Published:Updated:

`உயர் விளைச்சல் தரும் புதிய சவுக்கு ரகங்கள்' - பசுமை விகடனின் இலவச நேரடி ஆன்லைன் பயிற்சி

online training
online training ( jayaraman )

சவுக்கு நாற்றுகள் கிடைக்கும் இடம், அறிவியல் ரீதியிலான நவீன சாகுபடி நுட்பங்கள், மகசூல், விற்பனை மற்றும் சந்தை வாய்ப்புகள் ஆகியவற்றைப் பற்றி வன மரபியல் மற்றும் வனப்பெருக்கு நிறுவனத்தின் விஞ்ஞானி முனைவர் ஏ.நிகோடிமஸ் ஆலோசனை தர இருக்கிறார்.

பசுமை விகடன் சார்பில் விவசாயம் சார்ந்து பல பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாகக் கொரோனா காலத்தில் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க நேரலை(ஆன்லைன்) பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாகப் பசுமை விகடனும், கோவை வன மரபியல் மற்றும் வனப்பெருக்கு நிறுவனமும் இணைந்து 'பணம் தரும் மரப்பயிர்கள் சாகுபடி' என்ற தலைப்பில் நான்கு தேதிகளில், நான்கு தலைப்புகளில் பயிற்சிகள் நடைபெற உள்ளன. வரும் 5-ம் தேதி 'உயர் விளைச்சல் தரும் புதிய சவுக்கு ரகங்கள்', 12-ம் தேதி 'வருமானம் செழிக்க வேளாண் காடு வளர்ப்பு', 19-ம் தேதி 'குமிழ் மரச் சாகுபடியில் குறைவில்லா வருமானம்', 26-ம் தேதி 'கைமேல் காசு தரும் கடம்ப மரச் சாகுபடி' ஆகிய நான்கு பயிற்சிகள் நடைபெற உள்ளன.

online training
online training
jayaraman

5-ம் தேதி நடைபெற உள்ள 'உயர் விளைச்சல் தரும் புதிய சவுக்கு ரகங்கள்' என்ற பயிற்சியில் சவுக்கு சாகுபடிக்கு ஏற்ற நில அமைப்பு, மண் வகை மற்றும் பாசன வசதி, அதிக மகசூல் கொடுக்கும் புதிய ரகங்கள், சவுக்கு நாற்றுகள் கிடைக்கும் இடம், அறிவியல் ரீதியிலான நவீன சாகுபடி நுட்பங்கள், மகசூல், விற்பனை மற்றும் சந்தை வாய்ப்புகள் ஆகியவற்றைப் பற்றி வன மரபியல் மற்றும் வனப்பெருக்கு நிறுவனத்தின் விஞ்ஞானி முனைவர் ஏ.நிகோடிமஸ் ஆலோசனை தர இருக்கிறார்.

இதுபற்றிப் பேசிய முனைவர் நிகோடிமஸ்,``கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரைக்கும் நாட்டுச் சவுக்கு ரகங்கள்தான் சாகுபடி செய்யப்பட்டன. இன்று உயர் விளைச்சல் தரும் சவுக்கு ரகங்கள் நடவு செய்து கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள். பெரும்பாலான சவுக்கு விவசாயிகள் அதிக மகசூல் எடுக்கும் முறை, நடவு நுட்பம், மறுதாம்பு ஆகிய முறைகளைச் சரிவரக் கவனிப்பதில்லை. சவுக்கு சாகுபடியில் ஒரு ஏக்கருக்கு 50 டன்னுக்கு மேல் மகசூல் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன. சவுக்கு மகசூலைப் பெருக்கும் வழிமுறைகள், விற்பனை வாய்ப்புகள், உயர் ரகங்கள் எனப் பல விஷயங்களை வரும் 5-ம் தேதி பசுமை விகடன் வாசகர்களிடம் உரையாற்ற இருக்கிறேன். சவுக்கு சம்பந்தமாக என்ன விதமான சந்தேகங்களையும் இங்குக் கேட்கலாம். எங்கள் மையத்தை எப்போதும் அணுகலாம். ஆலோசனை சொல்லத் தயாராக இருக்கிறோம்." என்றார்.

கடன் மியூச்சுவல் ஃபண்டுகள்: நாணயம் விகடன் சார்பில் ஜூன் 13 –ல் ஆன்லைன் பயிற்சி வகுப்பு

இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள உங்கள் பெயர், ஊர், மாவட்டம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு 9840768475 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பவும். https://bit.ly/2zSaH3H என்ற இணையதள முகவரி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள Zoom செயலியை செல்போனிலோ அல்லது கணினியிலோ தரவிறக்கம் செய்துகொள்ளவும்.

அடுத்த கட்டுரைக்கு