Published:Updated:

நீங்கள் கேட்டவை: நாட்டு மாட்டுப் பாலை விற்பனை செய்ய அனுமதி தேவையா?

 புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
புறா பாண்டி

புறா பாண்டி

நீங்கள் கேட்டவை: நாட்டு மாட்டுப் பாலை விற்பனை செய்ய அனுமதி தேவையா?

புறா பாண்டி

Published:Updated:
 புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
புறா பாண்டி

‘‘ஏ1 (A1), ஏ2 (A2) ஆகிய பால் வகையைக் கண்டுபிடிப்பது எப்படி, நாட்டு மாட்டுப் பாலை விற்பனை செய்ய யாரிடமாவது அனுமதி வாங்க வேண்டுமா?’’

சுப்பிரமணியன், கோம்பைபட்டி.

நீங்கள் கேட்டவை: நாட்டு மாட்டுப் பாலை விற்பனை செய்ய அனுமதி தேவையா?

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் உள்ள விரிவாக்க கல்வித் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் குமாரவேல் பதில் சொல்கிறார்.

“வெளிநாட்டு மாடுகளின் பாலை ஏ1 எனவும், நாட்டு மாடுகளின் பாலை ஏ2 எனவும் வகைப்படுத்தியுள்ளனர். நாட்டு மாடுகளின் ஏ2 வகை பால் சத்தானது என்றாலும், உயர்ரக வெளிநாட்டு மாடுகளில் ஏ2 புரதம் இல்லையென்றும் சொல்லி விட முடியாது. சில வெளிநாட்டு ரகங்களிலும் ஏ2 புரதங்கள் இருக்கின்றன. ஆனால், நம் நாட்டு ரக மாடுகளோடு ஒப்பிடும்போது, வெளிநாட்டு மாடுகளின் பாலில் ஏ2 புரதம் 50% அளவு குறைவாகத்தான் இருக்கும்.

நாட்டு மாடுகள், கலப்பின மாடுகள், தூய வெளிநாட்டு மாடுகள் என மூன்று வகையான மாடுகளை நம் விவசாயிகள் வளர்க்கிறார்கள். இந்த மூன்று வகைகளையும் சரியாக அடை யாளம் காண்பதிலும் சிக்கல் உள்ளது. சந்தையில் நாட்டு மாடு என்று சொல்லி கலப்பின மாடுகளை விற்பனை செய்து விடுவார்கள். சில நிறுவனங்கள் ஏ2 பால் (நாட்டு மாட்டுப்பால்) என்று சொல்லியே சந்தைப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், பொதுமக்களுக்கும் அது உண்மை யிலேயே ஏ2 வகைப் பால்தானா என்ற குழப்பம் இருந்து வருகிறது. பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சந்தைப்படுத்தும் நிறுவனங் களுக்கும் ஏ2 பால்தான் எனக் கண்டுபிடிப்பதில் சிரமங்கள் உள்ளன. இவ்வளவு பிரச்னை களுக்கும் தீர்வாக ஒரு பிரத்யேக அட்டையை உருவாக்கி யிருக்கிறோம்.

இந்த அட்டையில் உள்ள ஸ்பாஞ்சில் ஒரு சொட்டுப் பாலை விட்டுக் காற்றில் நன்றாகக் காயவிட்டு 24 மணிநேரத்துக்குள், எங்கள் பல்கலைக்கழகத்துக்குக் கொண்டு வந்து கொடுக்க வேண்டும். டி.என்.ஏ ஆராய்ச்சி மூலம் அந்தப்பாலின் வகையைக் கண்டறிந்து சொல்லிவிடுவோம். இதன் மூலம் சுத்தமான நாட்டு மாட்டுப் பால் எனச் சொல்லிச் சந்தைப்படுத்த முடியும். இந்த அட்டையில் காளை மாடுகளின் ரத்தத்தில் ஒரு சொட்டு விட்டு இதே முறையில் பரிசோதித்து... ஏ1 வகைக் காளைகளா, ஏ2 வகைக் காளைகளா என்றும் கண்டறிய முடியும். இதற்கான கட்டணம் 300 ரூபாய்.

அடுத்து, பால் விற்பனை செய்ய எந்த அமைப்பிடமும் அனுமதி வாங்கத் தேவையில்லை. பதப்படுத்தாத பாலை 6 மணி நேரத்தில் விற்பனை செய்துவிட வேண்டும். காலதாமதம் ஏற்பட்டால் பால் கெட்டுவிடும்.

ஆகையால், இதற்குத் தக்கப்படி விற்பனை செய்யும் தூரத்தைத் திட்டமிடவும். இது குறித்துக் கூடுதல் விவரங்கள் தேவைப் பட்டாலும் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.’’

தொடர்புக்கு,

1. திட்ட இயக்குநர்,
மத்திய பல்கலைக்கழக ஆய்வுக்கூடம்,
கால்நடை மருத்துவப் பயன்பாடு
சார்பரிமாற்ற தளம், இரண்டாவது மாடி,

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,
மாதவரம் பால் பண்ணை, சென்னை - 600 051.
தொலைபேசி: 044 25556276, 25556277.

2. பேராசிரியர் மற்றும் தலைவர் விரிவாக்க கல்வித்துறை,
கால்நடை மருத்துவக் கல்லூரி,
வேப்பேரி, சென்னை - 600 007
செல்போன்: 98401 13681.

புண்ணியமூர்த்தி - குமாரவேல்
புண்ணியமூர்த்தி - குமாரவேல்

‘‘எங்கள் பண்ணையில் உள்ள மாடுகளைக் கொசுக்கள் கடிக்கின்றன. இதைக் கட்டுப்படுத்த தீர்வு சொல்லுங்கள்?’’

செ.ராஜ்குமார், காட்டரம்பாக்கம்.

நீங்கள் கேட்டவை: நாட்டு மாட்டுப் பாலை விற்பனை செய்ய அனுமதி தேவையா?

தஞ்சாவூரில் உள்ள மரபுசார் மூலிகை மருத்துவ மையத்தின் முன்னாள் தலைவர், பேராசிரியர் புண்ணியமூர்த்தி பதில் சொல்கிறார்.

‘‘மழைக்காலங்களிலும், நீர் தேங்கி நிற்கும் பகுதிகளிலும் அதிகளவில் கொசுக்கள் உருவாகி மாடுகளைக் கடித்து, ஆழமான புண்களை உருவாக்கி பெரும் ஆபத்தை உருவாக்கும். இந்தப் புண்கள் புரையோடி உயிருக்கே ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, கொசுக்களைக் கட்டுப்படுத்த தனிக் கவனம் செலுத்த வேண்டும். கொட்டகையில் ஈரம், சேறு, சகதி இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சுற்றுப்புறங்களிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மாலை நேரத்தில்தான் கொட்டகைக்குள் கொசுக்கள் அதிகளவில் படையெடுக்கும். எனவே, அந்தி சாயும் மாலை நேரத்தில் இரும்புச் சட்டியில் பாதியளவு மணலை நிரப்பி அதில் சிறு துண்டுகளாகக் காய்ந்த விறகுகளைப் போட்டு நெருப்பு மூட்ட வேண்டும். அதில் நொச்சி, ஆடாதொடை, வேம்பு, எருக்கன் இலைகளைப் போட்டு மூட்டம் போட வேண்டும். சுமார் 2 மணிநேரம் கொட்டகையிலேயே மூட்டம் இருக்க வேண்டும். கொசுக்கள் அதிகமாக இருந்தால் விடியற்காலையிலும் இப்படி புகைமூட்டம் போடலாம். உண்ணி, கொசுக்கள் பண்ணையில் அண்டாமல் இருக்க, சூளை சுண்ணாம்புடன் மஞ்சள் கலந்து சுவர்களில் பூசிவிட வேண்டும். சுற்றுப் புறம் தூய்மையாக இருந்தால், கொசுக்கள் நடமாட்டம் குறையும். பனிக் காலம் முடியும் வரை ஒரு கிலோ சலித்த சாம்பலுடன் 100 கிராம் வசம்பு தூள் கலந்து மாடுகளின் மீது பூசிவிடலாம். இதனால், பகல் நேரங்களில் மாடுகளைக் கொசுக்கள் கடிப்பது குறையும்.

கோடைக் காலங்களில் 1 மடல் சோற்றுக் கற்றாழை, 10 ஓமம் இலைகளை ஒன்றாகக் கலந்து அரைத்து நீர் கரைசலாக மாடுகளின் மேல் தடவலாம். மாடுகள் தனது வால் மூலம் கொசுக்களை விரட்ட முடியாத பகுதிகளில் மட்டும் இதைத் தடவினால் போதும். மேற்சொன்ன அளவு 3 மாடுகளுக்குத் தடவு வதற்குப் போதுமானது. சோற்றுக் கற்றாழை வாசனை இருந்தால் மாடுகள் மீது கொசு, ஈக்கள் மொய்க்காது. இதை ஆடுகளுக்குத் தடவக் கூடாது. குளிர்ச்சி தாங்காது.’’

தொடர்புக்கு, செல்போன்: 98424 55833.

“சவுக்கில் எத்தனை ரகங்கள் உள்ளன. கன்றுகள் எங்கு கிடைக்கும்?’’

கே.தயாளன், விக்கிரவாண்டி.

‘‘தமிழ்நாட்டில் நான்கு சவுக்கு ரகங்கள் பரவலாக சாகுபடி செய்யப்படுகின்றன. இதில் வீரிய ரகமான சி.ஜே-9 ஜூங்குனியா, அதிக வறட்சியைத் தாங்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். மானாவாரிக்கு ஏற்றது. அனைத்து மண் வகைகளிலும் வளரும் எனப் பல பண்புகளைக் கொண்டது. CHI-1,2,5 கலப்பின ரகங்கள், களிமண் தவிர மற்ற அனைத்து மண் வகைகளிலும் வளரும்.

கோயம்புத்தூரில் உள்ள மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில் சவுக்கு கன்றுகளும் தொழில்நுட்ப ஆலோசனைகளும் கிடைக்கும். தொடர்பு கொண்டு பயன்பெறவும்.’’

தொடர்புக்கு, தொலைபேசி: 0422 2484100.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

புறா பாண்டி பகுதிக்கான கேள்விகளை 99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலமும் அனுப்பி வைக்கலாம்.

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக்கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும்,

pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com PasumaiVikatan என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.