Published:Updated:

பணம் தரும் பனையை வளர்க்க ஆலோசனை சொல்லும் வேளாண்துறை!

பனை மரங்கள்

பனையை வளர்த்திட எந்தவித தனி கவனமும் தேவையில்லை. எல்லா மண்ணிலும் எவ்வித சரிவான பகுதியிலும் குளக்கரையிலும் ஆற்றின் கரையிலும் எங்கு வேண்டுமானாலும் நாம் பனை மரத்தை நடலாம்.

பணம் தரும் பனையை வளர்க்க ஆலோசனை சொல்லும் வேளாண்துறை!

பனையை வளர்த்திட எந்தவித தனி கவனமும் தேவையில்லை. எல்லா மண்ணிலும் எவ்வித சரிவான பகுதியிலும் குளக்கரையிலும் ஆற்றின் கரையிலும் எங்கு வேண்டுமானாலும் நாம் பனை மரத்தை நடலாம்.

Published:Updated:
பனை மரங்கள்

பனை வளர்ப்பு சம்பந்தமாகக் காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் முனைவர் இளங்கோவன் பகிரும் தகவல் இடம் பெறுகிறது.

``பல மரங்கள் நமக்கு உணவு, உடை, உறையுள் தருகின்றன... இந்தச் சிறப்பு மரவகைகளில் மூங்கிலைவிட வறட்சி தாங்குவதிலும் நீடித்து நிலைத்து பாதுகாப்பு செய்வதிலும் சிறந்ததுதான் பனைமரம். ஆம், பனை, விவசாயிக்கு எந்த சிரமமும் தராது. தன் வலிமையால் இரும்பைவிட உறுதியாக நிலைத்து நிற்கும் எந்த புயலையும் சமாளிக்கும்.

மண்ணை பல்வித உயிரினப் பெருக்கத்துக்கும் ஏற்றதோடு, காற்று, மழை மூலம் வளமான மண்ணரிப்பு ஏற்படாமல் தடுக்கிறது. இப்படி மண்ணைக் காக்கும் காவல் தெய்வம் பனையே என்கிறார் வேளாண் அதிகாரி பா.இளங்கோவன், மேலும் பனையின் பயன்களையும் நடவு செய்ய வேண்டிய அவசியத்தையும் கூறுகிறார்.

பனை
பனை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வறட்சியிலிருந்து மனிதனைக் காத்திட பதனீர், நுங்கு, திண்பண்டம், பானம் தருவதுடன் எரிப்பதற்குரிய பாகங்களையும் தரும். அத்துடன் குடியிருக்க கட்டும் வீட்டுக்கு கூரை அமைத்திடவும் பனைமரம் பயன்படுகிறது.

இவற்றை வளர்த்திட எந்தவித தனிகவனமும் தேவையில்லை. எல்லா மண்ணிலும் எவ்வித சரிவான பகுதியிலும், குளக்கரையிலும் ஆற்றின் கரையிலும் ஏன் எங்கு வேண்டுமானாலும் நாம் பனை மரத்தை விரும்பி நட்டு அழகு பார்க்கலாம். சாதாரணமாக ஒரு பனைமரம் 30 முதல் 50 அடிவரை வளரும் திறன் கொண்டது. இருக்கும் இடத்துக்கு ஏற்றவாறு பயிர்களை நடவிரும்பும் அனைவரும் பனையை நடலாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

செங்கல் சூலைக்கும், வாய்க்கால் பாதைக்கும் கட்டடப் பணிக்கும் உதவும் பனை, பல குடிசைகளுக்கு பனை மரத்தின் பாகங்கள் நிலையான பயனைத் தருகிறது. பனைமரங்கள் அந்தக் காலத்தில் வரப்பை வலுப்படுத்தவும் ஒரு விவசாயிக்கும் அடுத்தவருக்கும் இடையில் வரப்பு தகராறு வராமல் தடுக்கவும் பயன்பட்டது.

அதிக நீர் தேவைப்படும் இளநீர் தரும் தென்னை மரங்களே தேடி நட்ட நாம் உயிரினப் பெருக்கம் பராமரித்து மழை பெற பாளை விடும்போது சில்வர் நைட்ரேட் வெளிவிடும் அற்புத மரமான பனையை மறந்துவிட்டோம். இதன் பலன்தான் மண் அரிப்பும், காற்றால் மண்வள பாதிப்பும் இன்று பல இடங்களில் ஏற்படுகிறது.

பனை மரம்
பனை மரம்
ம.அரவிந்த்

ஏன் இந்த இடம் இப்படி புழுதியாக உள்ளது? ஏன் இந்த இடம் இத்தனை மணற்சாரியாக உள்ளது? ஏன் இந்த இடம் கரடுமுரடாக உள்ளது? இந்த இடங்களில் எதுவுமே வராது. எந்தப் பயிரும் வளராது என நினைக்கும் இடங்களிலும் பனை வளரும். ஆம், அங்கு பனையை நட்டு வளர்க்கலாம்.

ஒரு பனைமரம் உள்ள இடத்தில்தான் பலவித உயிரினங்கள் வாழ முடிகிறது. ஆம் எறும்பு, ஓணான், பல்லி, பாம்பு, ஈ, கொசு, அணில்கள், எலிகள், பருந்து, வானம்பாடி, தூக்கணாங்குருவி, பச்சைக்கிளி, மைனா, மயில்கள், ஆந்தைகள், வௌவால்கள், உடும்பு, மரநரி மற்றும் மரநாய்கள் முதலிய பல்வகைவிதமான உயிரினங்கள் வாழ்க்கை நடத்தும் அற்புத புகலிடம் பனைமரம் தான். விவசாயிக்கு தொண்டுபுரியும் சேவகனாக இருக்கும் ஒரு பனை மரம் 10,000 லிட்டர் நீரையும் சேமிக்கும்.

எனவே, பனையை நம் நிலத்தில், பயிர் திட்டத்தில் சேர்த்து வளர்ப்போம். அதற்கான ஆலோசனைக்கு எங்கள் அலைபேசி எண் 98420 07125 –க்கு தொடர்புகொள்ளுங்கள்'' என்று காஞ்சிபுரம் வேளாண்மை இணை இயக்குநர் பா.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.