Published:Updated:

பாசனக்குழாய் அமைக்க மானியம்!

நீங்கள் கேட்டவை
பிரீமியம் ஸ்டோரி
நீங்கள் கேட்டவை

நீங்கள் கேட்டவை - புறா பாண்டி

பாசனக்குழாய் அமைக்க மானியம்!

நீங்கள் கேட்டவை - புறா பாண்டி

Published:Updated:
நீங்கள் கேட்டவை
பிரீமியம் ஸ்டோரி
நீங்கள் கேட்டவை

‘‘பாசனக்குழாய் அமைக்க அரசு மானியம் வழங்குகிறது எனக் கேள்விப்பட்டோம். இதை எப்படிப் பெறுவது?’’

- ஆர்.நடராஜன், சிதம்பரம்.

‘‘நீர்ப்பாசனத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழக அரசு அதிக ஆர்வம் காட்டிவருகிறது. துணை நீர் மேலாண்மைச் செயல்பாடுகள் திட்டத்தின்கீழ், நுண்ணீர்ப்பாசன முறையை அமைப்பதற்கு முன்வரும் விவசாயிகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில், குழாய்க்கிணறு, துளைக்கிணறு அமைக்கவும், நீரை இறைப்பதற்கு ஆயில் இன்ஜின், மின் மோட்டார் வசதி ஏற்படுத்தவும், பாசன நீரை வீணாக்காமல் வயலுக்கு அருகில் கொண்டு செல்வதற்கு, பாசனநீர்க்குழாய்களை நிறுவவும், தரைநிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தல் போன்ற துணைநிலை நீர் மேலாண்மைப் பணிகளுக்கும் அரசு மானியம் வழங்குகிறது.

பாசனக்குழாய்
பாசனக்குழாய்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நுண்ணீர்ப் பாசனத் திட்டத்துக்காக நுண்ணீர்ப் பாசன மேலாண்மை தகவல் அமைப்பு (MIMIS) இணையத்தில் பதிவுசெய்யும் போதே இந்தத் திட்டத்துக்காகவும் பதிவுசெய்ய வேண்டும். இந்தப் பணிகளுக்கான மானியம் நுண்ணீர்ப் பாசனமுறையைப் பின்பற்றுவதற்கு முன்வரும் விவசாயிகளுக்கு மட்டும் வழங்கப்படும்.

துணை நீர் மேலாண்மைச் செயல்பாடுகள் திட்டத்தில் வழங்கப்படும் மானியத்தொகை குறித்துப் பார்ப்போம். பாதுகாப்பான குறுவட்டங்களில், குறைந்த மிதமான ஆழமுள்ள துளைக்கிணறு/குழாய்க் கிணறுஅமைக்க 50 சதவிகித மானியத்தொகை ரூ.25,000-க்கு மிகாமல் வழங்குகிறார்கள். டீசல் பம்ப்செட்/மின் மோட்டார் நிறுவுவதற்கு 50 சதவிகித மானியத்தொகை ரூ.15,000-க்கு மிகாமல் கொடுக்கிறார்கள். பாசனக்குழாய்கள்அமைக்க 50 சதவிகித மானியத்தொகை ஒரு ஹெக்டேருக்கு ரூ.10,000 வழங்குகிறார்கள். (ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக ஒரு ஹெக்டேர் வரை மட்டுமே மானியம் வழங்கப்படும்).

பாசனக்குழாய்
பாசனக்குழாய்

தரைநிலை நீர்ச் சேகரிப்புத் தொட்டி அமைக்க 50 சதவிகித மானியத்தொகையாக ஒரு கனமீட்டருக்கு ரூ.350 வீதம் ஒரு பயனாளிக்கு ரூ.40,000 வரை கொடுக்கிறார்கள்.

இந்தத் திட்டம் குறித்துக் கூடுதல் விவரம் பெற, உங்கள் பகுதியிலுள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்புகொள்ளவும். நுண்ணீர்ப் பாசனத் திட்டத்துக்கான இணையதளத்தையும் பார்க்கலாம்.’’

http://tnhorticulture.tn.gov.in:8080/

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``விதை மூலம் சின்ன வெங்காயத்தை நடவுசெய்ய முடியுமா, இதைப் பற்றி விளக்கமாகச் சொல்லுங்கள்...’’

- கே.பரமசிவம், திண்டிவனம்.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி `கேத்தனூர்’ பழனிசாமி பதில் சொல்கிறார்.

farmer
farmer

‘‘சின்ன வெங்காயத்துக்கு எப்போதும் மவுசு உண்டு. நல்ல மழை பெய்தால், அந்த ஆண்டு சின்ன வெங்காயத்தின் விலை ஏறுவது வழக்கம். திருப்பூர் மாவட்டத்திலுள்ள விவசாயிகளுக்கு சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய அதிக ஆர்வம். ஆனால், இங்கு நிலவும் தட்பவெப்பநிலை அதற்கு ஏற்றதாக இல்லை. எனவே, எங்கள் பகுதி விவசாயிகள் பெரிய வெங்காயத்துக்கு மாறிவிட்டார்கள். சின்ன வெங்காயம் வெப்பத்தை விரும்பும் பயிர். எங்கு அதிகமாக வெப்பமிருக்கிறதோ, அங்கே நன்றாக விளையும்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் கடலூர் அருகிலிருக்கும் ‘யானைமேடு’ பகுதியிலுள்ள நண்பரின் தோட்டத்துக்குச் சென்றிருந்தேன். அங்கே சின்ன வெங்காயத்தை விதை மூலம் நாற்றுவிட்டு நடவுசெய்திருந்தார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. உடனே அதன் சாகுபடி நுட்பங்களைக் கேட்டறிந்து, என்னுடைய தோட்டத்தில் சாகுபடி செய்தேன். விதை வெங்காயத்தை நாற்றங்கால் விட்டு, அதில் 40 நாள்கள் வளர்த்து நடவு செய்ய வேண்டும்.

இப்படிச் செய்தால், 80 நாள்களில் அறுவடைக்கு வந்துவிடும். இந்த முறையில் நடவுசெய்ய ஏக்கருக்கு ஒரு கிலோ விதை இருந்தால் போதும். ஆனால், நேரடியாகக் வெங்காயத்தை விதைக்கும்போது, ஏக்கருக்கு அதிகபட்சம் ஒரு டன் அளவுக்கு விதை தேவைப்படும்.

தற்போதைய நிலவரப்படி கிலோ 40 ரூபாய் என்று வைத்துக்கொண்டாலும், ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் விதைப்பு காய்க்காகவே செலவு பிடிக்கும். அதேசமயம், விதை வெங்காயத்தின் விலை ஒரு கிலோ 4,500 ரூபாய் மட்டுமே பிடிக்கும். இதை இன்றைய மதிப்பில் குறிப்பிட்டிருக்கிறேன். விவசாயிகளுக்கு 40 ஆயிரம் ரூபாய் சாகுபடிச் செலவு குறைவு என்பதை எல்லோருக்கும் தெரிவித்தேன்.

பாசனக்குழாய் அமைக்க மானியம்!

கோயம்புத்தூரிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துக்கும் இந்த நல்ல விஷயத்தைத் தெரியப்படுத்தினேன். முதலில் விஞ்ஞானிகள், இதை நம்பவில்லை. ஆனால், நானும் விடவில்லை. தொடர்ந்து சின்ன வெங்காயச் செடிகளுடன் பல்கலைக்கழகத்துக்குச் சென்று வந்தேன். ஒருகட்டத்தில், `நல்ல முயற்சி’ என்று விஞ்ஞானிகள் பாராட்டினார்கள். சில ஆண்டுகள் கழித்து, சின்ன வெங்காயத்தை விதை மூலம் நடவுசெய்யலாம் என்று சொல்லி `கோ.ஆன்’ என்ற பெயரில் புதிய ரகத்தை வெளியிட்டார்கள் என்பது தனிக்கதை.

பாசனக்குழாய் அமைக்க மானியம்!

தற்போது பாரம்பர்ய ரகம் புழக்கத்தில் இல்லை. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ரகங்கள்தான் விவசாயிகளால் சாகுபடி செய்யப்படுகின்றன. குறுகியகாலப் பயிர், குறைந்த நீர் மற்றும் சாகுபடிச் செலவு உள்ளிட்ட காரணங்களால் பெரம்பலூர், திருநெல்வேலி, ஈரோடு, கோவை, திருப்பத்தூர், திண்டுக்கல், திருப்பூர், திருச்சி, நாமக்கல், பொள்ளாச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

சின்ன வெங்காயம் சாகுபடி செய்வதில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. ரசாயனத்தைக் கொட்டி சின்ன வெங்காயத்தைச் சாகுபடி செய்தால் விளைச்சல் நன்றாக இருக்காது.

இயற்கை உரங்களைப் பயன்படுத்தினால் நல்ல விளைச்சலும் கிடைக்கும்; வெங்காயமும் ருசியாக இருக்கும். சின்ன வெங்காயம் சாகுபடி செய்தே வாழ்க்கையில் முன்னேறிய விவசாயிகள் இருக்கிறார்கள். குறைந்தபட்சம் ஐந்து டன் மகசூலும் அதிபட்சம் ஒன்பது டன் மகசூலும் கொடுக்கும்.’’

தொடர்புக்கு, செல்போன்: 99439 79791.

பாசனக்குழாய் அமைக்க மானியம்!

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக்கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com PasumaiVikatan என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.