Published:Updated:

`இனியெல்லாம் இயற்கையே!' பசுமை விகடனின் இயற்கை விவசாயப் பயிற்சி #PasumaiVikatan #OrganicFarming

இயற்கை விவசாயப் பயிற்சி
இயற்கை விவசாயப் பயிற்சி

மூன்று நாள்கள்... நிலத்திலேயே தங்கி இயற்கை விவசாய நுட்பங்களைக் கற்றுக்கொள்ளும், செயல்முறை பயிற்சி திருப்பூரில் நடக்கவிருக்கிறது.

இயற்கை விவசாயம் காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டது. தமிழகத்தில் இயற்கை விவசாயத்தைப் பரப்பியதில் பசுமை விகடனுக்கு முக்கிய இடமிருக்கிறது. வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், ஜீரோபட்ஜெட் பிதாமகன் பாலேக்கர் ஆகியோர் மூலம் அந்தப் பணிகளை முன்னெடுத்துச் சென்றது பசுமை விகடன்.

`ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,000; 1லி பாலுக்கு ரூ.60' - பசுமை விகடன் பட்ஜெட் பரிந்துரைக் கூட்டத்தில் ஒலித்த குரல்!

இலவச பயிற்சிகள், கட்டண பயிற்சிகள் எனப் பல்வேறு பயிற்சிகளைத் தமிழகம் முழுவதும் நடத்தியிருக்கிறது. அதன் அடுத்த கட்டமாக இனியெல்லாம் இயற்கையே என்ற தலைப்பில் மூன்று நாள்கள் களப்பயிற்சி ஒன்று திட்டமிடப்பட்டுள்ளது.

பசுமை விகடன் மற்றும் அறப்பொருள் வேளாணகம் இணைந்து நடத்தும் களப்பயிற்சி, வரும் ஜனவரி 24, 25, 26 ஆகிய மூன்று நாள்கள் திருப்பூரில் நடைபெற உள்ளது. வழக்கமான பயிற்சியாக இல்லாமல் இந்தப் பயிற்சியில் பல்வேறு சிறப்பு வகுப்புகள் நடைபெற இருக்கின்றன. பயிற்சியில் பங்கேற்றும் அனைவரும் ஒரு குழுவாக வாட்ஸ்அப்பில் இணைக்கப்படுவார்கள். பயிற்சி முடிந்த பிறகும் அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அந்தக் குழுவில் பகிரலாம். அது தொடர்பான வல்லுநர்கள், தேவையான விளக்கங்களை அளிப்பார்கள். இது மூன்று நாள்கள் மட்டுமான பயிற்சியாக இல்லாமல் ஒரு இயக்கமாகத் தொடர்ந்து பயணிக்க இருக்கிறது.

வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், ஜீரோபட்ஜெட் பிதாமகன் பாலேக்கர் ஆகியோர் மூலம் அந்தப் பணிகளை முன்னெடுத்துச் சென்றது பசுமை விகடன்.
.

பஞ்சகவ்யா சித்தர், மருத்துவர் நடராஜன், கால்நடை மூலிகை மருத்துவம் தொடர்பாக மருத்துவர் புண்ணியமூர்த்தி, பூச்சியியல் வல்லுநர் செல்வம், நீர்மேலாண்மை வல்லுநர் பிரிட்டோ ராஜ், சித்த மருத்துவர் மைக்கேல் ஜெபராஜ், தோட்டக்கலை விஞ்ஞானி முனைவர் செந்தூர்குமரன், விதைகள் யோகநாதன், இயற்கை வேளாண்மை ஆலோசகர் ஏகாம்பரம் உள்ளிட்ட பல்வேறு வல்லுநர்கள் பயிற்சியளிக்க இருக்கிறார்கள். திருப்பூர், மங்களம் சாலையில் உள்ள கிளாசிக் கார்டனில் பயிற்சி நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்துகொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு : 99406 51073 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அடுத்த கட்டுரைக்கு