Published:Updated:

ஒரு செடியில் 12 கிலோ கத்திரி!

புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
புறா பாண்டி

நீங்கள் கேட்டவை - புறா பாண்டி

ஒரு செடியில் 12 கிலோ கத்திரி!

நீங்கள் கேட்டவை - புறா பாண்டி

Published:Updated:
புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
புறா பாண்டி

‘‘வீட்டுத்தோட்டம் வைத்துள்ளோம். சுண்டைச் செடியில் கத்திரிச் செடியை ஒட்டுக் கட்டினால், நீண்ட காலம் காய்க்கும் என வாட்ஸ்அப்பில் படித்தேன். இது உண்மையா?”

@சி.பச்சையம்மாள்

கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள காய்கறித் துறையின் விஞ்ஞானி பதில் சொல்கிறார்.

‘‘அறிவியல்பூர்வமாகக் காய்கறிப் பயிர்களில் ஒட்டுக்கட்டும் தொழில்நுட்பம் 1920-ம் ஆண்டு ஜப்பான், கொரியா... நாடுகளில் கண்டறியப்பட்டது எனக் குறிப்புகள் உள்ளன.

கத்திரிக்காய்
கத்திரிக்காய்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காய்கறிப் பயிர்களில் ஒரே இனத்தைச் சேர்ந்த செடிகளை ஒட்டுக்கட்ட முடியும். பூச்சி, நோய் தாக்காத, ஒட்டும் பண்புடைய செடியை வேர்ச்செடியாக வைத்துக்கொண்டு... அதிக விளைச்சலைத் தரக்கூடிய பண்புடைய வீரிய ரகத் தாய்ச்செடியை ஒட்டுக்குச்சியாகப் பயன்படுத்தி ஒட்டுக்கட்டலாம். இவ்வாறு ஒட்டுக்கட்டிய செடியை நடவு செய்யும்போது, செடியின் தரமும், பண்புகளும் உயரும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நீங்கள் கேட்டுள்ள சுண்டை, கத்திரி ஆகியவை ஒரே இனத்தைச் சேர்ந்தவை என்பதால், இவற்றை ஒட்டுக்கட்ட முடியும். தவிர, சுண்டைக்காய்ச்செடி, தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலையில் அதிக ஆண்டுகள் வளரும் தன்மையைக் கொண்டது. சுண்டைச்செடியை வேர்ச்செடியாகவும் நமக்கு வேண்டிய ரகக் கத்திரியை தாய்ச்செடியாகவும் வைத்து ஒட்டுக்கட்டும்போது... வேர் அழுகல், நூற்புழுத் தாக்குதல் ஆகியவை குறையும். இதனால், மகசூல் அதிகரிக்கும். பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டைக் குறைக்கவும், தொடர்ந்து காய்கறிகளைப் பயிரிடும்போது மண்ணில் தோன்றும் நூற்புழு மற்றும் வேரழுகல் நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவும் ஒட்டுக்கட்டும் தொழில்நுட்பம் உதவுகிறது.

புறா பாண்டி
புறா பாண்டி

ஒட்டுச்செடிகளை ஜூன்-ஜூலை, டிசம்பர்-ஜனவரி ஆகிய மாதங்களில் நடலாம். வயலில் நடவு செய்த 35 முதல் 40 நாள்களில், முதல் அறுவடை ஆரம்பிக்கும். ஒட்டுச்செடியை ஆறு அல்லது எட்டு மாதங்கள் கழித்து மறுதாம்பு செய்தால்... மேலும் நான்கு மாதங்கள் வரை வளர்த்து, அதிக விளைச்சலைப் பெற முடியும். தேவைப்பட்டால், மற்றொரு மறுதாம்பும் விடலாம்.

ஒட்டுக்கட்டும் முறைகளின் மூலம் உருவாக்கப்பட்ட கத்திரிச்செடியில் 15 மாதங்களில்... ஒரு செடியில் 12 முதல் 15 கிலோ வரையில் காய்காய்க்கும் என நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. இதர வீட்டுத்தோட்டத்தில் மட்டுமல்ல, விவசாயத் தோட்டங்களிலும் பயிர் செய்து கூடுதல் விளைச்சல் பெறலாம். ஒட்டுக் கட்டுவது சம்பந்தமாகச் சந்தேகம் ஏற்பட்டால், உங்கள் பகுதியில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தைத் தொடர்புகொள்ளவும். சில தனியார் நாற்றுப்பண்ணைகளில் சுண்டை, கத்திரிச் செடிகளை ஒட்டுக் கட்டி விற்பனை செய்கிறார்கள். விருப்பம் இருந்தால், அங்கேகூட வாங்கி வளர்க்கலாம்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“கோழிகளுக்குக் கறையானை வளர்த்துத் தீவனமாகக் கொடுக்கலாமா?இந்தத் தொழில்நுட்பத்தைப் பற்றிச் சொல்லவும்.’’

@கனகராஜ்

“கறையானில் புரதச்சத்து இருப்பதால், கோழிகளுக்குக் கொடுத்தால், கொழு கொழுவென வளரும். குறிப்பாக நாட்டுக் கோழிகள் வளர்ப்பவர்களின் தீவனச் செலவைக் குறைக்கக் கூடியது கறையான். இயற்கையாக உள்ள கறையான் புற்றுக்களை நாட்டுக்கோழிகள் பார்த்துவிட்டால், கறையான்களைத் தேடித் தேடி தின்னும். கறையானைத் தின்னும் கோழிகள் குண்டு குண்டாக வளரும். காய்ந்த, மட்கிய பொருள்களில்தான் கறையான் வாழும். சில தாய்க்கோழிகள் குஞ்சுப் பொறித்தவுடன் தனது பரிவாரங்களுடன் மடக்கிய பொருள்களைத் தேடி ஓடுவதைக் காணலாம். இளங்குஞ்சுகளுக்குக் கறையான் சுவையான உணவு. செயற்கைத் தீவனங்களால் கொடுக்க முடியாத முக்கியச் சத்துகளை இந்தக் கறையான்கள் கொடுக்கின்றன. கறையான்களில் 36 சதவிகிதம் புரதம், 44 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. இவை இரண்டும் கோழியின் உடல் வளர்ச்சியை அதிகரிக்கும். கறையான்களை உணவாகக் கொடுப்பதால் கோழிகளின் வளர்ச்சி விகிதம் 15 சதவிகிதம் வரை அதிகரிக்கிறது என்று கால்நடை விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். கறையானில் இவ்வளவு நன்மை இருப்பதால், அதை முறையாக வளர்க்கும் நுட்பமும் விவசாயிகளால் பின்பற்றப்படுகிறது.

கறையான்
கறையான்

கறையான் வளர்க்க உயரமான இடம் ஏற்றது. உதாரணமாக, வயலில் உயரமாக உள்ள களத்துமேடு, வைக்கோல் போர் போன்ற இடங்கள் கறையான் வளர்க்க ஏற்றவை. கறையான் வளர்ப்பு பணிகளைத் தொடங்க மாலைநேரம் ஏற்றது. இரண்டு அடி இடத்தைத் தேர்வு செய்துகொள்ளவும். இங்கு புல், பூண்டுகள் இருந்தால், மண்வெட்டியால் அதைச் சுத்தம் செய்யவும். பின்பு அந்த இடத்தில் மண் குளிரும்படி நீர் தெளிக்கவும். கறையான்களைக் கவர்ந்திழுக்கக் காய்ந்த மரம், மட்டைகள், கிழிந்துபோன துணி, மட்கிப்போன வைக்கோல் போன்றவற்றைக் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து அந்த நிலத்தின் மீது போடவும். பின்பு அவற்றின் மீதும் நீர் தெளிக்கவும். இந்தப் பொருள்கள் மீது வெளிச்சம் படாதபடி பழைய மண்பானைகளைக் கவிழ்த்து வைக்கவும். கொஞ்சம் உடைந்த பானைகள் என்றாலும் கூட அவற்றைப் பயன்படுத்தலாம். அடுத்த நாள் மாலையில், அதாவது 24 மணி நேரத்தில் அங்கு கறையான்கள் குடியேறி இருக்கும். பானைகளை எடுத்துவிட்டால் போதும், கறையான்களைத் தின்ன கோழிகள் அங்கு ஓடும். தொடர்ந்து கறையான் வேண்டுமென்றால், கோழிகளின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி இந்த முறையை விரிவுபடுத்திக் கொள்ளலாம். கறையான்களைத் தின்று வளரும், கோழிகளும் ஆரோக்கியமாக இருக்கும். அதன் இறைச்சியின் சுவையும்கூட நன்றாக இருக்கும். கறையான் வளர்ப்பில் சில விஷயங்களை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். அடைமழை பெய்யும்போது, கறையான்கள் வளராது.

பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயன உரம் பயன்படுத்தப்படும் நிலத்தில் கறையான்களின் வளர்ச்சி நன்றாக இருக்காது. எறும்பு புற்று அதிகமாக உள்ள இடங்களிலும் கறையான்கள் வளராது. கறையான் வளர்ப்புத் தொழில்நுட்பம் தமிழ்நாட்டில் பல காலமாகப் பழக்கத்தில் உள்ளது. விவசாயிகளிடம் உள்ள, இந்தத் தொழில்நுட்பத்தை முறையாக ஆய்வு செய்து, கறையான் வளர்ப்பை மேம்படுத்தினால், பெருமளவு விவசாயிகளுக்கு இந்தத் தொழில்நுட்பம் சேரும். கோழிகளுக்கான தீவனச் செலவும் குறையும்.’’

ஒரு செடியில் 12 கிலோ கத்திரி!

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக்கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com PasumaiVikatan என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism