Published:Updated:

`வருமானம் செழிக்க வேளாண் காடு வளர்ப்பு' - பசுமை விகடனின் இலவச ஆன்லைன் பயிற்சி

பசுமை விகடன்
பசுமை விகடன் ( vikatan )

இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள உங்கள் பெயர், ஊர், மாவட்டம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு 9840768475 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பவும்.

பசுமை விகடன் சார்பில் விவசாயம் சார்ந்து பல பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாகக் கொரோனா காலத்தில் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க நேரலை (ஆன்லைன்) பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பசுமை விகடனும் கோவை வன மரபியல் மற்றும் வனப்பெருக்கு நிறுவனமும் இணைந்து 'பணம் தரும் மரப்பயிர்கள் சாகுபடி' என்ற தலைப்பில் மூன்று தேதிகளில், மூன்று தலைப்புகளில் பயிற்சிகள் நடைபெற உள்ளன. 12-ம் தேதி 'வருமானம் செழிக்க வேளாண் காடு வளர்ப்பு', 19-ம் தேதி 'குமிழ் மரச் சாகுபடியில் குறைவில்லா வருமானம்', 26-ம் தேதி 'கைமேல் காசு தரும் கடம்ப மரச் சாகுபடி' ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன.

12-ம் தேதி நடைபெற உள்ள 'வருமானம் செழிக்க வேளாண் காடு வளர்ப்பு' என்ற பயிற்சியில் வேளாண் காடுகளுக்கு ஏற்ற நில அமைப்பு, மண் வகை மற்றும் பாசன வசதி, அறிவியல் ரீதியிலான நவீனத் தொழில்நுட்பங்கள் வேளாண் நிலங்களில் மரப்பயிர்ச் சாகுபடி செய்வது லாபகரமானதா? மண் மற்றும் நிலத்தடி நீர்வள மேம்பாடு, வேலியோரத் தடுப்பான் வகை மரங்கள் உள்ளிட்ட பல விஷயங்களைப் பற்றி வன மரபியல் மற்றும் வனப்பெருக்கு நிறுவனத்தின் விஞ்ஞானி முனைவர் சி.புவனேசுவரன் ஆலோசனை வழங்குகிறார்.

pasumai vikatan
pasumai vikatan
vikatan

இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள உங்கள் பெயர், ஊர், மாவட்டம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு 9840768475 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பவும். https://bit.ly/2zSaH3H என்ற இணையதள முகவரி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள Zoom செயலியை செல்போனிலோ, கணினியிலோ தரவிறக்கம் செய்துகொள்ளவும்.

நேரம் - காலை 10 முதல் 10.45 மணி வரை.

அடுத்த கட்டுரைக்கு