Published:Updated:

`மாவுப்பூச்சித் தொல்லை; தடுப்பது எப்படி?' - வழிகாட்டும் பசுமை விகடனின் ஆன்லைன் பயிற்சி

மரவள்ளி கிழங்கு
மரவள்ளி கிழங்கு

நாளை காலை 11 மணிக்கு இந்த இலவச பயிற்சி தொடங்குகிறது. இதில் கலந்துகொள்ள விரும்புவோர், கொடுக்கப்பட்டுள்ள Zoom லிங்க்கின் மூலமாக நிகழ்ச்சியில் இணைந்துகொள்ளலாம்.

தமிழகத்தில் 10 மாவட்ட விவசாயிகளுக்கு மரவள்ளியில் மரத்தில் உள்ள மாவுப்பூச்சிகளால் பெரும் பிரச்னை நிலவுகிறது. இதுதொடர்பாகச் சட்டமன்றத்திலும் விவாதம் அனல் பறந்து வருகிறது. இந்நிலையில், அதைப் பற்றிப் பேசுவதை விட, அதைக் கட்டுப்படுத்தும் முறைகளைப் பற்றித் தெரிந்துகொள்வதுதான் தற்போதைய உடனடித் தேவையாக இருக்கிறது.

 நீ.செல்வம்
நீ.செல்வம்

இது தொடர்பாகப் பேசிய பூச்சியியல் வல்லுநர் நீ.செல்வம், ``மாவுப்பூச்சி அப்படிங்கிறது இன்னைக்கு விவசாயிகளைக் குலை நடுங்க வச்சுக்கிட்டு இருக்கு. ஒவ்வொரு வருஷமும் ஒவ்வொரு பூச்சிக வந்து விவசாயிகளோட தலையில கல்லைப் போட்டுட்டுப் போகுது. சமீப காலத்தில தென்னையில ஈரியோபைட் சிலந்தி, மக்காச்சோளத்தில படைப்புழு, தென்ன மரத்துல சுருள் வெள்ளை ஈ, அந்த வரிசையில இப்ப 10 மாவட்ட விவசாயிகளைப் பயமுறுத்திகிட்டு இருக்குது மரவள்ளியில மாவுப்பூச்சி.

மாவுப்பூச்சியை இதுவரைக்கும் பப்பாளியில பார்த்திருக்கோம். கொய்யால பார்த்திருக்கோம் பருத்தியில பார்த்திருக்கோம். இப்ப மரவள்ளியில பார்க்கிறோம். மரவள்ளி ஒரு ஆண்டுப் பயிர். அதிலயும் மாவுப் பூச்சித் தாக்குதல் தொடங்கிடுச்சி. இந்த மாவுப்பூச்சி கால் வைக்காத இடமே கிடையாது. எந்தப் பயிர்லயும் நுனி இலையில உட்கார்ந்து சாறை உறிஞ்சும். இதனால செடியோட வளர்ச்சி பாதிக்கும்.

மாவுப்பூச்சி ஒரு தனிப்பட்ட பூச்சி கிடையாது. கிட்டத்தட்ட 10 வகையான சிற்றினங்களின் கூட்டுக் கலவை. எந்தப் பயிரில் எந்த ஜாதி வரும்னு கண்டுபிடிக்கிறதே கஷ்டமா இருக்குது. அதன் ஜாதி தெரிஞ்சு அதைக் கட்டுப்படுத்துவதற்கு முன்னாடி அந்தப் பூச்சி பயிரில் வேலையைக் காட்ட ஆரம்பிச்சிடுது.

அந்த வகையில இந்தப்பூச்சிகளை அழிக்கும் வழிகளைப் பத்தி நாம தெரிஞ்சுக்க வேண்டியது கட்டாயம். மாவுப்பூச்சி அப்படின்னு மொட்டையா வேலை பார்க்கிறது இனி வருங்காலத்திற்கு உதவாது.

மரவள்ளி மாவுப்பூச்சி
மரவள்ளி மாவுப்பூச்சி
மாவுப்பூச்சிக்கு புளிச்ச மோர், இரும்புச் சத்துக்கு முருங்கை இலை... மாடித்தோட்ட அனுபவங்கள்! - 16

நம்ம பயிர்ல இருக்கிறது என்ன வகையான மாவுப்பூச்சினு தெரிஞ்சிக்கணும். ஒவ்வொரு பயிர்லயும் ஒவ்வொரு வகை மாவுப்பூச்சி உக்காருது. அது என்ன வகைன்னு தெரிஞ்சிகிட்டுதான் தடுப்பு நடவடிக்கையில இறங்கணும். ஏன்னா... ஒரு ஜாதிக்கு கொடுக்குற தடுப்புமருந்து இன்னொரு ஜாதியில வேலை பார்க்க மாட்டேங்குது. அதே நேரத்தில எல்லாத்துக்கும் பொதுவான சில குணங்கள் இருக்கு. அந்தப் பொதுவான குணங்களை வச்சு எப்படி கட்டுப்படுத்தவும், தனிப்பட்ட குணங்களை வெச்சு எப்படி மேலாண்மை பண்றதுக்கும் அதோட எல்லாக் குணநலன்களும் தெரிந்தாக வேண்டிய கட்டாயத்துல இருக்கோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாவுப்பூச்சி பற்றிய முழுமையான தகவல்கள் தெரியாம போனால் கட்டுப்படுத்துறது கஷ்டமான வேலையா போயிடும். சரி, அதை எப்படி தெரிஞ்சுகிறது அப்படின்னு ஒரு கேள்வி வரும். அதுக்காகத்தான் பசுமை விகடன் ஒரு பயிற்சிக்கு ஏற்பாடு செஞ்சிருக்காங்க. பசுமை விகடனும், தமிழ்நாடு பாசன மேலாண்மை பயிற்சி நிலையமும் இணைந்து வழங்குற அந்தப் பயிற்சி வர்ற 24-ம் தேதி நடக்குது. `மாவுப்பூச்சி மேலாண்மை' என்ற தலைப்புல நடக்குற அந்தப் பயிற்சியில இதைப் பற்றி விரிவா பேசப்போறேன்.

பயிற்சி நிகழ்ச்சி
பயிற்சி நிகழ்ச்சி
ட்ரோன் மூலம் நெற்பயிர்களுக்கு உரம் தெளிப்பு... கும்பகோணம் இளைஞரின் வித்தியாச முயற்சி!

மாவுப்பூச்சியைக் கண்டறியும் முறை, கட்டுப்படுத்த என்ன மாதிரியான வழி முறைகளைக் கையாளணும்னு சொல்லப்போறேன். பூச்சிக்கொல்லி அப்படின்னு சொல்லி உயிர் கொல்லி மருந்து அடிச்சு, விஷத்தைத் தெளிச்சி, சுற்றுப்புறத்தை கெடுத்து, சாப்பிடுற சாப்பாட்டையும் கெடுக்கிறதை விட்டுட்டு எப்படி அந்தப் பூச்சி மேலாண்மை செய்யணும்னு கற்றுக்கொடுக்கப் போறேன். பூச்சிகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செஞ்சுக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கோம். அதுனால பயிற்சியில கலந்துக்குங்க. மாவுப்பூச்சி மேலாண்மை தொடர்பான தொழில்நுட்பங்களைத் தெரிஞ்சுக்கலாம்'' என்றார்.

நாளை காலை 11 மணிக்கு இந்த இலவச பயிற்சி தொடங்குகிறது. இதில் கலந்துகொள்ள விரும்புவோர், கீழே கொடுக்கப்பட்டுள்ள Zoom லிங்க்கின் மூலமாக நிகழ்ச்சியில் இணைந்துகொள்ளலாம்.

Join Zoom Meeting: https://bit.ly/3CXlntG

Meeting ID: 912 3676 6568

Passcode: 182531

விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo

அடுத்த கட்டுரைக்கு