Published:Updated:

நேரடி விற்பனையில் அதிக லாபம் சம்பாதிப்பது எப்படி... வழிகாட்டும் பசுமை விகடன் பயிற்சி!

விவசாயி முருகன்
விவசாயி முருகன்

பல பயனுள்ள அம்சங்கள் இதில் இடம்பெறுவதால், விவசாயிகள், தொழில்முனைவோர்கள் எனப் பல தரப்பினரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஒரு பயிரை மட்டும் நம்பி இருந்தால் நிறைவான, உத்தரவாதமான லாபம் பார்க்க முடியாது. உற்பத்தி மற்றும் விற்பனையில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், ஒட்டுமொத்தமாக நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும். பல பயிர் சாகுபடிதான் விவசாயிகளுக்கு பல வகைகளிலும் உறுதுணையாக இருக்கும். உற்பத்தி செய்த விளை பொருள்களை, சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடம் நேரடியாகவும் விற்பனை செய்தார்கள் முன்னோர்கள். அதனால் இடைத்தரகர்கள், வியாபாரிகளின் குறுக்கீடு இல்லாமல் முழுமையான லாபம் விவசாயிகளுக்குக் கிடைத்தது.

விவசாயி முருகன்
விவசாயி முருகன்

தற்போது பல பயிர் சாகுபடியில் பலரும் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். விளையும் பயிர்களை மதிப்புகூட்டி நேரடியாக விற்பனை செய்யும்போது லாபம் இருமடங்காகிறது. அந்த வகையில் பல பயிர் சாகுபடி மற்றும் நேரடி விற்பனை தொடர்பாக பசுமை விகடன் வாசகர்கள் தெரிந்துகொண்டு பயன்பெறும் வகையில் நேரலை பயிற்சி வகுப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது பசுமை விகடன்.

தஞ்சாவூர் மாவட்டம் உச்சிமாஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகன்.

இவர், 3 ஏக்கர் குத்தகை நிலத்தில் இயற்கை விவசாயத்தில் வாழை, கரும்பு, காய்கறிகள் எனப் பல பயிர்களை சாகுபடி செய்து வருகிறார். தான் விளைவிக்கும் பொருள்களை மதிப்புக்கூட்டி இவரே நேரடியாக விற்பனையும் செய்கிறார். அதன்மூலம் மாதம் 60,000 ரூபாய் லாபம் ஈட்டி வருகிறார். இதுகுறித்து 10.1.2021 தேதியிட்ட பசுமை விகடன் இதழில் அட்டைப்பட கட்டுரை வெளியாகியிருந்தது. இவரது பண்ணை மற்றும் விற்பனை செயல்பாடுகளை நேரலை நிகழ்ச்சியில் காணொலி வாயிலாகப் பார்க்கலாம்.

பசுமை விகடன் நேரலை பயிற்சி
பசுமை விகடன் நேரலை பயிற்சி

முருகன், தனது அனுபவங்களையும் இயற்கை வேளாண் தொழில்நுட்பங்களையும் பகிர்ந்துகொள்ள இருக்கிறார். பல பயிர் சாகுபடியில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டமிடல், மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பம், நேரடி விற்பனையில் உள்ள நுணுக்கங்கள் எனப் பலவற்றை பற்றியும் ஆலோசனை சொல்ல இருக்கிறார்.

10.01.2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணிவரை அவரது தோட்டத்திலிருந்து நேரலை நிகழ்ச்சி நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் இதில் கலந்துகொண்டு விவசாயி முருகனின் ஆலோசனைகளைக் கேட்டு தெளிவு பெறலாம். தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கும் விளக்கம் பெறலாம். விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள இணைப்பை அழுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளவும்.

https://events.vikatan.com/185-cultivation-of-many-crops/

அடுத்த கட்டுரைக்கு