Published:Updated:

கர்நாடக விவசாயிகள் விரும்பும் வடுமாங்காய் சாகுபடி!

புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
புறா பாண்டி

நீங்கள் கேட்டவை - புறா பாண்டி

கர்நாடக விவசாயிகள் விரும்பும் வடுமாங்காய் சாகுபடி!

நீங்கள் கேட்டவை - புறா பாண்டி

Published:Updated:
புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
புறா பாண்டி

‘‘வடுமாங்காய் பயிரிட விரும்புகிறோம். இதன் விவரங்களைச் சொல்லுங்கள்?’’

கே.ஏ.விஜயகுமார், சென்னை.

‘‘தமிழ்நாட்டில் வடுமாங்காய் என்று ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு ரகத்தைச் சொல்வது உண்டு. உதாரணமாகத் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ‘கெத்தமார்’ ரகத்தைப் பயன் படுத்துகிறார்கள். ஊறுகாய் மாங்காய் என்றே இதற்குப் பெயர். கெத்தமாருக்கு அடுத்து சீரி, ருமானி, சர்க்கரைக் குட்டி, தோத்தாபுரி, அல்லி பசந்த்... இந்த ரகங்களையும் கூட ஊறுகாய்க்குப் பயன்படுத்துகிறார்கள்.

குறிப்பாக, ருமானி பிஞ்சுகளைப் பறித்து ‘வடுமாங்காய்’ என்ற பெயரில் ஊறுகாய் தயாரிக்கப் படுகிறது. ஆனால், இந்த வடுமாங்காய் போலத்தான். கர்நாடகாவில் ‘வடுமாங்காய்’ ரகம் அதிக அளவில் சாகுபடி செய்யப் படுகிறது. இதைக் கன்னடத்தில் ‘அப்பி மிடி’ (Appemidi) என்கிறார்கள். இதற்கு மாம்பிஞ்சு என்று பொருள். இதில் பலவகையான மா ரகங்கள் காடுகளில் இயற்கையாகவே உருவாகியுள்ளன. இப்படிக் காடுகளில் காய்த்துத் தொங்கிய மாம்பிஞ்சுகளைப் பறித்து வந்து விற்பனை செய்தார்கள். ஒரு கட்டத்தில் இதற்கான தேவை அதிகரிக்கவும், காட்டில் இருந்த மா ரகத்தை, நர்சரிகளுக்குக் கொண்டு வந்து வளர்த்து அதன் மூலம் கன்றுகளை உருவாக்கி விற்பனை செய்துவருகிறார்கள். இந்த ‘வடுமாங்கா’ சிறிய வடிவில்தான் இருக்கும்.

வடுமாங்காய்
வடுமாங்காய்

நவம்பர் மாதம் பூ பூக்கும். ஏப்ரல் மாதம் அறுவடைக்கு வந்துவிடும். மொத்தம் ஐந்து மாதங்கள்தான் இதன் மகசூல் காலம். கொத்துக் கொத்தாகக் காய்க்கும். நடவு செய்த நான்காம் ஆண்டு முதல் காய்க்கத் தொடங்கும். குறைந்தபட்சமாக வடுமாங்காய் ஒன்று ஒரு ரூபாய் முதல் மூன்று ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

20 ஆண்டுகளான மரம் ஒன்று 25,000 காய்கள்கூடக் காய்க்கின்றன. ஒரு ரூபாய் என்று வைத்துக்கொண்டாலும், ஒரு மரத்தில் ஆண்டுக்கு 25,000 ரூபாய் வருமானம் எடுக்க முடியும். பழத்துக்காக மா சாகுபடி செய்வதை விட, வடுமாங்காய்க்காகச் சாகுபடி செய்யும்போது, நல்ல வருமானம் கிடைக்கிறது என்பது கர்நாடக விவசாயிகளின் அனுபவம்.

வடுமாங்காய்
வடுமாங்காய்

இந்த ரகத்தைப் பொறுத்தவரை காயாக இருக்கும்போதே பறித்துவிட வேண்டும். பறிக்காவிட்டால், பழுத்து கீழே விழுந்துவிடும். இதை எடுத்து வந்து சாறு எடுத்துக் குழம்பு சமைத்துச் சாப்பிட்டால், அதன் சுவை அலாதியானது. ஒவ்வொரு ஆண்டும் 100 கோடி ரூபாய்க்கு வடுமாங்காய் சந்தையில் விற்பனையாகிறது எனப் புள்ளிவிவரம் சொல்கிறது.

கர்நாடகாவைப் பொறுத்தவரை மானா வாரியாகத்தான் இது பயிரிடப்படுகிறது. குறிப்பாக மங்களூரு, ஷிமோகா போன்ற மாவட்டங்களில் இந்த மரங்கள் அதிகளவு உள்ளன. வடுமாங்காயின் சிறப்புகளைச் சொல்ல ஆண்டுக்கு ஒரு முறை ஏப்ரல் மாதத்தில், ‘வடுமாங்காய் மேளா’ ஷிமோகாவில் நடத்தப்படுகிறது. வடுமாங்காய் ஊறுகாய் இல்லாமல், மங்களூரு, ஷிமோகா பகுதிகளில் விருந்து நடக்காது. தமிழ்நாட்டில் இந்த ரகத்தை வணிக ரீதியாகப் பயிரிட்டுள்ளவர் களின் எண்ணிக்கை குறைவு. ஒரு மரம், இரண்டு மரம் என்ற எண்ணிக்கையில் ஆசைக்காக வளர்ப்பவர்கள்தான் இங்கு அதிகம். கர்நாடகாவில் வடுமாங்காய் கன்றுகள் வாங்க வேண்டும் என்று சென்றால், ஒவ்வொரு நர்சரியிலும் ஒவ்வொரு பெயர் சொல்வார்கள். சிலர் தன் பெயர், தன் மனைவி பெயர், பிள்ளைகள் பெயரைக் கூட இந்த ரகத்துக்குச் சூட்டி அழகு பார்க்கிறார்கள். பெங்களூரில் உள்ள இந்தியத் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் வடுமாங்காய் ரகங்கள் குறித்த ஆராய்ச்சி நடந்து வருகிறது. இங்கு தொடர்பு கொண்டால், உரிய வழிகாட்டுவார்கள்.

தொடர்புக்கு,

Director,

ICAR-IIHR/Officer Incharge, ATIC,

Hessarghatta Lake P.O, Bengaluru-560089

Phone No: 080 28446815, 28446010, 23086100, Email: atic.iihr@icar.gov.in

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
புறா பாண்டி
புறா பாண்டி

‘‘நேரடி நெல் விதைப்புக் கருவி எங்கு கிடைக்கும்?’’

கே.பி.அருணாசலம், பவானி.

கர்நாடக விவசாயிகள் விரும்பும் வடுமாங்காய் சாகுபடி!

நெல் நாற்று நடுவதைத் தவிர்த்து நேரடியாக நெல் சாகுபடி செய்ய, நன்செய் நிலங்களில் இந்த நேரடி நெல் விதைக்கும் கருவியைப் பயன்படுத்தலாம். உருளைகளில் முளைகட்டிய நெல் விதைகளை நிரப்பி, அதை ஒரு நபர் வயலில் இழுத்துச் செல்வதன் மூலம் விதைகள் வரிசையாக விதைக்கப்படுகின்றன. நாற்று விட்டு, நடவு செய்யும் செலவும் குறைகிறது. விளைச்சலும் குறைவில்லாமல் கிடைக்கிறது. தகுந்த இடைவெளியில் விதைப்பதால், களையெடுப்பதிலும் சிரமம் ஏற்படுவதில்லை. இந்தக் கருவியின் தொழில்நுட்பத்தை, கோயம்புத்தூரில் உள்ள மத்திய வேளாண்மை பொறியியல் நிறுவனத்தின் மண்டல மையத்தில் பெற்று, தனியார் நிறுவனங்கள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றன.

தொடர்புக்கு,

மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம்,

மண்டல மையம்,

கரும்பு உற்பத்தி நிறுவனம் அஞ்சல்,

கோயம்புத்தூர்- 641 007.

தொலைபேசி:0422 2472624, 2472623.

கர்நாடக விவசாயிகள் விரும்பும் வடுமாங்காய் சாகுபடி!

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக்கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com PasumaiVikatan என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.