Published:Updated:

விவசாயிகளுக்கு இலவச பாரம்பர்ய விதை நெல்; பாராட்டைப் பெறும் இளைஞரின் புதிய முயற்சி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
விவசாயிகளுக்கு விதை நெல் வழங்கும் சதீஷ்குமார்.
விவசாயிகளுக்கு விதை நெல் வழங்கும் சதீஷ்குமார்.

``தற்போதை சூழலில் வருடத்துக்கு ஒரு தொகையை மருத்துவச் செலவுக்கு என ஒவ்வொரு நபரும் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. பாரம்பர்ய நெல் ரகங்கள் ஒவ்வொன்றும் பலவிதமான மருத்துவ குணங்களைக் கொண்டது." - சதீஷ்குமார்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பாரம்பர்ய நெல் ரகங்களை சாகுபடி செய்ய வேண்டும் என நம்மாழ்வார் வலியுறுத்தியதைக் குறிப்பிட்டு அவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பட்டுக்கோட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பாரம்பர்ய ரகமான மிளகு சம்பா விதை நெல் மணிகளை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறார். அவரின் இந்தச் செயலை விவசாயிகள் மட்டுமன்றி பலரும் பாராட்டி வருகின்றனர்.

பாரம்பர்ய விதை நெல்
பாரம்பர்ய விதை நெல்
நெல் திருவிழா முதல் இலவச பாரம்பர்ய விதைகள் வரை; புதுச்சேரி வேளாண் மானியக்கோரிக்கை ஹைலைட்ஸ்!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செம்பாளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். பி.இ பட்டதாரியான இவர் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகே செல்போன்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். தன்னுடைய சொந்த ஊரில் ஏழை மாணவர்கள் படித்துப் பயன்பெறக்கூடிய வகையில் தன் சொந்த செலவில் நூலகம் ஒன்றையும் அமைத்துள்ளார்.

இத்துடன் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில், பாரம்பர்ய நெல் ரகங்களைப் பெருக்கவும், இயற்கை விவசாயம் செய்வதை விவசாயிகளிடம் ஊக்குவிக்கும் வகையிலும் குளிர்காலப் பருவத்தில் பயிர் செய்து சாகுபடி செய்வதற்கு ஏற்ற பாரம்பர்ய ரகமான மிளகு சம்பா ரக விதை நெல்லை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறார். இவர், ஒரு விவசாயிக்கு ஒரு கிலோ வீதம் மிளகு சம்பா விதை நெல் வழங்குவதை விவசாயிகள் மட்டுமன்றி பலரும் பாராட்டி வருகின்றனர்.

மிளகு சம்பா விதை நெல்
மிளகு சம்பா விதை நெல்

இது குறித்து சதீஷ்குமாரிடம் பேசினோம். ``இயற்கை வேளாண் விஞ்ஞானியான மறைந்த நம்மாழ்வார் ஐயாவைப் பற்றியும், மண்ணையும், பாரம்பர்ய ரகங்களையும் மீட்டெடுக்க அவர் நடத்திய விழிப்புணர்வுப் பணிகளையும் முதலில் தெரிந்துகொண்டேன். அதைத் தொடர்ந்து இயற்கை விவசாயத்தில் ஈடுபாடு கொண்ட குழுக்களுடன் என்னை இணைத்துக்கொண்டு, இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாரம்பர்ய நெல் ரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிச் சிறப்பு கொண்டவை. மருத்துவ குணங்கள் நிறைந்த பல நெல் ரகங்களை நம் முன்னோர்கள் சாகுபடி செய்து வந்துள்ளனர். தற்போது விவசாயிகளிடம் இயற்கை விவசாயம் மற்றும் பாரம்பர்ய நெல் ரகங்கள் குறித்து பெரிய அளவிலான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. பட்டுக்கோட்டைப் பகுதியைச் சுற்றிலும் அதை அதிகப்படுத்தும் வகையில் தாளடி பருவத்துக்கும், குளிர்காலச் சூழலுக்கும் ஏற்ற பாரம்பர்ய ரகமான மிளகு சம்பா விதை நெல் விதைகளை விவசாயிகளுக்கு இலவசமாகக் கொடுத்து வருகிறேன்.

செல்போன் கடையில் விவசாயிகள்
செல்போன் கடையில் விவசாயிகள்
பாரம்பர்ய விதைகளை மீட்டெடுக்கும் விதை மனுஷி!

மிளகு சம்பா ரகம் பயிர் செய்தால், அறுவடைக்குத் தயாராகும்போது தண்ணீர்த் தட்டுப்பாட்டால் ஏற்படும் வறட்சியையும் தாங்கக்கூடிய வலிமை கொண்டது. மிளகு சம்பா ரக அரிசிச் சோறை சாப்பிடுவதால் உடலில் உறுதி ஏற்பட்டு நோய்கள் தாக்காமல் ஆரோக்கியத்துடன் வாழலாம்.

தற்போதைய சூழலில் வருடத்துக்கு ஒரு தொகையை மருத்துவச் செலவுக்கு என ஒவ்வொரு நபரும் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால், பாரம்பர்ய ரக நெல்களை இயற்கை முறையில் ரசாயன உரம் கலக்காமல் சாகுபடி செய்து அதில் கிடைக்கும் அரிசியைச் சாப்பிட்டு வந்தாலே மனிதர்கள் அனைவரும் நோய் நொடியின்றி வாழலாம் என்பதை பொன் மொழியாக நம்மாழ்வார் ஐயா தெரிவித்துள்ளார்.

விவசாயிகள்
விவசாயிகள்

எனவே, இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு மற்றும் பாரம்பர்ய ரகங்கள் சாகுபடி செய்வதற்காக, ஊக்கப்படுத்தும் வகையில் விவசாயிகளுக்கு இலவசமாக மிளகு சம்பா நெல் விதைகளைக் கொடுத்து வருகிறேன். ஒரு விவசாயிக்கு ஒரு கிலோ வீதம் இதுவரை 70 விவசாயிகளுக்கு கொடுத்துள்ளேன். இன்னும் பல விவசாயிகளுக்கு கொடுக்க இருக்கிறேன்“ எனத் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு