Published:Updated:

ஆடு, மாடு, கோழி வளர்ப்பு... சென்னைக்கருகில் நடக்கும் இந்தப் பயிற்சியை மிஸ் பண்ணிடாதீங்க?

கால்நடை வளர்ப்பு | அறிவிப்பு

கால்நடை வளர்ப்பு குறித்து வழிகாட்ட துறை சார்ந்த வல்லுநர்கள் தயாராக இருக்கிறார்கள். மொத்தத்தில் இந்த கால்நடை வளர்ப்பு குறித்து ஏ டு இசட் தகவல்களை இந்தப் பயிற்சியின் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.

ஆடு, மாடு, கோழி வளர்ப்பு... சென்னைக்கருகில் நடக்கும் இந்தப் பயிற்சியை மிஸ் பண்ணிடாதீங்க?

கால்நடை வளர்ப்பு குறித்து வழிகாட்ட துறை சார்ந்த வல்லுநர்கள் தயாராக இருக்கிறார்கள். மொத்தத்தில் இந்த கால்நடை வளர்ப்பு குறித்து ஏ டு இசட் தகவல்களை இந்தப் பயிற்சியின் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.

Published:Updated:
கால்நடை வளர்ப்பு | அறிவிப்பு

ஆடு, மாடு, கோழி, முயல், வெண்பன்றி... போன்றவற்றை சிறிய இடங்களில் வளர்த்து நல்ல லாபம் பார்த்து வருகின்றனர் விவசாயிகள். இதற்குப் பெரிய கொட்டகைகள், விளைநிலங்கள் என்றிருந்த நிலையில் நகரங்களையொட்டிய பகுதிகளிலும் சிலர் செய்து வருகின்றனர். இதை எப்படி முறையாகச் செய்ய வேண்டும், என்னென்ன விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும் உள்ளிட்ட விஷயங்களைக் கற்றுத் தர இருக்கிறது பசுமை விகடன் மற்றும் காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து நடத்தும் `லாபகரமான கால்நடைப் பண்ணை’ என்ற நேரடி பயிற்சி.

கால்நடை வளர்ப்பு | அறிவிப்பு
கால்நடை வளர்ப்பு | அறிவிப்பு

இந்தக் கால்நடை வளர்ப்பு பற்றிய நேரடி பயிற்சி ஆகஸ்ட் 26-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை செங்கல்பட்டு மாவட்டம், காட்டுப்பாக்கத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் (எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகம் எதிரில் மற்றும் பொத்தேரி ரயில் நிலையம் அருகில்) நடைபெறவுள்ளது.

முன்பதிவுக்கு https://bit.ly/3v6y0QJ

ஏன் கால்நடை வளர்ப்பை மேற்கொள்ள வேண்டும்?

ஆடு, கோழி இறைச்சிகளுக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பே உள்ளது. ஒரு கிலோ ஆட்டிறைச்சி உயிர் எடையாக ரூ.350-க்கு விற்கப்படுகிறது. அதே போன்று நாட்டுக்கோழி இறைச்சி உயிர் எடையாக ஒரு கிலோ 150 ரூபாயிலிருந்து 200 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஒரு நாட்டுக் கோழி முட்டை 10, 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இப்படி விற்பனை வாய்ப்புள்ள தொழிலை முறையாகச் செய்து, ஆடு, கோழிகளை முறையாகப் பராமரித்து செய்து வந்தாலே நல்ல லாபம் ஈட்ட முடியும்.

கால்நடை வளர்ப்பு
கால்நடை வளர்ப்பு

அதேபோன்று மாடுகளில் பால் முக்கிய பொருளாக இருந்து வருகிறது. நேரடியாகப் பாலாக விற்கும்போது ஒரு லிட்டர் சராசரியாக 25 ரூபாய்க்கு விற்க முடிகிறது. இதையே மதிப்புக் கூட்டும்போது 40 - 50 ரூபாய்க்கு விற்கலாம். அதற்கான வழிகளை கற்றுக் கொடுக்க இந்தப் பயிற்சி உதவியாக இருக்கும்.

முன்பதிவுக்கு https://bit.ly/3v6y0QJ

முயல், வெண்பன்றி வளர்ப்பில் ஆர்வமாகச் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள். விற்பனை வாய்ப்பை மட்டும் தெரிந்துகொண்டால் முயல், வெண்பன்றி வளர்ப்பிலும் நல்ல லாபம் ஈட்ட முடியும். இதற்கான கொட்டகை, தீவனம் உள்ளிட்டவற்றை தயார் செய்து கொண்டு களத்தில் இறங்கினால் நல்ல லாபம் பெற முடியும்.

வெண்பன்றி குட்டிகள்
வெண்பன்றி குட்டிகள்

இதற்கு வழிகாட்ட துறை சார்ந்த வல்லுநர்கள் தயாராக இருக்கிறார்கள். மொத்தத்தில் இந்தக் கால்நடை வளர்ப்பு குறித்து ஏ டு இசட் தகவல்களை இந்தப் பயிற்சியின் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

இந்தப் பயிற்சிக்கான கட்டணம் ரூ.600 மட்டுமே, பயிற்சியில் பங்கேற்கும் அனைத்து நபர்களுக்கும் நோட்பேட், பேனா, தேநீர், மதிய உணவு, சான்றிதழ் உள்ளிட்டவை வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இந்தப் பயிற்சியில் பங்கேற்க முன்பதிவு அவசியம் எனவே, பின்வரும் லிங்க்கில் சென்று கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளவும்.

முன்பதிவுக்கு https://bit.ly/3v6y0QJ

நாள்: 26.8.22 (வெள்ளிக்கிழமை).

நேரம் : காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை

இடம்: வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம் (எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் எதிரில்), செங்கல்பட்டு மாவட்டம்.

மேலும் விவரங்களுக்கு, 99400 22128, 99400 72144

கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு நல்ல வருமானம் பார்க்க இந்த நேரடி பயிற்சி பயனுள்ளதாக இருக்கும். மாதிரி கால்நடைப் பண்ணையைப் பார்க்கவும் அரிய வாய்ப்பு இது.