Published:Updated:

வீட்டிலும் தேனீ வளர்க்கலாம்!

புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
புறா பாண்டி

நீங்கள் கேட்டவை - புறா பாண்டி

வீட்டிலும் தேனீ வளர்க்கலாம்!

நீங்கள் கேட்டவை - புறா பாண்டி

Published:Updated:
புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
புறா பாண்டி

‘‘பாசிப் பயறு விதைக்க விரும்புகிறோம். தரமான விதைகள் எங்கு கிடைக்கும்?’’

கி.சபாரத்னம், சிந்தாமணி.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பயறு வகைத் துறை தலைவர், முனைவர் ஜெயமணி பதில் சொல்கிறார்.

பாசிப் பயறு
பாசிப் பயறு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“தமிழ்நாட்டில் போதுமான அளவில், பாசிப்பயிறு உற்பத்தி இல்லை. வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது, வேளாண் பல்கலையில் இருப்பில் உள்ள ‘கோ-8’ பாசிப் பயறு ரகம், 2.5 ஏக்கருக்கு, 1,000 கிலோ மகசூல் தரக்கூடியது. அனைத்து மாவட்டங்களிலும் பயிர் செய்ய ஏற்றதாகவும், இயந்திர அறுவடைக்கும் ஏற்றதாகவும் உள்ளது. கொரோனா பாதிப்புக் காரணமாக, விதை வாங்க நேரில் வர முடியாமல் சிரமப்படும் விவசாயிகளுக்கு, தபால், பார்சல் சேவை மூலமாகவும் அனுப்பி வருகிறோம்.

தற்போது பல்கலைக்கழகத்தில் பயறு வகைத் துறையில், சான்று அளிக்கப்பட்ட பாசிப்பயறு விதை இருப்பில் உள்ளது. விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள அழைக்கிறோம்.’’

தொடர்புக்கு, தொலைபேசி: 0422 2450498.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறோம். தரை தளத்தில் எங்கள் வீட்டைச்சுற்றி நிறைய மரங்களும், பூச்செடிகளும் இருக்கின்றன. தேனீ வளர்க்கலாம் என்று ஆசை. அதற்கு என்ன செய்ய வேண்டும், யாரை அணுக வேண்டும் என்று சொல்லுங்கள்?

சசி பிரபு, சென்னை.

‘‘நம்மில் எல்லோருக்கும் சென்னை என்றாலே... கான்கிரீட் கட்டடங்கள்தான் நினைவுக்கு வருகின்றன. ஆனால், சென்னையில் நிறைய மரங்களும் வளர்ந்து நிற்கின்றன. விமானத்தில் இருந்து, சென்னை நகரைப் பார்த்தால், பசுமையான மரங்களுக்கு மத்தியில்தான் கட்டடங்கள் தெரியும். எனவே, இந்த மாநகரத்தில் தேனீக்களுக்குத் தேவையான உணவு தயாராக உள்ளது. விவரம் தெரிந்த சிலர் வீட்டுத்தோட்டத்திலும் மொட்டைமாடியிலும் தேனீ வளர்த்து வருகிறார்கள். சில நுட்பங்களைக் கவனமாகக் கடைப்பிடித்தால் மட்டுமே... தேனீ வளர்ப்பில் வெற்றி பெற முடியும்.

கையளவு நிலம் சொந்தமாக இல்லாதவர்கள்கூட, தேனீ வளர்ப்பு மூலம் சம்பாதிக்க முடியும். தேனீ வளர்ப்பில், ‘விவசாய ரீதியில் தேனீ வளர்ப்பு’, ‘வணிக ரீதியில் தேனீ வளர்ப்பு’ என இரண்டு முறைகள் உள்ளன. விவசாய ரீதியாக வளர்க்கும்போது, இந்தியத் தேனீக்களை மட்டும்தான் வளர்க்க முடியும். இவை, அயல் மகரந்தச் சேர்க்கைக்கு உகந்தவை. இந்தத் தேனீப் பெட்டிகளைக் குறிப்பிட்ட இடைவெளியில் தோட்டத்தில் ஆங்காங்கு வைத்துவிட வேண்டும். இவற்றை இடம் மாற்றக்கூடாது. இம்முறையில் கிடைக்கும் தேனின் அளவு குறைவாகத்தான் இருக்கும். ஆனால், அயல் மகரந்தச் சேர்க்கை, நன்றாக நடப்பதால், வயலில் உள்ள பயிர்களில் மகசூல் கூடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வணிக ரீதியில், தேன் உற்பத்திக்காக வளர்க்க, இத்தாலியத் தேனீக்கள் சிறந்தவை. இவற்றை அடிக்கடி இடம் மாற்றி வைத்து வளர்க்க வேண்டும். இவை, அதிக அளவில் உண்ணக்கூடியவை. அதனால், பூக்கள் அதிகமாக இருக்கும் இடங்களில்தான் இவை வாழும். சென்னையில் வளர்க்க இத்தாலித் தேனீக்கள் ஏற்றவை.

தேனீ வளர்ப்பு
தேனீ வளர்ப்பு

1,000 சதுரஅடி கொண்ட மொட்டை மாடியில், நான்கு பெட்டிகள் வரை வைக்கலாம். அதன் மூலம் டிசம்பர் மாதம் முதல் மே மாதம் வரை தேன் கிடைக்கும். இந்த ஆறு மாதங்களில் மட்டும்தான் தென்னை, முருங்கை, குல்மொஹர்... போன்ற மரங்களில் அதிகமாகப் பூக்கள் இருக்கும். மாதம் ஒரு கிலோ வீதம்... ஒரு பெட்டிலியிருந்து ஐந்து கிலோ தேன் தாராளமாகக் கிடைக்கும். ஜூன், ஜூலை மாதங்களில் காற்றுவீசும். அடுத்து வரும் மாதங்களில் மழை பெய்யும். அதனால் இந்தக் காலங்களில் தேனீக்கள் வெளியில் செல்லாது. அப்போது, அவற்றுக்கு நாம்தான் உணவு கொடுக்க வேண்டும். ஒரு பங்கு சர்க்கரை, இரண்டு பங்கு நீர் கலந்து, தேனீக்களுக்குக் கொடுக்கலாம். இப்படிச் செய்யாவிட்டால், பெட்டியில் உள்ள தேனீக்கள் இறந்துவிடும். இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஓய்வு நேரத்தில் தேனீக்களைக் கவனித்தாலே போதும்.

வீட்டில் உள்ள தேனீப் பெட்டியிலிருந்து கலப்படமில்லாத தேன் எடுத்து சாப்பிட்டுப் பாருங்கள். அப்போதுதான் தேனின் உண்மையான சுவையை நீங்கள் உணர்வீர்கள். கடைகளில் தேனைக் காய்ச்சிக் கொடுப்பதால், சுவை குறைந்துவிடுகிறது.

குறைந்தபட்ச விலையாக ஒரு கிலோ தேன் 500 ரூபாய் வரை விற்பனையாகிறது. விற்பனைக்காக இல்லாவிடினும்... வீட்டுத்தோட்டம் போல, வீட்டுத்தேவைக்காகக்கூடத் தேனீ வளர்க்கலாம். செங்கல்பட்டு மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் தேனீ வளர்ப்புப் பயிற்சிக் கொடுக்கப்படுகிறது. கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும், பூச்சியியல் துறையிலும் ஒவ்வொரு மாதமும் 6-ம் தேதி தேனீ வளர்ப்புக்குப் பயிற்சி வழங்கப்படுகிறது.

புறா பாண்டி
புறா பாண்டி

ஒரு வேளை அன்று அரசு விடுமுறை நாளாக இருந்தால், அதையடுத்த வேலை நாளில் பயிற்சி நடைபெறும். இதற்குக் கட்டணம் உண்டு. முடிவில் சான்றிதழ் வழங்கப்படுகிறது. தேனீ வளர்ப்பில் கொஞ்சம் விஷயம் தெரிந்திருந்தாலும் கட்டாயம் ஒரு முறை இந்தப் பயிற்சியில் கலந்துகொண்டால் சிறப்பாகத் தேனீ வளர்ப்பைச் செய்ய முடியும். மேலும், இயற்கையான சூழலில் தேனீ கூடு கட்டுதல் தேனீக்களைக் கொள்ளாமல் தேன் கூட்டிலிருந்து தேன் சேகரித்தல், தேன் கூடு அடுக்கு விற்பனை செய்தல், வணிக ரீதியான தேனீ வளர்ப்பு தொடங்குதல், தேனீப்பெட்டி வாங்குதல், தேன் விற்பனை… போன்ற விவரங்களை பயிற்சியின்போது அறிந்து கொள்ளமுடியும். எனவே, பெருந்தொற்று முடிந்தவுடன் பயிற்சிக்கு சென்று, இந்த இனிப்பான செயலைத் தொடங்குங்கள்.

தொடர்புக்கு, 1.வேளாண்மை அறிவியல் மையம், காட்டுப்பாக்கம், தொலைபேசி: 044 27452371.

2.பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் பூச்சியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641003, தொலைபேசி: 0422 6611214, 6611414.

வீட்டிலும் தேனீ வளர்க்கலாம்!

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக்கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com PasumaiVikatan என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism