Published:Updated:

வேளாண் பட்ஜெட்: `பழங்குடிகளும் இனி பயன்பெறுவர்!' - சிறுதானிய பதப்படுத்தும் மையத்திற்கு வரவேற்பு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சிறுதானியங்களுடன் பழங்குடியினர்
சிறுதானியங்களுடன் பழங்குடியினர்

சிறுதானிய பதப்படுத்தும் மையம் ஒன்றை அமைப்பதாக வேளாண் பட்ஜெட்டில் அரசு அறிவித்துள்ளதன் மூலம் நூற்றுக்கணக்கான பழங்குடிகள் பயன் பெறுவதோடு, சிறுதானியங்களை அழிவிலிருந்தும் காக்க முடியும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நீலகிரியில் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்களால் உற்பத்தி செய்யப்படும் சிறு தானியங்களை பதப்படுத்த கோத்தகிரியில் மையம் ஒன்று அமைக்கப்படும் என வேளான் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பது பழங்குடி மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலை மாவட்டமான நீலகிரியில், இருளர், குறும்பர், பணியர், தோடர், கோத்தர், காட்டுநாயக்கர் ஆகிய 6 வகையான பழங்குடிகள் வாழ்ந்துவருகின்றனர். இவர்கள் சாமை, வரகு, தினை போன்ற சிறுதானிய வகைகளை இயற்கை முறையில் பாரம்பர்யமாக விளைவித்து பயன்படுத்தி வந்தனர். தோட்டப் பயிர்கள் அறிமுகம் செய்த பிறகு சிறுதானிய சாகுபடி பரப்பளவு வெகுவாகக் குறைந்தது.

சிறுதானியங்களுடன் பழங்குடியினர்
சிறுதானியங்களுடன் பழங்குடியினர்
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2021: Live Updates: ``நம்மாழ்வார் மையம், தமிழ்வழியில் வேளாண் படிப்பு!"

இந்நிலையில் பாரம்பர்ய சிறுதானிய சாகுபடியை மீட்டெடுக்கும் முயற்சியில் பழங்குடியின மக்கள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இவர்கள் விளைவிக்கும் சிறுதானியங்களை பதப்படுத்தி சந்தைப்படுத்த முடியாமல் தவித்து வந்தனர். எனவே கோத்தகிரியில் சிறுதானிய பதப்படுத்தும் மையம் ஒன்று வேண்டும், என பல காலமாக கோரிக்கை விடுத்தது வந்தனர். இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் முதல் வேளாண்மை பட்ஜெட்டில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது நீலகிரி மக்களிடம் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அறிவிப்பு குறித்து நம்மிடம் பகிர்ந்த நம் சந்தை உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் சண்முகநாதன், ``இங்கு வாழும் 6 வகையான பழங்குடியின மக்களும் பாரம்பர்யமாக சாமை, வரகு, கம்பு, சோளம் போன்ற சிறுதானியங்களை பயிர் செய்வதில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றை பதப்படுத்தி சந்தைப்படுத்துவதில் சிக்கல் இருந்து வருகிறது.இதை சாதகமாக்கிய சில தன்னார்வலர்கள் மற்றும் தனியார் அமைப்பினர் கூட்டு சேர்ந்து சிறுதானியங்களை பழங்குடிகளிடம் மிகக்குறைந்த விலைக்கு வாங்கிச் சென்று வெளிச்சந்தையில் கொள்ளை லாபத்திற்கு விற்பனை செய்து வருகின்றனர். கோத்தகிரியில் சிறுதானிய பதப்படுத்தும் மையம் ஒன்றை அமைப்பதாக வேளாண் பட்ஜெட்டில் அரசு அறிவித்துள்ளதன் மூலம் நூற்றுக்கணக்கான பழங்குடிகள் பயன்பெறுவதோடு, சிறுதானியங்களை அழிவிலிருந்தும் காக்க முடியும்" என்றார்.

திருமூர்த்தி மற்றும் சண்முகநாதன்
திருமூர்த்தி மற்றும் சண்முகநாதன்
கிச்சன் கிளாஸிக்ஸ்: தினம் தினம் சிறுதானியம்!

குறும்பர் பழங்குடியினத்தைச் சேர்ந்த செயற்பாட்டாளர் கோத்தகிரி திருமூர்த்தி, ``குன்னூர், கோத்தகிரி சரிவு பகுதிகளில் காபி, குறுமிளகுக்கு அடுத்தபடியாக சிறுதானியங்களே அதிகளவு பயிர் செய்து வருகிறோம். முழுக்க முழுக்க ஆர்கானிக் முறையில் விளைவிக்கப்படும் இந்த சிறுதானியங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தும் முறையாக சந்தைப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த மையம் அமைப்பதன் மூலம் பழங்குடிகள் வாழ்வாதாரம் மேம்படும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு