Published:Updated:

ஒருங்கிணைந்த பண்ணையத்தில் `ஓஹோ' வருமானம்... பசுமை விகடன் நடத்தும் ஆன்லைன் பயிற்சி!

ஒருங்கிணைந்த பண்ணையம்
ஒருங்கிணைந்த பண்ணையம்

ஒருங்கிணைந்த பண்ணையத்தில் நன்கு அனுபவம் பெற்ற முன்னோடி விவசாயியும், பொன்னையா ராமஜெயம் வேளாண் கல்லூரி முதல்வருமான இளஞ்செழியன் இந்நிகழ்ச்சியில் வழிகாட்டுகிறார்.

விவசாயிகள் நிறைவான லாபம் பார்க்க, ஒருங்கிணைந்த பண்ணையம் பெரிதும் கை கொடுக்கிறது. நம் முன்னோர்கள் இதை இயல்பாகவே கடைப்பிடித்து வந்தார்கள். நெல் சாகுபடியோடு, ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்பு உள்ளிட்டவையிலும் ஈடுபடும்போது ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவாக, உரமாக மாறி பயன் அளிக்கிறது. இதனால் செலவு மற்றும் உழைப்பு குறைந்து, பல வழிகளிலும் கூடுதல் லாபம் கிடைக்கிறது. கால்நடை மற்றும் தாவரங்களின் கழிவுகள் அதிகமாகக் கிடைத்து உரமாகப் பயன்படுவதால் நிலத்தின் வளமும் அதிகரிக்கிறது.

இளஞ்செழியன்
இளஞ்செழியன்

இதனால் வெளியிலிருந்து இடுபொருள்கள் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. ரசாயன நஞ்சு இல்லாத உணவும் கிடைக்கிறது. கால்நடைகளுக்குத் தேவையான தீவனமும் பண்ணையத்துக்குள்ளேயே கிடைத்துவிடுகிறது. இதன் காரணமாகத்தான் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்துள்ள விவசாயிகள், நீடித்த நிலைத்த வெற்றியைப் பெற்று உத்தரவாதமான வருமானம் பார்க்கிறார்கள்.

எல்லாம் சரி... ஒருங்கிணைந்த பண்ணையத்தை எப்படி உருவாக்க வேண்டும், இது எல்லோருக்கும் சாத்தியமா, இதில் சறுக்கல்களே ஏற்படாதா, எந்தெந்த வகைகளில் செயல்பட்டால் வெற்றிக்கனிகளை சுவைக்கலாம் என உங்களுக்குள் ஏகப்பட்ட கேள்விகள், சந்தேகங்கள் இருக்கும் இல்லையா...

இப்படி ஒருங்கிணைந்த பண்ணையத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கும் விவசாயத்தில் உழைப்புக்கேற்ற லாபம் ஈட்ட முடியாமல் தவிக்கும் விவசாயிகளுக்கும் வழிகாட்டும் வகையில் பசுமை விகடன் ஏற்பாட்டில் `ஒப்பற்ற வருமானம் கொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம்’ என்ற தலைப்பில் ஆன்லைன் பயிற்சி நடைபெறவுள்ளது. ஒருங்கிணைந்த பண்ணையத்தில் நன்கு அனுபவம் பெற்ற முன்னோடி விவசாயியும் பொன்னையா ராமஜெயம் வேளாண் கல்லூரி முதல்வருமான இளஞ்செழியன் இந்நிகழ்ச்சியில் வழிகாட்டுகிறார்.

ஒருங்கிணைந்த பண்ணையம் ஆன்லைன் பயிற்சி
ஒருங்கிணைந்த பண்ணையம் ஆன்லைன் பயிற்சி

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள சித்தமல்லி மேல்பாதி கிராமத்தில் இவரது ஒருங்கிணைந்த பண்ணையம் அமைந்துள்ளது. 31 ஏக்கரில் பரந்து விரிந்து காணப்படும் இவரது பண்ணையத்தில் நெல், தென்னை, வேம்பு, தீவனப்புல் உள்ளிட்ட பலவிதமான பயிர்களும் ஆடு, மாடு, கோழி, வாத்து, புறா, முயல், மீன் உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன.

இந்த ஒருங்கிணைந்த பண்ணையத்தின் மூலம் இவர் ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய்க்கு மேல் லாபம் ஈட்டி வருகிறார். நவம்பர் 8-ம் தேதி காலை 10 - 12 மணி வரை நடைபெறும் `ஒப்பற்ற வருமானம் கொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம்’ பயிற்சியில் கலந்து கொண்டு விவசாயிகள் பயன்பெறலாம்.

நாள்: 8.11.2020, ஞாயிற்றுக்கிழமை,

நேரம்: காலை 8 மணி முதல் 10 மணி வரை

கட்டணம்: 250 ரூபாய்

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பதிவு செய்ய வேண்டியது அவசியம். பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

அடுத்த கட்டுரைக்கு