Election bannerElection banner
Published:Updated:

பால் மதிப்புக்கூட்டலில் நல்ல வருமானம் ஈட்ட வேண்டுமா? - வழிகாட்டும் பசுமை விகடன் பயிற்சி

பால் மதிப்புக்கூட்டல் பயிற்சி
பால் மதிப்புக்கூட்டல் பயிற்சி

பால் மதிப்புக்கூட்டலில் ஈடுபட்டு நல்ல வருமானம் எடுக்க  பசுமை விகடன் வழங்கும் பணம் கொடுக்கும் பால் மதிப்புக்கூட்டல் தொழில்நுட்பம் நிகழ்ச்சி வழிகாட்டியாக இருக்கும். 

பாலை கூட்டுறவு சங்கத்துக்கு கொடுக்கும்போது ஒரு குறிப்பிட்ட அளவுதான் வருமானம் கிடைக்கும். அந்த அளவை எப்போதும் உயராது. அரசு மற்றும் தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தினாலன்றி அதற்கு வேறு வழியில்லை. நாளுக்கு நாள் தீவனச் செலவு, கறவை மாடு பராமரிப்புச் செலவு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் பால் உற்பத்தியாளர்களுக்குப் பாலை மட்டுமே விற்பனை செய்யும்போது போதுமான வருமானம் கிடைப்பதில்லை. இந்நிலையில் பால் உற்பத்தியாளர்கள் மாற்று வழியை யோசிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அந்த வகையில், பால் மதிப்புக்கூட்டலில் ஈடுபட்டு நல்ல வருமானம் எடுக்க பசுமை விகடன் வழங்கும் பணம் கொடுக்கும் பால் மதிப்புக்கூட்டல் தொழில்நுட்பம் நிகழ்ச்சி வழிகாட்டியாக இருக்கும்.

நிகழ்சசி
நிகழ்சசி

ஏப்ரல் 29-ம் தேதி(வியாழக்கிழமை) மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெற இருக்கும் இந்நிகழ்ச்சியில் வர்த்தக ரீதியாகப் பாலை திரிய வைத்து தயாரிக்கப்படும் பால் பொருள்கள் தயாரிப்பு பற்றி சொல்லப்பட இருக்கிறது. பாலைத் திரிய வைத்து சென்னா, பனீர், ரசகுலா, ரசமலாய், சந்தேஷ் உள்ளிட்டவை தயாரிக்கப் படுகின்றன. மிகவும் எளிமையான இந்தத் தொழில்நுட்பத்தை அனைவரும் தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும்.

லிங்க்:https://events.vikatan.com/234-milk-valuation-technology/

அதேபோல பாலை உறையூட்டி தயாரிக்கப்படும் பால் பொருள்களான தயிர், வெண்ணெய், யோகர்ட், நெய், சீஸ் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கும் முறைகள் பற்றியும் இந்நிகழ்ச்சியில் விளக்கப்பட உள்ளன. அதேபோன்று நறுமணமூட்டிய பால் பொருள்கள் தயாரிப்பு முறைகளின் மூலம் ரோஸ்மில்க், சாக்லேட் மில்க், கேரட் மில்க், பீட்ரூட் மில்க், பாதாங்கீர், பாதாம் பால் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகின்றன. இதைத் தயாரிக்கும் முறைகளும் இந்நிகழ்ச்சியில் சொல்லி தரப்பட உள்ளன. அதேபோன்று இப்படித் தயாரிக்கப்படும் பொருள்களுக்கு விற்பனை வாய்ப்பு எப்படி இருக்கிறது, எப்படி மார்க் கெட்டிங்செய்வது பற்றியும் விளக்கப்பட உள்ளன.

பனீர் தயாரிப்பு
பனீர் தயாரிப்பு

இதோடு பால் கோவா மற்றும் கோவா பொருள்களின் தயாரிப்பு முறைகள், ஐஸ்க்ரீம் தயாரிப்பு முறைகள், பாலை உறைநிலையில் வைத்து நீண்ட நேரம் பாதுகாத்து பிற இடங்களுக்கு எடுத்துச் செல்லும் முறைகளும் விளக்கப்பட உள்ளன. மொத்தத்தில் கறந்த பாலை பாலாக விற்பனை செய்வதைத் தவிர்த்து அதை சில எளிய முறைகளில் மதிப்புக்கூட்ட கற்றுக் கொண்டால் பாலில் நல்ல வருமானம் பார்க்கலாம்.

``முன்பெல்லாம் கறவை மாடு வளர்ப்பு விவசாயத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ஆனால், இன்று அதுதான் பிரதான தொழில் என்ற நிலையை எட்டியிருக்கிறது. எனவே, அதில் கூடுதல் வருமானம் பார்ப்பதற்கான வழிகளை ஆராய்வதே பால் பண்ணை தொழிலில் வளர்வதற்கான வழிகள்" என்கிறார் இந்நிகழ்ச்சியை வழங்க இருக்கும் பேராசிரியர் எம்.விமலா ராணி.

இவர் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில் இணைப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். பால் மதிப்புக்கூட்டல் குறித்து எண்ணற்ற பயிற்சிகளை விவசாயிகளுக்கும் தொழில் முனைவோர்களுக்கும் வழங்கி இருக்கிறார். பலரை பால் மதிப்புக்கூட்டல் தொழிலில் இறங்க ஆலோசனை கொடுத்து வருகிறார். இத்துறையில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர். சென்னை அடுத்த எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்துக்கு எதிரில் உள்ள காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில் பயிற்சிகள் வழங்குவதற்கான ஆய்வுக்கூடமும் உள்ளது. தேவைப்படுபவர்கள் நேரடியாக இங்கு பயிற்சியும் எடுத்துக் கொள்ளலாம். இந்தப் பயிற்சி விவரங்கள் குறித்தும் இந்த ஆன்லைன் நிகழ்ச்சியில் பேச இருக்கிறார் விமலாராணி.

க்யூ.ஆர் கோடு
க்யூ.ஆர் கோடு

நாள்: 29.4.21, வியாழக்கிழமைநேரம்: மாலை 4 மணி முதல் 5 மணி வரை

அனுமதி இலவசம்... முன்பதிவு முக்கியம்...

இலவச பயிற்சியாக நடத்தப்படும் இந்த ஆன்லைன் நிகழ்ச்சிக்கு முன்பதிவு செய்து கொள்ளவும். முன்பதிவு செய்துகொள்வதற்கு பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்யயும். அல்லது மேலே உள்ள க்யூ ஆர் (QR) கோடை ஸ்கேன் செய்யவும்.

https://events.vikatan.com/234-milk-valuation-technology/

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு