Published:Updated:

சாதனை-1: நானே சாட்சி! - சுபாஷ் பாலேக்கர்

சுபாஷ் பாலேக்கர்
பிரீமியம் ஸ்டோரி
News
சுபாஷ் பாலேக்கர்

ஜீரோ பட்ஜெட்

தமிழ்நாட்டில் சுபாஷ் பாலேக்கர் (ஜீரோ பட்ஜெட்) இயற்கை விவசாய முறையை ஆயிரமாயிரம் விவசாயிகளிடம் கொண்டு சேர்த்த பெருமை பசுமை விகடன் இதழைச் சேரும். பசுமை விகடன் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட விழாவுக்காகத்தான் நான் தமிழ்நாட்டுக்கு வந்தேன். கடந்த 14 ஆண்டுகளில் பல முறை தமிழகம் வந்திருந்தாலும், அந்த முதல் பயணம் இன்னும் நினைவில் உள்ளது.

பசுமை விகடன்தான், இந்திய அளவில் மாற்று விவசாய முறையை மக்களிடம் கொண்டு சேர்த்த முதல் இதழ். செலவு குறைந்த இயற்கை விவசாயம்தான், விவசாயிகளுக்கு நன்மையைக் கொடுக்கும். நஞ்சில்லா உணவைக் கொடுக்கும். இந்த உண்மையை உரக்கச் சொல்லியது மட்டுமல்ல, மீண்டும் மீண்டும் சொல்லியது.

பசுமை விகடன் குழுவினர் பத்திரிகை பணியுடன் சுருக்கிக்கொள்ளாமல், எழுதுவதைக் களத்தில் செய்து காட்டி வருகிறார்கள். திண்டுக்கல், ஈரோடு மாநகரங்களில் பயிற்சி வகுப்புகளைப் பிரமாண்டமாக நடத்தினார்கள்.

ஈரோட்டில் நடைபெற்ற நான்கு நாள் பயிற்சி வகுப்பில் சுமார் 2,000 பேர் கலந்து கொண்டார்கள். இந்தப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்ட பல விவசாயிகள், பலருக்கும் வழிகாட்டியாக உயர்ந்து நிற்கிறார்கள்.

இந்திய அளவில் சிறந்த இயற்கை விவசாயிகள் உள்ள மாநிலமாகத் தமிழ்நாடு உயர்ந்து வருகிறது. இதற்கு மூலக்காரணமாக இருப்பது பசுமை விகடன்தான்.

பசுமை விகடன் இதழ் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகெங்கும் தமிழர்கள் வாழும் நாடுகளில் வாசிக்கப்படுகிறது. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய், ஆப்பிரிக்கா… என அந்தப் பட்டியல் நீளம். இந்த நாடுகளுக்கும் எனது இயற்கை விவசாய நுட்பம் சென்று சேர்ந்துள்ளது.

2019-20-ம் ஆண்டின் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘பிற தொழிலாளர்களைப் போலவே விவசாயிகளுக்கும் தொழில் மற்றும் வாழ்க்கையை நடத்துவது எளிமையாக இருக்க வேண்டும். இதற்காக ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்ற முறையைப் பின்பற்ற ஊக்குவிக்க இருக்கிறோம். ஜீரோ பட்ஜெட் விவசாயம் மூலம் அடிப்படை விஷயங்களுக்குத் திரும்பப் போகிறோம்.

சாதனை-1: நானே சாட்சி! - சுபாஷ் பாலேக்கர்

இது புதிய விஷயம் அல்ல. நாம் இந்த முறைகளை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். சில மாநிலங்களில் இம்முறை முன்னரே பின்பற்றப்பட்டு வருகிறது. அங்குள்ள விவசாயிகள் இதற்கான பயிற்சிக்குத் தயாராக இருக்கிறார்கள். இதுபோன்ற முயற்சிகள் 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக உயர்த்த உதவும்’ என்று சொன்னார். இதை 14 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னது பசுமை விகடன்தான்.

முன் எப்போதும் இல்லாத வகையில் விவசாயத்தின் மீது கவனம் திரும்பியுள்ளது. கொரோனா பெருந்தொற்று விவசாயத்தின் அருமை பெருமைகளை உணர வைத்துள்ளது. சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாய முறை மூலம் ஒரு ஏக்கர் நிலத்தில் ஆண்டுக்கு 3 முதல் 6 லட்சம் ரூபாய் வருமானம் பெற முடியும். குறைந்த செலவில் செய்ய முடியும் என்பதுதான் இதன் சிறப்பு. அந்த வகையில் தமிழ்நாட்டில் பைசா செலவில்லாமல் இயற்கை விவசாயப் புரட்சியைப் பசுமை விகடன் செய்து வருகிறது. இதற்கு நானே வாழும் சாட்சி!