Published:Updated:

பசுமை விகடன் நடத்தும் ஆன்லைன் மாடித்தோட்டப் பயிற்சி!

மாடித்தோட்டம்
மாடித்தோட்டம்

மாடித்தோட்டம் அமைப்பது குறித்து விரிவாகப் பேச இருக்கும் இந்நிகழ்வு, இலவச நிகழ்வாக நடக்கவிருக்கிறது. இதில் கலந்துகொண்டு மாடித்தோட்டத்தைப் பற்றி நிறைய கேள்விகள் கேட்கலாம், ஆலோசனை பெறலாம்.

மாடித்தோட்டம், இன்று நகரவாசிகளின் விவசாயக் கனவை நிறைவேற்றி வரும் ஓர் அற்புத பொக்கிஷம். மன அழுத்தத்தைக் குறைப்பது, வீட்டின் காய்கறித் தேவையை வெகுவாகக் குறைப்பது, உடற்பயிற்சி, கண்ணுக்குக் குளிர்ச்சி என மாடித்தோட்டத்தின் பயன்களைச் சிலாகித்துச் சொல்கிறார்கள் தோட்டம் அமைத்தவர்கள். மாடித்தோட்டத்துக்கு எந்த முதலீடும் தேவையில்லை. வீட்டில் கிடக்கும் பழைய பிளாஸ்டிக் பொருள்கள், பைகள் என அவற்றைக்கொண்டே ஒரு மாடித்தோட்டத்தை எளிமையாக உருவாக்கிவிட முடியும். மாடித்தோட்டத்துக்கான முதலீடு என்பது ஆர்வமும் முயற்சியுமே ஆகும். இது இருந்தால் மட்டும் போதும் தேவையைப் பொறுத்து மாடித்தோட்டங்களை அமைத்துக்கொள்ள முடியும்.

மாடித்தோட்டத்துக்கு அரசும் உதவி புரிகிறது. தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பாக சென்னை, கோயம்புத்தூர் போன்ற நகரங்களில் மாடித்தோட்ட உபகரணங்கள் செட்டாக ரூ.500க்கு வழங்கப்படுகின்றன. இதில் விதைகள், பைகள், தேங்காய்நார்க்கழிவு உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இதைக் கொண்டும் எளிமையாக அமைக்கலாம். மாடித்தோட்டத்தில் விளைவிக்கப்படுவதில் காய்கறிகள் முன்னணியில் இருக்கின்றன. தக்காளி, கத்திரிக்காய், வெண்டை, முள்ளங்கி, மலர்கள், கீரைகள் உள்ளிட்டவை எளிதாக வளர்ந்துவிடும். சிலர் நெல்லைக்கூட மாடித்தோட்டத்தில் விளைவிக்க முடியும் என்கிறார்கள். மாடித்தோட்டத்துக்குத் தண்ணீர் முக்கியம். இதனால் கட்டடம் பாதிக்கப்படும் என்கிறார்கள். அதில் உண்மையில்லை. அதிலிருந்து தற்காத்துக்கொள்ளவும் பல வழிகள் இருக்கின்றன.

அனூப்குமார்
அனூப்குமார்

இப்படி மாடித்தோட்டம் அமைப்பதற்கான இடத்தைத் தேர்ந்தெடுப்பது, எவற்றிலெல்லாம் செடிகளை வளர்ப்பது, நீர்ப்பாசனம், பூச்சிகளைக் கண்காணித்தல் உள்ளிட்டவை குறித்து பசுமை விகடன் நடத்தும் ZOOM மீட்டிங்கில் பேச இருக்கிறார் இயற்கை வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் மாடித்தோட்ட ஆலோசகர் சி.பி.அனூப்குமார். சுமார் இருபது ஆண்டுகளாக இயற்கை வேளாண்மையில் ஆலோசகராக இருந்து செயல்பட்டு வருகிறார். பத்தாண்டுகளாக மாடித்தோட்டம் குறித்து ஆலோசனை வழங்கி வருகிறார். எண்ணற்ற பண்ணைகளைப் பார்த்த வகையிலும், பல மாடித்தோட்டங்களுக்கு ஆலோசனை வழங்கிய வகையிலும் பசுமை விகடன் நடத்தும் இந்த ஆன்லைன் நேரலைப் பயிற்சியில் பேச இருக்கிறார். நாளை ஜூன் 6-ம் தேதி (சனிக்கிழமை) பேச இருக்கிறார்.

மாடித்தோட்டம் அமைப்பது குறித்து விரிவாகப் பேச இருக்கும் இந்நிகழ்வு, இலவச நிகழ்வாக நடக்க இருக்கிறது. இதில் கலந்துகொண்டு மாடித்தோட்டத்தைப் பற்றி நிறைய கேள்விகள் கேட்கலாம், ஆலோசனை பெறலாம்.

இந்நிகழ்வில் நேரடியாகப் பங்கேற்கலாம். நிகழ்வில் கலந்துகொள்ள உங்கள் ஸ்மார்ட்போனில் Zoom செயலியைத் தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும். இந்த லிங்க்குக்கு https://zoom.us/j/92770520467 செல்லவும்.

Meeting ID: 927 7052 0467

Password: 719861

நேரம்: மாலை 4 மணி முதல் 5 மணி வரை

நிகழ்வு தொடங்குவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் விவரங்களுக்கு: 99400 72144

அடுத்த கட்டுரைக்கு