங்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. முற்றிலும் கருவை காடாக இருந்த அந்த நிலத்தை மேம்படுத்தி இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சம்பா பருவத்தில் பாரம்பர்ய நெல் ரகமான சிவப்புக் கவுனி நெல்லை பயிரிடுவோம். அது முற்றிலும் எங்கள் சொந்த உபயோகத்துக்குத்தான். அறுவடை முடிந்த நிலத்தின் ஈரம் காய்வதற்குள் தர்பூசணியும் பயிரிடுவோம். இந்நிலத்தை உழுவதில்லை, நெற்கதிர்களின் அடியே உரமாகிவிடும். அதில் ஆடு, மாடு சாணங்களை உரமாக இடுகிறோம். மீதமுள்ள 10 சென்ட் இடத்தில் கத்தரி, வெண்டை, கொத்தவரை போன்ற காய்கறிகளைப் பயிரிடுகிறோம். கத்திரியில் மட்டும் கொண்டைபூச்சி நோய் தாக்கும். அதற்கு வேப்ப எண்ணெய் தெளித்து காப்பாற்றுகிறோம்.

இயற்கை விவசாய வயலில் மணிமாறன்
இயற்கை விவசாய வயலில் மணிமாறன்

நான் அரசு வேலையில் உள்ளேன். என் மாமனார் மின்சாரத்துறையில் வேலையில் இருக்கிறார். என் மாமனார், அத்தை, மைத்துனர், மனைவி என நாங்கள் அனைவருமே சாகுபடி பணிகளைச் செய்கிறோம். இதில் விளையும் அனைத்தையும், நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மட்டுமே வழங்குகிறோம். நிலத்தில் ஒரு குட்டை உள்ளது. அதில் ஊறும் நீரைத்தான் பயன்படுத்துகிறோம். வெள்ளரி மற்றும் தர்பூசணியை நெல் அறுவடை முடிந்து நிலத்தில் ஈரப்பதமுள்ள மார்ச் மாதத்தில் பயிரிடுகிறோம். அவை மே, ஜூன் மாதங்களில் அறுவடையாகின்றன. தேவையுள்ளோர் இங்கே வந்து வாங்கிச் செல்கின்றனர். காய்கறிகளை இரண்டு ஹோட்டல்களில் இருந்து வாங்கிச் செல்கின்றனர். கொரோனாவுக்குப் பிறகுதான் சத்தான காய்கறிகளை மக்களுக்குத் தர வேண்டும் என்ற எண்ணத்தில் பயிரிட்டு தருகிறேன். லாப நோக்கமில்லை" என்றார் மணிமாறன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism