Published:Updated:

உயிர்வேலிக்குச் சிறந்த பயிர் எது?

புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
News
புறா பாண்டி

நீங்கள் கேட்டவை - புறா பாண்டி

“சூரியசக்தியில் இயங்கும் சோலார் பம்ப்செட் அமைக்க, எவ்வளவு மானியம் கொடுக்கப்படுகிறது?’’

கே.சுந்தரம், ஒட்டன்சத்திரம்.

“தற்போது சூரியசக்தியில் இயங்கும் சோலார் பம்ப்செட் அமைக்க விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது வேளாண்மைப் பொறியியல்துறை. பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின்கீழ், இது செயல்படுத்தப்படுகிறது. வேளாண்மைப் பொறியியல்துறை மூலம் விவசாயப் பயன்பாட்டுக்கான திறந்தவெளிக் கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் சூரியசக்தியில் இயங்கும் சோலார் பம்ப்செட்டுகளை 70 சதவிகித மானியத்தில் அமைக்கும் திட்டம் நடப்பு 2020-21-ம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது.

உயிர்வேலிக்குச் சிறந்த பயிர் எது?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 5 ஹெச்.பி முதல் 10 ஹெச்.பி வரை சோலார் பம்ப்செட்டுகள் அமைத்துத்தரப்படும். 5 ஹெச்.பி சோலார் பம்ப்செட்டுகள் அமைக்க அதிகபட்சமாக 2,42,330 ரூபாய் செலவு பிடிக்கும். 7.5 ஹெச்.பி சோலார் பம்ப்செட் அமைக்க அதிகபட்சமாக 3,67,525 ரூபாய் செலவாகும். 10 ஹெச்.பி சோலார் பம்ப்செட் அமைக்க அதிகபட்சமாக 4,39,629 ரூபாய் செலவாகும். இதில் 70 சதவிகித தொகை அரசு மானியமாக வழங்கப்படும்.

ஏற்கெனவே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் இலவச மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்துள்ள விவசாயிகள் அவர்களுடைய முன்னுரிமையைத் துறக்க வேண்டிய அவசியமில்லை. மேலும், தங்களுக்குரிய இலவச மின் இணைப்பு முறை வரும்போது சூரிய சக்தியால் இயங்கும் பம்ப்செட்டுகளை மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கான சம்மதக் கடிதத்தைச் சம்பந்தப்பட்ட உதவிச் செயற்பொறியாளர் வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தில் வழங்க வேண்டும். இது சம்பந்தமாகக் கூடுதல் விவரங்கள் பெற அருகில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.’’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘‘சூடான் முள் பற்றிக் கேள்விப்பட்டோம். இதன் சிறப்புகள் பற்றிச் சொல்லுங்கள்?

ஆர்.காளியம்மாள், பெருந்துறை.

பெரம்பலூர் மாவட்டம் ‘டி.களத்தூர்’ பகுதியைச் சேர்ந்த முன்னோடி விவசாயி மோகனகிருஷ்ணன் பதில் சொல்கிறார்.

புறா பாண்டி
புறா பாண்டி

‘‘சில ஆண்டுகளுக்கு முன்பு பசுமை விகடன் இதழில், இதே பகுதியில் சூடான் முள் சம்பந்தமாகப் பதில் சொல்லியிருந்தேன். அதைப் படித்துவிட்டு, பல விவசாயிகள் தொடர்புகொண்டு பயன்பெற்றார்கள். அடிப்படையில் எனக்குப் புதிய வகைப் பயிர்களை வளர்ப்பதில் ஆர்வம் அதிகம். அந்தத் தேடுதல் மூலம்தான், ‘சூடான் முள்’ என்று சொல்லப்படும் ‘மெல்லிபேரா’ பற்றித் தெரிந்துகொண்டேன். பருவமழை தொடங்கும் முன் விதைகளை விதைத்து விட்டால் போதும். கிடுகிடுவென வளர்ந்து வந்துவிடும். ஆடுகள் இதன் இலைகளைச் சாப்பிடும் என்றாலும், செடிகளில் உள்ள முள்ளைத் தாண்டி நிலத்துக்குள் வர முடியாது. என்னுடைய அனுபவத்தில் சூடான் முள்போல ஒரு உயிர்வேலியைப் பார்த்ததில்லை. இந்த முள்ளை அப்படியே விட்டுவிட்டால், வளர்ந்து மரமாகிவிடும். ஆகையால், நமக்கு தேவையான உயரத்தில் கவாத்துச் செய்து விட வேண்டும். மானாவாரி நிலங்களுக்கு இந்த உயிர்வேலி பாதுகாப்பானது. செலவும் குறைவு.

உயிர்வேலிக்குச் சிறந்த பயிர் எது?

மானாவாரி நிலங்கள் என்றால், விதைப்பதைக் காட்டிலும் கன்றுகளாக வளர்த்து நடவு செய்வது நல்லது. சில நர்சரிகளில் இதன் கன்றுகள் விற்பனை செய்யப்படுகின்றன. மரப்பயிர்கள் சாகுபடி செய்யும் தோட்டங்களில், சூடான் முள்ளை உயிர்வேலியாக அமைத்து, பாதுகாப்பு அரணை உருவாக்கலாம். குறிப்பாக, விலை உயர்ந்த சந்தனம், தேக்கு... போன்ற மரங்கள் ஓரளவு வளர்ந்த பிறகு, இந்த முள்ளை உயிர்வேலியாகப் போட்டால், திருடர்கள் பயம் இருக்காது. ஜே.சி.பி, பொக்லைன்... போன்ற வாகனங்களை வைத்து, முள்ளை அகற்றிவிட்டுத்தான் மரங்களை அறுவடை செய்ய முடியும். அந்த அளவுக்குச் சூடான் முள் வளர்ந்து நின்று பாதுகாக்கும். மேலும், எனது பண்ணையில் அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகைச் செடிகளையும் வளர்த்து வருகிறேன். ஆர்வம் உள்ள விவசாயிகள் பார்வையிடலாம். பள்ளி மாணவர்களிடம் இயற்கை விவசாயம், மூலிகை மற்றும் மரம் வளர்ப்புச் சம்பந்தமாகப் பேசிவருகிறேன்.’’

தொடர்புக்கு, செல்போன்: 98944 01680.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உயிர்வேலிக்குச் சிறந்த பயிர் எது?

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக்கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com PasumaiVikatan என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.