Published:Updated:

`கோதுமைப் புல் வளர்ப்பில் மாதம் ₹2 லட்சம் வருமானம்!' - வழிகாட்டும் ஆன்லைன் பயிற்சி

கோதுமைப் புல் வளர்ப்பு

இதில் கோதுமை விதைத் தேர்வு, பாத்திகட்டும் முறை, தண்ணீர் பாய்ச்சும் முறை, கோதுமை புல்லை, அறுத்து காயவைத்து அரைத்து பொடியாக்கி, அமேசானில் விற்பனை செய்வது எப்படி, பொடியாகக் கிடைக்கும் எனில் அதை எப்படி ஜூஸ் போட்டு குடிப்பது என்பன போன்ற சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும்.

`கோதுமைப் புல் வளர்ப்பில் மாதம் ₹2 லட்சம் வருமானம்!' - வழிகாட்டும் ஆன்லைன் பயிற்சி

இதில் கோதுமை விதைத் தேர்வு, பாத்திகட்டும் முறை, தண்ணீர் பாய்ச்சும் முறை, கோதுமை புல்லை, அறுத்து காயவைத்து அரைத்து பொடியாக்கி, அமேசானில் விற்பனை செய்வது எப்படி, பொடியாகக் கிடைக்கும் எனில் அதை எப்படி ஜூஸ் போட்டு குடிப்பது என்பன போன்ற சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும்.

Published:Updated:
கோதுமைப் புல் வளர்ப்பு

``வேலை கிடைக்கல..."
``என்ன தான் சம்பாதிச்சாலும் நிம்மதியே இல்ல..."
``ஏதாவது தொழில் செய்து வாழ்க்கையில் முன்னேற ரெடியா இருக்கேன் ஐடியா தான் இல்ல... குறிப்பாக, விவசாயம் செய்ய ரொம்ப ஆர்வம். ஆனா, எப்படி தொடங்குவதுன்னு தெரியல..."

அண்மையில் இப்படியான உரையாடல்கள் இளைஞர்கள் மத்தியில் அதிகம் நடப்பதை எல்லோரும் அறிவோம். அவர்களுக்கான வழிகாட்டியாகத்தான் பசுமை விகடன் தொடர்ந்து இயங்கி வருகிறது.

பொதுவாக, விவசாயம் செய்வதற்கு, அதிக நிலம் வேண்டும், தண்ணீர் வேண்டும், அதிக எண்ணிக்கையில் வேலையாட்கள் வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. ஆனால், சிறிய இடத்தில், குறைவான தண்ணீரைப் பயன்படுத்தி, வேலையாட்கள் இன்றி பெரிய அளவில் உற்பத்தி செய்து, மதிப்புக்கூட்டி நல்ல லாபம் ஈட்ட முடியும் என்பதையும் பலர் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர்.

ராஜ்குமார்
ராஜ்குமார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே ஊத்துப்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் 50 சென்ட் நிலத்தில், குறைவான தண்ணீரைப் பயன்படுத்தி கோதுமைப் புல் பயிரிட்டு மாதம் 2 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டி வருகிறார்.

கோதுமை புல் பயிரிடுவதால் மட்டுமே மாத வருமானம் கிடைத்துவிடுமா? கண்டிப்பாக இருக்காதல்லவா... புல்லை அரைத்து ஜூஸ் செய்து அமேசானில் விற்பதே அவரின் வெற்றிக்கும் மாத வருமானத்துக்கும் காரணம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அருகம்புல்லை மட்டுமே ஜூஸ் போட்டு குடிப்பதாகக் கேள்விப்பட்ட நமக்கு கோதுமை புல் ஜூஸ் புதிதுதானே. மருத்துவ குணம் அதிகம் கொண்ட பச்சை ரத்தம் என அழைக்கக்கூடிய கோதுமை புல் ஜூஸ் வடமாநிலங்கள் பிரபலம். நாம் இங்கு டீ குடிப்பதைப் போல வடமாநிலங்களில் குடிக்கிறார்களாம். அதை நேரிடையாகப் பார்த்து, கோதுமை புல் விவசாயத்தின் அனைத்து விஷயங்களையும் தேடிக் கற்று தமிழகம் கொண்டுத்து வந்துள்ளார் ராஜ்குமார். பிறகுதான் கோதுமை புல் ஜூஸ் சர்வதேச அளவில் மிகவும் நல்ல விற்பனை ஆகக் கூடியது என்றும், லாபம் தரக்கூடிய தொழில் என்பதையும் அறிந்துள்ளார்.

கோதுமை புல் பொடி
கோதுமை புல் பொடி

அடடே இது நல்லா இருக்கே என நம் எல்லோருக்கும் தோன்றும். அதில் பலர் தாராளமாகக் கோதுமை புல் உற்பத்தியில் இறங்க முடிவெடுப்பார்கள். இருப்பினும் அவர்களுக்கு சில சந்தேகங்கள் இருக்கத்தானே செய்யும். அதைப் போக்கதான் பசுமை விகடன் சார்பில் ஆன்லைன் வாயிலான பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதில் கோதுமை விதைத் தேர்வு, பாத்திகட்டும் முறை, தண்ணீர் பாய்ச்சும் முறை, எத்தனை நாள்களில் நன்றாக வளரும். அதை எப்போது அறுக்க வேண்டும். சரியாக 8 நாள்கள் வளர்க்கப்படும் கோதுமைப் புல்லை, அறுத்து காயவைத்து அரைத்து பொடியாக்கி, அமேசானில் விற்பனை செய்வது எப்படி, கோதுமை புல் மூலம் வேறு என்ன மதிப்புக்கூட்டு பொருள் செய்யலாம்.

அதன் மூலம் எப்படி வருவாய் ஈட்டுவது, மருத்துவ குணம் கொண்டது என்றால் எந்தெந்த பிரச்னைகள் உள்ளவர்கள் கோதுமைப் புல் ஜூஸ் அருந்தலாம். பொடியாகக் கிடைக்கும் எனில், அதை எப்படி ஜூஸ் போட்டு குடிப்பது என்பன போன்ற சந்தேகங்கள் இருந்தால் அவரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

ஆன்லைன் பயிற்சி
ஆன்லைன் பயிற்சி

இதற்காக பசுமை விகடன் வழங்கும் ஆன்லைன் நிகழ்ச்சியில், முன்னோடி பண்ணையாளர் ராஜ்குமார் 4.2.2022 அன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை பயிற்சி வழங்க உள்ளார். விருப்பமுள்ளோர் முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம்.

முன்பதிவுக்கு: https://bit.ly/3Aywybd

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism