Published:Updated:

செம்மரம்: ஏக்கருக்கு ரூ.4 கோடி வருமானம்! சாகுபடி முதல் விற்பனை வரை வழிகாட்டும் ஆன்லைன் பயிற்சி

தனது செம்மரக் காட்டில் ஆர்.பி.கணேசன்
தனது செம்மரக் காட்டில் ஆர்.பி.கணேசன்

சுற்றுச்சூழலுக்கும், காற்று மாசைக் குறைப்பதற்கும், மழையை ஈர்ப்பதற்கும் பேருதவி செய்வதோடு நடவு செய்பவர்களுக்கு நல்ல வருமானத்தையும் கொடுக்கின்றன மரங்கள்.

வங்கியில் போடும் பணத்தைவிட, நிலத்தில் நடும் மரங்கள் கொடுக்கும் பயன்கள் அதிகம். சுற்றுச்சூழலுக்கும், காற்று மாசைக் குறைப்பதற்கும், மழையை ஈர்ப்பதற்கும் பேருதவி செய்வதோடு நடவு செய்பவர்களுக்கு நல்ல வருமானத்தையும் கொடுக்கின்றன மரங்கள். இப்படி வளர்க்கப்படும் சில மரங்கள், வளர்ப்பவர்களைக் கோடீஸ்வரர்களாக்கும் தன்மை உடையவை. அவற்றில் செம்மரம், சந்தன மரம், கருங்காலி, ஈட்டி போன்றவை முக்கிய இடத்திலிருக்கின்றன.

வளர்ந்து வரும் செம்மரங்கள்
வளர்ந்து வரும் செம்மரங்கள்

அதிலும் செம்மரங்கள் வறண்ட நிலங்களில் சாகுபடி செய்வதற்கு ஏற்றவையாக இருப்பதால் தமிழ்நாட்டில் பல விவசாயிகள் செம்மரச் சாகுபடி செய்து வருகிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையைச் சேர்ந்த ஆர்.பி.கணேசன். 47 ஏக்கர் நிலத்தில் செம்மரச் சாகுபடி செய்துவருகிறார். அவர் சொல்வதைக் கேட்போம்.

"செம்மரங்களுக்குக் கன்னு வாங்குறதும், நடவு செய்யறதும்தான் வேலை. மத்தபடி தரிசு நிலங்கள்ல மானாவாரிப் பயிராகத்தான் வளர்த்துட்டு வர்றேன். முதல் அஞ்சு வருஷத்துக்கு நிலக்கடலை, பயறு வகைகள்னு ஊடுபயிர்லயும் வருமானம் பார்க்கலாம். அதேசமயம் சாகுபடி செய்யப்படும் பகுதியின் மழையளவு, மண் தன்மை, தட்பவெப்பத்தைத் தெரிஞ்சு வெச்சிருக்கிறது முக்கியம். மற்ற விவசாயத்துடன் மர வளர்ப்பும் ஒருங்கிணைஞ்சு நடந்துட்டு வந்தால் வருமானம் அதிகரிக்கும்.

செம்மரக் காடு
செம்மரக் காடு

இப்போ என்னோட அனுபவத்துல மிக வறண்ட பூமிக்கு எட்டடியும், வளமான பூமிக்கு 10 அடியும் இடைவெளிவிட்டு நடவு செய்யுமாறு பரிந்துரைக்கிறேன். அதே மாதிரி சாகுபடி செய்யப்படும் பகுதியின் மழையளவு, மண் தன்மை, தட்பவெப்பத்தைத் தெரிஞ்சு வெச்சிருக்கிறது முக்கியம். விற்பனையில் செம்மரத்தை ஏ, பி, சி, டி-னு நான்கு தரமா பிரிக்கிறாங்க. இன்றைய சந்தை மதிப்பில் ‘சி’ தர செம்மரம் ஒரு டன் 20-25 லட்சம் ரூபாய் போகுது. ஒரு கிலோ 2,000 ரூபாய் என்ற கணக்குல ஒரு மரத்துக்கு 100 கிலோ கிடைச்சாக்கூட செலவு, வரிகள் போக ஒரு லட்சம் ரூபாய்க்குக் குறையாது. ஒரு மரம் ஒரு லட்சம் ரூபாய் என்றால் ஒரு ஏக்கரில் விளையும் 400 மரங்களுக்கு 4 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.

செம்மர ஏற்றுமதிக்கு மத்திய அரசும் உதவி வருது. செம்மரம் வெளிநாடுகளுக்குத்தான் அதிகம் ஏற்றுமதியாகுது. குறிப்பா ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகுது. இந்தியாவுல டிம்பர் மார்க்கெட்டிலிருக்கும் கம்பெனிகள் இதை வாங்குகின்றன. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் தனியார் நிலங்கள்ல செம்மரம் அதிக அளவுல சாகுபடி செய்யப்படுது. சுமார் 5,000 ஏக்கர்ல சாகுபடி செய்யப்பட்டு வருது’’ என்றவர் செம்மரம் குறித்து பசுமை விகடன் நடத்தும் நேரலை ஆன்லைன் பயிற்சியில் விரிவாகப் பேச இருக்கிறார்.

'செம்மரம் ...ஏக்கருக்கு ரூ.4 கோடி வருமானம்! சாகுபடி முதல் விற்பனை வரை..!' என்ற தலைப்பில் பசுமை விகடன் நடத்தும் இந்த நேரலை (ஆன்லைன்) பயிற்சியில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நாள்: 11-7-20 (சனிக்கிழமை)

நேரம்: மாலை 6 மணி முதல் 8 மணி வரை

பயிற்சிக் கட்டணம் ரூ.200.

கட்டணம் செலுத்த இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்.

https://store.vikatan.com/events/40-pv-semmaram-valarpu-training/

அல்லது க்யூ.ஆர் கோடை ஸ்கேன் செய்யவும்.

க்யூ.ஆர் கோட்
க்யூ.ஆர் கோட்
அடுத்த கட்டுரைக்கு