Published:Updated:

பயோ பிளாக் தொழில்நுட்பம் மூலம் மீன் வளர்ப்பில் ரூ.50,000 வருமானம்; வழிகாட்டும் ஆன்லைன் பயிற்சி!

பயோ பிளாக் தொழில்நுட்பம்
பயோ பிளாக் தொழில்நுட்பம்

இதற்கு 400 சதுர அடி இடம் இருந்தாலே போதும். ஆண்டுக்கு ரூ.50,000 லாபம் பார்க்கலாம். விவசாயிகள் மட்டுமல்லாமல், இல்லத்தரசிகள், இளைஞர்கள், பணி ஓய்வுக்குப் பின் வீட்டில் இருப்பவர்கள் எனப் பல தரப்பினரும் இதில் எளிதாக ஈடுபட்டு நிறைவான லாபம் சம்பாதிக்கலாம்.

உத்தரவாதமான, நிறைவான வருமானம் தரக்கூடிய தொழிலாகத் திகழ்கிறது, மீன் வளர்ப்பு. இதற்கான சந்தை வாய்ப்பு மிகவும் எளிது. வியாபாரிகளையோ, இடைத்தரகர்களையோ சார்ந்திருக்க வேண்டியதில்லை. மீன்கள் உற்பத்தி செய்யப்படும் இடங்களுக்கே, பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தேடி வந்து வாங்கி விடுகிறார்கள். பெரும்பாலும் விலை சரிவு ஏற்படுவதில்லை. குறிப்பிட்ட சில நாள்களுக்குள் அறுவடை செய்து விற்பனை செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. இவற்றை உற்பத்தி செய்வதிலும் கூட, பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பிரச்னைகள் இல்லை.

ஆன்லைன் பயிற்சி
ஆன்லைன் பயிற்சி

மீன் வளர்ப்பு தொழிலில் இந்தளவுக்கு நன்மைகள் இருந்தும் கூட, இதில் ஆர்வம் உள்ள அனைவராலும் இதில் கால் பதிக்க முடிவதில்லை. காரணம் இதற்கான குளம் கிடைப்பது பெரும் சவாலாக உள்ளது. அதிகமான தண்ணீர் வசதியும் தேவை. இந்நிலையில்தான் நாம் நினைத்த இடத்தில், நமக்கு கிடைத்திருக்கும் சிறிய பரப்பில், குறைவான தண்ணீரைக் கொண்டு மீன் வளர்க்க கை கொடுக்கிறது, பயோ பிளாக் தொழில்நுட்பம். இது இஸ்ரேல் நாட்டில் அறிமுகமான தொழில்நுட்பம் ஆகும். இதற்கு 400 சதுர அடி இடம் இருந்தாலே போதும். ஆண்டுக்கு ரூ.50,000 லாபம் பார்க்கலாம். விவசாயிகள் மட்டுமல்லாமல், இல்லதரசிகள், இளைஞர்கள், பணி ஓய்வுக்குப் பின் வீட்டில் இருப்பவர்கள் எனப் பல தரப்பினரும் இதில் எளிதாக ஈடுபட்டு நிறைவான லாபம் சம்பாதிக்கலாம்.

முன்பதிவு செய்ய: https://bit.ly/3y45yxN

இதற்கு வழிகாட்டும் வகையில்தான் பசுமை விகடன் ஏற்பாட்டில் `பயோ பிளாக் தொழில்நுட்பம்... மீன் வளர்க்க 400 சதுர அடி போதும்!’ என்ற தலைப்பில் நேரலை பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சி ஜூலை 10-ம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெறுகிறது. இதில் அனுபவம் பெற்ற தஞ்சையைச் சேர்ந்த ராஜ மனோகர் இப்பயிற்சியை வழங்கவுள்ளார். இவர், பயோ பிளாக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக மீன் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.

``இரும்பு வலை மற்றும் டார்பாலின் சீட்களைக் கொண்டு 4 மீட்டர் சுற்றளவு, 1.5 மீட்டர் உயரம் கொண்ட தொட்டி அமைத்து, ஒரு தொட்டிக்கு 800 - 1200 மீன் குஞ்சுகள் விடலாம். இதில் 4 - 6 மாதங்களில் 420 கிலோவுக்கு அதிகமான மீன்கள் மகசூல் கிடைக்கும். ஒரு கிலோவுக்கு குறைந்தபட்சம் ரூ.120 வீதம் ரூ.50,400 வருமானம் கிடைக்கும். இதில் எல்லா செலவும் போக, ரூ.25,000-க்கு மேல் லாபம் கிடைக்கும். ஒரு தொட்டியில் இருந்து வருடத்துக்கு இரண்டு முறை மகசூல் எடுப்பதன் மூலமாக ஆண்டுக்கு ரூ.50,000 லாபம் பார்க்கலாம். வீட்டின் தோட்டப் பகுதிகளிலும் மாடியிலும் கூட பயோ பிளாக் முறையில் மீன் வளர்க்க முடியும். இந்த முறையில் மீன் வளர்க்க குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே தேவைப்படும். அறுவடை காலம் முடிந்த பிறகு, தொட்டியில் உள்ள தண்ணீரை தோட்டத்துக்கு பாய்ச்சிக் கொள்ளலாம். சத்துக்கள் நிறைந்த தண்ணீர் என்பதால், மரம் செடி கொடிகள் செழிப்பாக வளரும்’’ என்கிறார் ராஜ மனோகர்.

அறுவடையான மீன்களுடன் 
ராஜ மனோகர்
அறுவடையான மீன்களுடன் ராஜ மனோகர்

பயோ பிளாக் முறையில் மீன் வளர்ப்பதற்கான அடிப்படை தொழில்நுட்பம், தொட்டிகள் அமைக்கும் முறை, ஆரம்பக்கட்ட செலவுகள், குஞ்சுகள் விடும் முறை, தீவன மேலாண்மை, பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் நேரடியாக அறிந்துகொள்ள, இந்த ஆன்லைன் பயிற்சியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். நுழைவுக் கட்டணம் ரூ.200.

முன்பதிவு அவசியம்: https://bit.ly/3y45yxN

அடுத்த கட்டுரைக்கு