Published:Updated:

சாண எரிவாயு... சலுகைப்படியுடன் பயிற்சி!

சாண எரிவாயு
பிரீமியம் ஸ்டோரி
சாண எரிவாயு

நீங்கள் கேட்டவை

சாண எரிவாயு... சலுகைப்படியுடன் பயிற்சி!

நீங்கள் கேட்டவை

Published:Updated:
சாண எரிவாயு
பிரீமியம் ஸ்டோரி
சாண எரிவாயு

‘‘சாண எரிவாயு கலன் அமைக்க எங்கு பயிற்சி கொடுக்கிறார்கள்... அதன் விவரங்களைச் சொல்லுங்கள்...’’

- எஸ்.செல்லமுத்து, திருப்பூர்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பொறியியல்துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் சு.புகழேந்தி பதில் சொல்கிறார்...

சாண எரிவாயு... சலுகைப்படியுடன் பயிற்சி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘இன்றைய சூழ்நிலையில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் உற்பத்திப் பெருக்கமும், மாசற்ற முறையில் எரிபொருளை உற்பத்தி செய்வதும் இன்றியமையாதவை. புதுடெல்லியிலுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் நிதியுதவியுடன், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலுள்ள புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பொறியியல்துறை 2019-20-ம் ஆண்டுக்கான பயிற்சிகளை நடத்தவிருக்கிறது. பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது இந்தப் பயிற்சி. கலந்துகொள்பவர்களுக்கு சுய தொழில் ஈடுபடவும், ஊரக வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ளவும் இது ஏதுவாக அமையும்.

சாண எரி வாயு கலன் அமைக்கும் சுழற்சாவி (Turnkey) முகவர்களுக்கான பயிற்சியில் வேளாண்மையில் பட்டயப் படிப்பு மற்றும் இதர பட்டயப் படிப்பு முடித்த அல்லது வேலையில்லா பட்டதாரிகள் கலந்துகொள்ளலாம். 15 நாள்கள் பயிற்சிக் காலம். தினமும் சலுகைப்படி ரூ.300-ம் பயணப்படியும் வழங்கப்படும். அடுத்து. சாண எரிவாயு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும். இதில் விவசாயிகள் அல்லது பெண் தொழில்முனைவோர்கள் கலந்துகொள்ளலாம். 10 நாள்கள் பயிற்சி நடைபெறும். தினமும் 250 ரூபாய் சலுகைப்படி வழங்கப்படும். இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் 31.01.2020-க்குள் எங்கள் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு மேற்கொண்டு தகவல்கள் பெறலாம்.’’

தொடர்புக்கு,

திட்ட ஒருங்கிணைப்பாளர்,

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பொறியியல்துறை,

வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 641 003.

தொலைபேசி: 0422-6611276

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘கால்நடைகளுக்கு மரவள்ளித் தோலைக் கொடுக்கலாமா, வேறு என்ன வகையான தீவனங்களைக் கொடுக்கலாம்?’’

- கே.குணவதி, தலைவாசல்

‘‘மரவள்ளித் தோல் மட்டுமல்ல, மரவள்ளி இலை, மரவள்ளி திப்பி, மாந்தோல், வேப்பம் பிண்ணாக்கு, பருத்திக்கொட்டை உமி ஆகியவற்றையும்கூடக் கொடுக்கலாம். மரவள்ளி இலை தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் அறுவடைக் காலங்களில் அதிகம் கிடைக்கிறது. மரவள்ளி இலையில் புரதம், சுண்ணாம்பு, தாது உப்புகள் அதிகம் உள்ளன. உலர்ந்த இலைகளைக் கால்நடைகளுக்கு அளிப்பதால் நச்சு ஏற்படாது. மரவள்ளித் தோலில் மூன்று சதவிகிதம் புரதம் உள்ளது. நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஈரத்தோலில் ஹைட்ரோ சயனிக் அமிலம் இருப்பதால், உலர்ந்த மரவள்ளித் தோலை மாடுகளுக்கு நாளொன்றுக்கு மூன்று முதல் ஐந்து கிலோ வரையும், ஆடுகளுக்கு அரைக் கிலோ வரையும் தீவனமாகக் கொடுக்கலாம்.

சாண எரிவாயு
சாண எரிவாயு

மரவள்ளி திப்பியில் நான்கு சதவிகிதம் புரதம், 30 சதவிகிதம் நார்ப் பொருள்கள் அடங்கியுள்ளன. ஈரத் திப்பியை மூன்று முதல் ஐந்து கிலோ வரை கால் நடைகளுக்கு அளிக்கலாம் அல்லது உலர்ந்த திப்பியை முப்பது விழுக்காடு வரை கலப்புத் தீவனத்தில் சேர்க்கலாம். தோல் நீக்கிய புளியங்கொட்டைத்தூளில் 12 சதவிகிதம் செரிமானப் புரதமும், 65 சதவிகிதம் மொத்த செரிமானச் சத்துக்களும் உள்ளன. இந்தத் தூளை நாளொன்றுக்கு 1.5 கிலோ வீதம் கால்நடைகளுக்குக் கொடுக்கலாம்.

மாம்பழத் தோல் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அதிகம் கிடைக்கிறது. மாம்பழத் தோலில் ஈரப்பதம் அதிகமிருப்பதால், அதை மரவள்ளித் திப்பி அல்லது தவிட்டுடன் 40:60 என்ற அளவில் கொடுக்கலாம். வேப்பம் பிண்ணாக்கில் புரம் அதிகம் உள்ளது. வேப்பம் பிண்ணாக்குக் கசப்பு சுவைகொண்டதால், கால்நடைகள் விரும்பி உண்பதில்லை. எனினும், கால்நடைகளின் அடர் தீவனத்தில் 20 விழுக்காடு வரை சேர்க்கலாம். இதில் சில நச்சுப் பொருள்கள் இருப்பதால், இனவிருத்திக்குப் பயன்படுத்தப்படும் கால் நடைகளுக்கு இது உகந்ததல்ல.

கருவேலம் காயில் ஆறு சதவிகிதம் செரிமானப் புரதம் இருக்கிறது. ஆடுகள் இதை விரும்பி உண்ணும். பருத்திக்கொட்டை உமியைப் பருத்தி ஆலைகளிலிருந்து பெறலாம். இதில் 35 முதல் 45 சதவிகிதம் வரை செல்லுலோஸ், 15 முதல் 20 சதவிகிதம் வரை லிக்னின் (Lignin) உள்ளன. இதில் சத்துக்கள் குறைவு. கறவை மாடுகளுக்கு தினமும் இரண்டு முதல் மூன்று கிலோ வரை தண்ணீரில் ஊறவைத்துத் தரலாம்.’’

சாண எரிவாயு... சலுகைப்படியுடன் பயிற்சி!

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக்கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com PasumaiVikatan என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.