Published:Updated:

நெல் Vs வாழை முட்டிக்கொள்ளும் விவசாயிகள்!

நெல் Vs வாழை
பிரீமியம் ஸ்டோரி
நெல் Vs வாழை

பிரச்னை

நெல் Vs வாழை முட்டிக்கொள்ளும் விவசாயிகள்!

பிரச்னை

Published:Updated:
நெல் Vs வாழை
பிரீமியம் ஸ்டோரி
நெல் Vs வாழை
விளைநிலங்களை அழித்து வீட்டுமனையாக மாற்றுவதும், அதை எதிர்த்து விவசாயிகள் போராடுவதும் அடிக்கடி நடக்கும் சம்பவம். ஆனால் ‘வாழைச் சாகுபடி செய்வதால் நெல் சாகுபடி அழிக்கிறது’ என்ற புதிய குரல் கன்னியாகுமரி மாவட்டத்தின் கல்படி ஏலா விவசாயிகள் மத்தியில் ஒலிப்பது அதிகாரிகளுக்குத் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.

குளத்தில் தண்ணீரைத் தேக்கி வைத்து, அந்தத் தண்ணீரைப் பயன்படுத்திப் பயிர் செய்யும் விவசாயிகள்தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகம். ஆற்றுப் பாசனத்தைவிட, குளத்துப் பாசன விவசாய நிலங்களே மாவட்டத்தில் அதிகம். இந்த விவசாய நிலங்களுக்கு ஏலா என்று பெயர். கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலை அருகே அமைந்திருக்கிறது கல்படி ஏலா. கல்படி குளத்தை ஒட்டியுள்ள இந்த ஏலாவில் முன்பு சுமார் 300 ஏக்கர் நெல் வயலாக இருந்தது. காலப்போக்கில் தென்னை மரங்கள் நடப்பட்டதால் நெல் வயல்கள் இப்போது 200 ஏக்கருக்கும் குறைவாகச் சுருங்கிவிட்டன. அங்கு இப்போது வாழையும், நெல்லும் கலந்து பயிரிடப்பட்டுள்ளன.

நெல் Vs வாழை முட்டிக்கொள்ளும் விவசாயிகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிலையில், ‘இனி கல்படி ஏலாவில் நெல் மட்டுமே பயிரிட வேண்டும். இப்போது சாகுபடி செய்திருக்கும் வாழைகளிலிருந்து குலைகள் வெட்டியபிறகு புதிதாக வாழை நடக் கூடாது. அப்படி நட்டால் வாழைக்கன்றுகளை அகற்றுவோம்’ என்று கல்படி ஏலா நெல் விவசாயிகள் முன்னேற்றச் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. ‘வாழைச் சாகுபடியில்தான் லாபம் கிடைக்கிறது. அதனால நாங்கள் தொடர்ந்து வாழை பயிரிடுவோம்’ என்று வாழை விவசாயிகள் ஒன்று சேர்ந்து கூறிவருவதால் விவசாயிகள் மத்தியில் உரசல் ஏற்பட்டிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுபற்றி நெல் விவசாயிகள் முன்னேற்றச் சங்கத் தலைவர் சரவணனிடம் பேசினோம். “கல்படி ஏலாவுல ஆதி காலத்தில இருந்தே நெல் பயிர்தான் போடுறாங்க. இடையில வறட்சி, நஷ்டம் போன்ற காரணங்களால எந்தப் பயிர் வேணும்னாலும் போடலாம்னு விவசாயிகள் சேர்ந்து முடிவு செஞ்சோம். இதனால அதிக அளவுல வாழை பயிர் போட தொடங்கிட்டாங்க. நாளடைவில அதுவே பிரச்னையா மாறிடுச்சு. வாழைத் தோட்டம் போடும்போது நீளவாக்கில ஆழமா கால்வாய் வெட்டுவாங்க. இதனால சமதளத்துல கிடக்குற வயலுக்குத் தண்ணீர் ஏறாது. நெல் மூணு மாச பயிர்ங்கிறதுனால ரெண்டு மாசம் தாண்டுன உடனே குளத்து மடை தண்ணீரை அடைச்சிருவோம். அப்பதான் மிஷின் இறக்கி அறுவடை செய்ய ஏதுவாக வயல் தெவரும் (ஈரப்பதம் குறையும்). ஆனா வாழை ஒரு வருஷ பயிர். அவங்களுக்கு எப்பவும் தண்ணீர் வேணும்ங்கிறதுனால மடையைத் திறக்கச் சொல்லுவாங்க. நாங்க மடையை அடைப்போம், மீண்டும் அவங்க திறப்பாங்க பிரச்னை ஏற்படும். நெல் விவசாயத்தை மீட்டெடுப்பதற்காக நெல் விவசாயிகள் சேர்ந்து இனி கல்படி ஏலாவுல நெல் பயிர் மட்டும்தான் பயிரிடணும் என முடிவு எடுத்திருக்கிறோம். அதனால கல்படி ஏலாவில 30.9.2020-க்குள் மற்ற பயிர்களை மாற்றிவிட்டு நெல் பயிர் மட்டுமே போடணும்னு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம்” என்றார்.

நெல் Vs வாழை முட்டிக்கொள்ளும் விவசாயிகள்!

இதுகுறித்து வாழை விவசாயி முத்துக்குமாரிடம் பேசினோம். “நெல் விவசாயம் செய்தால் நில உரிமையாளருக்கு எந்தப் பிரயோஜனமும் கிடைக்காது. நெல்லுக்கு விலை குறைவு, ஆனா வேலை செய்யுறவங்களுக்குச் சம்பளம் அதிகம். வரப்பு வெட்டுறதுக்கு ஒரு ஆளுக்கு 750 ரூபாய் சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கு. நெல் விவசாயத்தால தொடர்ந்து நஷ்டப்பட்டுகிட்டே இருந்தோம். எத்தனை வருஷம்தான் நஷ்டப்பட்டு விவசாயம் செய்ய முடியும்? 2015-க்கு பிறகு வாழை நட்டதால எங்களுக்குக் கொஞ்சம் லாபம் கிடைக்குது. தண்ணி திறக்கிறதுலயோ வேறு எந்த விஷயத்திலயோ விவசாயிகளுக்குள் இதுவரைக்கும் எந்தப் பிரச்னையும் இல்ல. ஆனால் இப்ப வாழை நட்டால் பிடுங்கி எறிவோம்னு அவங்க சொல்லுறது என்ன நியாயம்” என்றார்.

நெல் Vs வாழை முட்டிக்கொள்ளும் விவசாயிகள்!

இந்தப் பிரச்னைகுறித்து வேளாண் துணை இயக்குநர் முருகேசனிடம் கருத்து கேட்டோம். “நெல் விவசாயத்த பொறுத்தமட்டில அடிக்கடி அங்கபோய் வேலை செய்யவேண்டியது இருக்கும். அதனால செலவு கூடுதலா ஆகும். உழவு, நடவு, களைப் பறிக்க என அடிக்கடி நெல் பயிருக்கு வேலை செய்ய வேண்டியது இருக்கும். ஆனா வாழைக்கு அவ்வளவு உடலுழைப்புக் கொடுக்கவேண்டியது இல்ல. அதிலேயும் கேரளாவை ஒட்டிய விளவங்கோடு தாலுக்கா பகுதிகள்ல நெல் வயல்களை வாழை விவசாயிகள் பாட்டத்துக்கு (ஒத்திக்கு) எடுக்கிறாங்க. நெல் பயிரிட்டால் விவசாயிக்கு எவ்வளவு வருவாய் கிடைக்குமோ, அந்தத் தொகையை வாழை நடுறவங்க கொடுத்திடுறாங்க. இதனால அந்தப் பகுதிகளில நெல் விவசாயமே அழிஞ்சிருச்சு. சாப்பாடு போடுற நெல் பயிரைக் குறைக்காதீங்கன்னு ஒவ்வொரு விவசாயிகள் கூட்டத்திலயும் வலியுறுத்திட்டுதான் வருகிறோம். பட்டா நிலத்தில் விவசாயம் செய்யும்படி அறிவுறுத்தி நாங்கள் வழிகாட்டலாம். ஆனால் இன்ன பயிர்தான் நீங்க போடணும் என விவசாயிகளை நாங்க கட்டாயப்படுத்த முடியாது. விவசாயிகள் தங்களுக்குள்ள ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தி இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism