Published:Updated:

வாத்துப் பண்ணை வைக்கலாமா?

புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
புறா பாண்டி

நீங்கள் கேட்டவை - புறா பாண்டி

வாத்துப் பண்ணை வைக்கலாமா?

நீங்கள் கேட்டவை - புறா பாண்டி

Published:Updated:
புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
புறா பாண்டி

‘‘கோழிப் பண்ணைபோல வாத்துப் பண்ணை வைக்க விரும்புகிறேன். எந்த ரகம் ஏற்றது. அதன் விவரத்தைச் சொல்லுங்கள்?’’

- கே.குமரன், வல்லம்.

‘‘வாத்து வளர்ப்பில் அமெரிக்கா முன்னோடியாக இருக்கிறது. காரணம், வாத்து இறைச்சியை விரும்பி உண்ணும் மக்கள் அங்கு அதிகம் இருக்கிறார்கள். நம் நாட்டில் கோழி வளர்ப்புக்கு அடுத்தபடியாக, வாத்து வளர்ப்பு முக்கியமானதாக இருக்கிறது என்பது நம்மில் பலருக்கும் புதிய தகவலாக இருக்கும். கேரளாவை ஒப்பிடும்போது வாத்து இறைச்சி, வாத்து முட்டை குறித்த விழிப்புணர்வு தமிழ்நாட்டில் குறைவாகத்தான் உள்ளது. அதனால் இங்கு வாத்து வளர்ப்புத் தொழில் பெரிய அளவில் வளரவில்லை. இதன் முட்டை மற்றும் இறைச்சிக்கான விற்பனை வாய்ப்பு குறைவாகத்தான் இருக்கிறது. வாத்து முட்டையையும் இறைச்சியையும் சாப்பிடுவது தரக்குறைவானது என்ற எண்ணம் உள்ளது. ஆனால், கேரளாவில் வாத்து முட்டைக்கும் இறைச்சிக்கும் நல்ல விற்பனை வாய்ப்பு உள்ளது. அங்கு வாத்து முட்டை 15 ரூபாய் வரையிலும் விற்பனையாகி வருகிறது. 

புறா பாண்டி
புறா பாண்டி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாத்து இறைச்சி, கோழி இறைச்சியைவிடச் சற்றுக் கடினத்தன்மைகொண்டது. ஆனால், ருசியாகவும் சத்துகள் நிறைந்ததாகவும் இருக்கும். வழக்கமாக வாத்து முட்டை இடத் தொடங்கிய முதல் ஆண்டு மட்டும்தான் முட்டை உற்பத்தி நன்றாக இருக்கும். அதன் பிறகு படிப்படியாக முட்டை உற்பத்தித்திறன் குறையும். ஆனால், ‘காக்கி கேம்பெல்’ ரகத்தில் இரண்டாவது வருடத்தில்கூட முட்டை உற்பத்தி குறையாது. இந்த ‘காக்கி கேம்பெல்’ எனும் வாத்து ரகம் முட்டை உற்பத்திக்கும், ‘பெக்கின்’ எனும் ரகம் இறைச்சிக்கும் ஏற்றவை. காக்கி கேம்பெல் ஒரு முட்டை சுழற்சியில் 300 முட்டைகள் வரை இடக்கூடிய தன்மைகொண்டது. முட்டை உற்பத்தியில் மிகச்சிறந்த இனம் இது. இறைச்சி ரகமான பெக்கின், இந்தியச் சூழ்நிலையில் மிகவும் சிறப்பாக வளர்கிறது. குறைந்த அளவே தீவனத்தை உண்டு, தரமான இறைச்சியை உற்பத்தி செய்யக்கூடியது. 

வாத்துப் பண்ணை
வாத்துப் பண்ணை

இறைச்சிக்காகக் கோழிப்பண்ணை வைப்பதுபோல, வாத்துப் பண்ணையையும் வணிகரீதியாக அமைத்தால் நல்ல லாபம் கிடைக்கும். கர்நாடக மாநிலம், பெங்களூரில் செயல்பட்டுவரும் மத்திய கோழியின மேம்பாட்டு நிறுவனத்தைத் தொடர்பு கொண்டால், வாத்து வளர்க்க ஆலோசனைகளையும் பயிற்சிகளையும் வழங்குவார்கள்.

தொடர்புக்கு: 

The Director, Central Poultry Development Organisation, (Southern Region), Ministry of Agriculture, Department of Animal Husbandry & Dairying, Government of India, Hesaraghatta, Bangalore - 560088, Telephone Nos: 080 28466226, 28466236.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘ஆந்தூரியம் கொய் மலர் வளர்க்க விரும்புகி்றோம. இதை மலைப்பகுதிகளில் மட்டும்தான் சாகுபடி செய்ய முடியுமா?’’

- சி.அன்னக்கிளி, செய்யாறு.

‘‘இந்த மலர் ‘லிட்டில் பாய்’, ‘ஃபிளமிங்கோ பிளான்ட்’ என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. ஆந்தூரிய மலர்கள் அழகுக்காக வீடுகளிலும், நட்சத்திர ஓட்டல்களிலும், சிறப்புக் கூட்டங்கள் நடக்கும் இடங்களிலும் பூந்தொட்டிகளில் வைத்து அழகுபடுத்தப் பயன்படுகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்த வரை கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,500 முதல் 3,500 அடி உயரம் வரையுள்ள மலைப் பிரதேங்களில் வணிகரீதியாக ஆந்தூரியம் பயிர் செய்யலாம். தமிழ்நாட்டில் சேர்வராயன், கீழ்ப்பழநி, ஏலகிரி, கொல்லிமலைப் பகுதிகளில் பயிரிடலாம். மேலும் காற்றின் ஈரப்பதம் அதிக அளவிலுள்ள சமவெளிப் பகுதிகளிலும் பயிரிடலாம். காற்றின் ஈரப்பதம் 60 முதல் 80 சதவிகிதம் வரை இருப்பது நல்லது அல்லது நிழல்வலை குடில் மூலம் இந்த தட்ப வெப்பநிலையை உருவாக்கி, சமவெளியிலும் சாகுபடி செய்யலாம்.

ஆந்தூரியம் மலர்
ஆந்தூரியம் மலர்

ஆந்தூரியம் வெப்ப மண்டலப் பகுதிகளிலுள்ள காடுகளைத் தாயகமாகக் கொண்ட பயிர். செடிகள் செழித்து நன்கு வளர, பகல் நேர வெப்பநிலை 25-30 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும், இரவு நேர வெப்பநிலை 15-20 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்க வேண்டும். `ஆந்தூரியச் செடிகள் நன்கு விரைவாக வளர, அவற்றை 70 முதல் 75 சதவிகிதம் வரை நிழல் கூடாரத்திலோ, நிழல் பகுதியிலோ வளர்க்க வேண்டும்’ என்று விஞ்ஞானிகள் பரிந்துரை செய்கிறார்கள்.

ஆந்தூரியம் செடிகளை வளர்ப்பதற்கு மண்ணில் அமிலக் காரத்தன்மை 5 முதல் 6 வரை இருக்க வேண்டும். பாசன நீர் உப்புத் தன்மையற்றதாக இருக்க வேண்டும். செடிகளின் வேர்ப்பாகத்தில் நீர் தேங்காமல் நல்ல காற்றோட்டமாக இருக்க வேண்டும். ஆந்தூரியத்தை இரு வகைகளாகப் பிரிக்கலாம். தழை, இலைகளுக்காக வளர்க்கப்படுபவை என இவ்வகையில் ‘ஆந்தூரியம்’ ‘ஆன்ட்ரியாமை’, ‘ஆந்தூரியம் செர் சரியானம்’ ஆகியவை மலருக்காக வளர்க்கப்படுபவை. ‘ஆந்தூரியம் கிரிஸ்டலியானம்’, ‘ஆந்தூரியம் கிரனேடே’ போன்ற சிற்றினங்கள் தழை, இலைக்காக வளர்க்கப்படுகின்றன. இந்த வகையில் செடிகள் கவர்ச்சியாகப் பளபளப்பான இலைகளை உற்பத்தி செய்கின்றன. நடு, பக்க நரம்புகள் வெண்மை நிறத்திலிருக்கும். ஒரு செடியிலிருந்து ஆண்டு ஒன்றுக்குக் குறைந்தபட்சம் ஏழு மலர்கள் கிடைக்கும். மலர் ஒன்றின் விலை 10 ரூபாய் முதல் விற்பனையாகிறது. நிறம், சந்தையின் தேவையைப் பொறுத்து விலையில் ஏற்ற இறக்கம் ஏற்படும். இந்தக் கொய்மலர்ச் சாகுபடி பற்றிக் கூடுதல் விவரங்கள் பெற கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையிலுள்ள மலர் ஆராய்ச்சி மையத்தைத் தொடர்புகொள்ளலாம். பிற மலர்ச் சாகுபடி சம்பந்தமாகவும் இங்கு ஆலோசனை பெறலாம்.’’

தொடர்புக்கு, தொலைபேசி: 04652 285009.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வாத்துப் பண்ணை வைக்கலாமா?

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக்கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com PasumaiVikatan என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism