Published:Updated:

இயற்கை விவசாயத்தில் முக்கியமானது மூடாக்கு!

சுரேஷ்
பிரீமியம் ஸ்டோரி
சுரேஷ்

பயிற்சி

இயற்கை விவசாயத்தில் முக்கியமானது மூடாக்கு!

பயிற்சி

Published:Updated:
சுரேஷ்
பிரீமியம் ஸ்டோரி
சுரேஷ்
ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பத்தில் வாழைச் சாகுபடி செய்து வருகிறார் தேனி மாவட்டம் நாகலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்.

அவரது சாகுபடி தொடர்பான கட்டுரை கடந்த பசுமை விகடன் இதழில் அட்டைப்படக் கட்டுரையாக வெளியாகி இருந்தது. தொடர்ந்து அவரது பண்ணை மற்றும் தொழில்நுட்பங்களை வாசகர்களுக்கு நேரடியாகக் காணொலி வாயிலாக வழங்குவதற்காக நேரலை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது பசுமை விகடன்.

ஜீரோ பட்ஜெட் பயிற்சி
ஜீரோ பட்ஜெட் பயிற்சி

கடந்த 19.12.2020 அன்று காலை 10 மணி முதல் 12 மணிவரை அந்த நிகழ்ச்சி நடைபெற்றது. வெளிநாடுகளிலிருந்தும் வாசகர்கள் நேரலை நிகழ்ச்சியில் பங்குபெற்றனர். தனது வயலிலிருந்து சாகுபடி முறைகளைப் பொறுமையாகவும், தெளிவாகவும் விளக்கிச் சொன்னார் சுரேஷ். ஒரு வித்திலை தாவரம், இரு வித்திலை தாவரத்திற்கான வேறுபாடுகள் பற்றி விளக்கியதுடன், அந்தந்தப் பயிர்களால் ஏற்பட்டுள்ள நன்மை, தீமைகளை நேரடியாகக் காட்டினார்.

சுரேஷ்
சுரேஷ்

‘‘இயற்கை விவசாயத்தில் மூடாக்கு மிகவும் முக்கியம். நான் வாழை இலைகளை விற்பனை செய்வதில்லை. வாழைக் கழிவுகளை முழுவதும் மூடாக்காகப் பயன்படுத்துகிறேன். அதனால் வெளியே கடுமையான வெப்பம் இருந்தாலும், மண்ணுக்குள் ஈரப்பதம் இருந்துகொண்டே இருக்கும். அது மண்ணில் வாழும் நுண்ணுயிர்களுக்கு நல்ல சூழலை ஏற்படுத்திக்கொடுக்கிறது. அதனால் மண்புழுக்கள் அதிகம் உருவாகி, மண்ணை உழவு செய்யும் பணியைச் செய்யத் தொடங்குகின்றன. நான் உழவு இல்லாத வேளாண்மையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். அதற்கு மூடாக்குப் பேருதவியாக இருக்கிறது. வாழையில் வேர்ப்புழுத் தாக்குதல் ஒரு பிரச்னையாக இருக்கும். நான் வாழைக்கு அருகே செண்டுமல்லி நடவு செய்திருக்கிறேன். அதனால் வேர் தொடர்பான பிரச்னைகள் பெரும்பாலும் இல்லை. வழக்கமான முறையைவிட முக்கோண முறையில் வாழை நடவு செய்யும்போது அதிக எண்ணிக்கையில் வாழை நடவு செய்ய முடிகிறது. பல விவசாயிகள் ஜீவாமிர்தத்தைச் சொட்டுநீர்ப் பாசனத்தில் கொடுக்கும்போது வெஞ்சுரியில் அடைத்துக்கொள்வதாகச் சொல்கிறார்கள். சொட்டுநீர்ப் பாசனத்தில் ஜீவாமிர்தம் கொடுப்பவர்கள், வடிகட்டிக் கொடுத்தால் இந்தப் பிரச்னை இருக்காது. நான் வடிகட்டித்தான் கொடுத்து வருகிறேன்’’ என்றவர், தொடர்ந்து வாசகர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism