Published:Updated:

தமிழ்நாட்டில் மக்கானா, வாட்டர்செஸ்நட் சாகுபடி செய்யலாமா?

வாட்டர்செஸ்நட்
பிரீமியம் ஸ்டோரி
வாட்டர்செஸ்நட்

நீங்கள் கேட்டவை

தமிழ்நாட்டில் மக்கானா, வாட்டர்செஸ்நட் சாகுபடி செய்யலாமா?

நீங்கள் கேட்டவை

Published:Updated:
வாட்டர்செஸ்நட்
பிரீமியம் ஸ்டோரி
வாட்டர்செஸ்நட்

‘‘வட மாநிலங்களில் சாகுபடி செய்யப்படும் மக்கானா, வாட்டர் செஸ்நட் பயிர்களை தமிழ்நாட்டில் சாகுபடி செய்ய முடியுமா?’’

கே.விசாலாட்சி, மருங்குளம்.

மூத்த வேளாண் விஞ்ஞானி முனைவர் அ.உதயகுமார் பதில் சொல்கிறார்.

உதயகுமார்
உதயகுமார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘கடந்த ஆண்டு சத்தீஸ்கர் மாநிலத்தின் அப்போதைய தம்தரி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் பிரசன்னா (தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்) அழைத்ததன் பேரில் ஒரு குழுவாக அங்கு சென்றிருந்தோம். பல பகுதிகளைப் பார்வையிட்டோம். இயற்கை விவசாயம் குறித்து அங்கிருக்கும் விவசாயிகளுக்குப் பயிற்சி கொடுத்தோம். அவர்களிடமிருந்து நாங்களும் பல தகவல்களைத் தெரிந்துகொண்டோம். அவற்றில் முக்கியமானவை மக்கானா, செஸ்நட் என்ற இரண்டு பயிர்கள். அவை குறித்து பசுமை விகடனில் விரிவான கட்டுரையும்கூட வெளிவந்தது.

சத்தீஸ்கரிலிருந்து மக்கானா, வாட்டர் செஸ்நட் விதைகளை வாங்கி வந்தோம். வாட்டர் செஸ்நட்டை ஆய்வு நோக்கில், சிறிய அளவில் வளர்த்துப்பார்த்தேன். நன்றாக வளர்ந்து வந்தது. ஆனால், கோடைக்காலம் தொடங்கியதும் கருகிவிட்டது. இவ்வளவுக்கும் முறையாகப் பராமரித்தோம். எனவே, நம் சூழ்நிலைக்கு வாட்டர் செஸ்நட் ஏற்றதல்ல. ஆனால், மக்கானா ஏற்றது. காரணம், மக்கானா தாமரைக் குடும்பத்தைச் சேர்ந்த பயிர்.

தமிழ்நாட்டில் மக்கானா, வாட்டர்செஸ்நட் சாகுபடி செய்யலாமா?

உலகின் பல நாடுகளில் இது வணிகரீதியாகப் பயிர் செய்யப்படுகிறது. இந்தியாவில் பீஹார் மாநிலத்தில்தான் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் இந்தப் பயிர் வேகமாகப் பரவிவருகிறது. இதைச் சாகுபடி செய்வதற்குத் தண்ணீர் வசதி மிகவும் அவசியம். நெல் சாகுபடி செய்யும் நிலங்கள் ஏற்றவை. நெல் வயல்கள், பண்ணைக்குட்டைகள், சிறிய குட்டைகள் ஆகியவற்றில் இதைச் சாகுபடி செய்யலாம். இதன் விதைகளைச் சேகரித்துத்தான் விற்பனை செய்ய வேண்டும்.

இதற்கு நல்ல சந்தை வாய்ப்பு உள்ளது. `ஓர் ஆண்டுக்கு, ஒரு ஹெக்டேர் நிலத்திலிருந்து மூன்று டன் வரை விதைகள் கிடைக்கும்’ என்று சொல்கிறார்கள். இந்த விதைகளை அறுவடை செய்து அப்படியே விதையாக ஒரு கிலோ 70 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்கிறார்கள். `விதைகளை வறுத்துப் பொரியாக மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால், ஒரு கிலோவுக்கு 270 ரூபாய் விலை கிடைக்கிறது’ என்று சொல்கிறார்கள். ஒரு ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்ய, சுமார் 72,000 ரூபாய் வரை செலவாகும்.

தமிழ்நாட்டில் மக்கானா, வாட்டர்செஸ்நட் சாகுபடி செய்யலாமா?

சத்தீஸ்கர் மாநிலத்தில் சராசரியாக ஒரு ஹெக்டேர் பரப்பில் 2,600 கிலோ மகசூல் எடுக்கிறார்கள். அதை விற்பனை செய்யும்போது ஆண்டுக்கு 1,82,000 ரூபாய் வருமானம் கிடைப்பதாக உறுதியாகச் சொல்கிறார்கள். எப்படிப் பார்த்தாலும். செலவு போக ஒரு லட்சம் ரூபாய் லாபமாக நிற்கும். பொரியாக மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால், இன்னும் கூடுதல் லாபம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. தமிழ்நாட்டில் இந்தப் பயிரை இன்னும் யாரும் சாகுபடி செய்யவில்லை, எனவே, பெரிய அளவில் செய்ய வேண்டாம். பரிசோதனை முயற்சியாக 10 சென்ட் நிலத்தில் சாகுபடி செய்யுங்கள். இதில் கிடைக்கும் அனுபவங்களைக்கொண்டு விரிவுபடுத்திக் கொள்ளலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மக்கானா விதைகளை நேரடியாகவும் விதைக்கலாம். நாற்றாகவும் நடவு செய்யலாம். வயல்களில் சாகுபடி செய்ய, நாற்று நடவு முறைதான் ஏற்றது. 25 டிகிரி செல்சியஸ் முதல் 35 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பநிலை, ஆண்டுக்கு 100 சென்டிமீட்டர் முதல் 250 சென்டிமீட்டர் வரை மழைப்பொழிவு, 50% முதல் 90% வரை காற்றின் ஈரப்பதம் ஆகியவை உள்ள பகுதிகளில் மக்கானா நன்றாக வளரும். ஜூன் மற்றும் நவம்பர் மாதங்கள் விதைப்புக்கு ஏற்றவை.

தமிழ்நாட்டில் மக்கானா, வாட்டர்செஸ்நட் சாகுபடி செய்யலாமா?

நெல்லுக்கான நாற்றங்கால்போல் தயார் செய்து நன்கு உழுது, ஒன்றரை அடி உயரத்துக்குத் தண்ணீர் கட்டி விதைகளைத் தூவிவிட வேண்டும். எப்போதும் நிலத்தில் தண்ணீர் அளவு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்ய... 20 கிலோ அளவு விதை தேவைப்படும். விதைகள் முளைத்து 30 முதல் 40 நாள்களுக்குள் கொடிபோலப் படரத் தொடங்கும். அந்தச் சமயத்தில் கொடிகளை எடுத்து நடவு செய்துவிட வேண்டும். 40 நாள்களுக்கு மேல் தாமதிக்கக் கூடாது. அதனால், நாற்றுத் தயாராகிக்கொண்டிருக்கும்போதே நிலத்தைத் தயார்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். நாற்று நடவு செய்த 30 முதல் 40 நாள்களில் பூவெடுக்கும். பூவெடுத்ததிலிருந்து 40 நாள்களில் பழமாகி, விதைகள் உருவாகிவிடும். ஒரு செடியில் 25 பழங்கள் வரை உருவாகும்.

ஒரு பழத்தில் 60 முதல் 100 விதைகள் வரை இருக்கும். பழம் நன்கு பழுத்ததும் விதைகள் வெடித்துத் தண்ணீரில் மிதக்கும். இரண்டு நாள்களில் விதைகள் கீழே சென்று மண்ணில் படிந்துவிடும். அந்த நேரத்தில் இலைகளை விலக்கிவிட்டு, கூடை மூலமாக மண்ணை அரித்து விதைகளைச் சேகரிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் மக்கானா, வாட்டர்செஸ்நட் சாகுபடி செய்யலாமா?

பிறகு, மீண்டும் தண்ணீர் கொடுத்து வந்தால், அடுத்த பருவத்தில் மீண்டும் பூத்துப் பழங்கள் உருவாகும். இப்படி ஆண்டுக்கு நான்கு முறை அறுவடை செய்யலாம். ஓர் ஆண்டு முடிந்தவுடன் கொடிகளை அப்புறப்படுத்தி விட்டு மீண்டும் நிலத்தைத் தயார் செய்து நடவு செய்யலாம். மக்கானா சாகுபடி குறித்து, கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால், தம்தரி வேளாண் அறிவியல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.’’

தொடர்புக்கு,

1. முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர்,

வேளாண் அறிவியல் நிலையம், தம்தரி மாவட்டம், சத்தீஸ்கர் மாநிலம்.

தொலைபேசி: 07722 219130.

2. அ.உதயகுமார், செல்போன்: 94425 42915

‘‘காளான் வளர்ப்பு குறித்துப் பயிற்சி பெற விரும்புகிறோம். எங்கு தொடர்புகொள்வது?’’

வெங்கடேசபெருமாள், திண்டுக்கல்.

‘‘கோயம்புத்தூரிலுள்ள காளான் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் மாதந்தோறும் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. கட்டண அடிப்படையில் நடைபெறும் இந்தப் பயிற்சி வகுப்பில் காளான் வளர்ப்பு குறித்து அனைத்து நுட்பங்களையும் கற்றுக் கொடுக்கிறார்கள் விஞ்ஞானிகள்.’’

தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், காளான் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம், பயிர் நோயியல் துறை,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

கோயம்புத்தூர் - 641 003

தொலைபேசி: 0422 6611336, 6611226

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழ்நாட்டில் மக்கானா, வாட்டர்செஸ்நட் சாகுபடி செய்யலாமா?

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com PasumaiVikatan என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism