Published:Updated:

கழிவுநீர் மேலாண்மை: கழிவு நீரைச் சுத்திகரிக்கத் தாவரங்களே போதும்!

கழிவுநீர் மேலாண்மை
பிரீமியம் ஸ்டோரி
News
கழிவுநீர் மேலாண்மை

இந்துகாந்த் ரகடே

வீடு, தொழிற்சாலை, அரசு நிறுவனங்கள் ஆகியவற்றில் மழை நீரைச் சேகரிக்கும் முறைகள், தண்ணீரைச் சுத்திகரிக்கும் முறைகள், போன்றவை குறித்து விரிவாக அலச இருக்கிறது, இந்த பகுதி. இந்த இதழில் மழைநீர்ச் சேகரிப்பு மற்றும் கழிவுநீர்ச் சுத்திகரிப்பு போன்றவற்றில், தான் பெற்ற அனுபவங்களைச் சொல்கிறார் 82 வயதான முனைவர் இந்துகாந்த் ரகடே. சென்னையைச் சேர்ந்த இவர், கரிம வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றவர். 1984-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை கட்டுமானத் துறையில் பணிபுரிந்தவர். நகரங்களில் சூழலுக்கு உகந்த, நீடித்த வசிப்பிடங்களுக்கான குடியிருப்புகளை உருவாக்குவதற்கான ஆலோசனைகளை வழங்கி வருகிறார். மழைநீர்ச் சேகரிப்பு மற்றும் கழிவுநீர்ச் சுத்திகரிப்பு போன்ற பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்துகாந்த் ரகடே சொன்ன விஷயங்கள் இங்கே...

 மாடியிலிருந்து மழைநீர் இறங்கும் குழாய்கள்...,  இணைப்புக் குழாய்கள்...,  மழைநீர் சேகரிப்பு குழாய்...
மாடியிலிருந்து மழைநீர் இறங்கும் குழாய்கள்..., இணைப்புக் குழாய்கள்..., மழைநீர் சேகரிப்பு குழாய்...

மழைநீர்ச் சேகரிப்பு, தண்ணீர்ச் சுத்திகரிப்பு ஆகிய இரண்டு முறைகளும் தனிமனித முயற்சியால் மட்டுமே பெரும்பான்மையான இடங்களில் சாத்தியமாகியுள்ளன. அரசாங்கத்திடம் சட்டங்கள் இருக்கின்றனவே ஒழிய, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகள் இல்லை. கடந்த 2003-ம் ஆண்டில், மழைநீர்ச் சேகரிப்புத் திட்டத்தைக் கொண்டு வந்தது, தமிழக அரசு. அப்போதே கழிவுநீர்ச் சுத்திகரிப்புக்கான விதிமுறைகளையும் கொண்டு வந்தது. ஆனால், அதற்கான வழிமுறைகளைக் கொடுக்காததால் கழிவுநீர்ச் சுத்திகரிப்பை செய்ய யாரும் முன்வரவில்லை. சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் 2019-ல் வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளின்படி அனைத்துக் குடியிருப்புகளிலும் கழிவுநீர்ச் சுத்திகரிப்பை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதைச் செயல்படுத்த என்னுடைய வழிகாட்டி முறையையும் பரிந்துரைத்திருக்கிறது. அதேபோல மழைநீர்ச் சேகரிப்புக்கான விதிகளையும் விவரமாகக் கொடுத்திருக்கிறது. விதிமுறைகளைக் கொண்டுவந்தால் மட்டும் போதாது. அதை மக்களுக்குத் தெரியப்படுத்தி பின்பற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
 இரும்புத் தகடால் மூடப்பட்ட கிணறு...,  நுழைவுவாயிலில் மழைநீர் சேகரிக்கும் அமைப்பு...
இரும்புத் தகடால் மூடப்பட்ட கிணறு..., நுழைவுவாயிலில் மழைநீர் சேகரிக்கும் அமைப்பு...

60 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையின் பெரும்பான்மையான வீடுகளில் கிணறுகள் இருந்தன. அவற்றில் தண்ணீர் எடுத்துத்தான் பயன்படுத்தி வந்தனர் மக்கள். இந்தக் கிணறுகள் நிலத்தடி நீருக்கும் உத்தரவாதமாக இருந்தன. இந்த முறையைப் பின்பற்றித்தான் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் கிணறுகள் அமைக்க வலியுறுத்துகிறேன். இப்படி வலியுறுத்தியதில் இதுவரை 130 கிணறுகளைச் சென்னையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அமைத்திருக்கிறோம். இதுபோன்ற கிணறுகள்தான் சென்னை போன்ற பெருநகரங்களுக்குத் தேவையென்று ஆரம்பகாலம் முதலே வலியுறுத்தி வருகிறேன். அந்தந்தப் பகுதியின் மண்ணின் தன்மையைப் பொறுத்து 10 அடியிலிருந்து 40 அடி வரையான ஆழத்தில் கிணறுகள் அமைக்கலாம். வீடு கட்டும்போது மண் பரிசோதனை செய்து, அந்த அறிக்கையின் அடிப்படையில் கிணற்றின் ஆழத்தைத் தீர்மானிக்கலாம். வீட்டு மாடியிலிருந்து(டெர்ரஸ்) கிடைக்கும் மழைநீரைக் குழாய் மூலமாகக் கொண்டு சென்று கிணற்றில் விழும்படி செய்யும் எளிய தொழில்நுட்பம்தான் இது.

கழிவு நீர் சுத்திகரிக்கும் அமைப்பின் வரைபடம்
கழிவு நீர் சுத்திகரிக்கும் அமைப்பின் வரைபடம்

சென்னையில் 1911-ம் ஆண்டிலிருந்து 2017-ம் ஆண்டுவரை சராசரியாக ஆண்டுக்கு 100 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்திருக்கிறது. 100 சென்டிமீட்டர் மழை பெய்யும் பட்சத்தில் 100 சதுர அடியுள்ள மாடித்தளத்திலிருந்து 1,00,000 லிட்டர் தண்ணீரைச் சேமிக்க முடியும். இந்தத் தண்ணீரைக் கொண்டு கோடையை எளிதாகச் சமாளிக்கலாம்.

60 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையின் பெரும்பான்மையான வீடுகளில் கிணறுகள் இருந்தன.. 100 சதுர அடியுள்ள மாடித்தளத்திலிருந்து 1,00,000 லிட்டர் தண்ணீரைச் சேமிக்க முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தியாகராய நகர், திருமலை பிள்ளை ரோட்டில் உள்ள அதந்த்ரா அப்பார்ட்மென்ட்டில் பழைமையான கிணறு ஒன்று இருந்தது. இதில் மாடியின் ஒரு பக்கத்தில் விழும் தண்ணீரைக் குழாய் மூலமாக அக்கிணற்றில் விடப்பட்டது. மற்றொரு பக்கத்தில் விழும் நீரை அதே பக்கத்தில் ஒரு கிணற்றைத் தோண்டி அதில் விடப்பட்டது.இத்துடன் கேட்டின் நுழைவுவாயிலில் ஒரு பள்ளத்தைத் தோண்டி, அதை ஒட்டையுள்ள சிமென்ட் பலகையால் மூடி கட்டடத்தைச் சுற்றி விழும் மழைநீர் கேட்டின் வழியாக வெளியேறுவதைத் தடுத்து, அதைக் கிணற்றில் கொண்டுபோய் செலுத்தப்பட்டது.

 கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்புகள்...
கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்புகள்...

இப்படி மொத்தம் 3 கிணறுகள் இந்தக் குடியிருப்பில் உள்ளது. 28 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தக் குடியிருப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் போர்வெல் போடப்பட்டது. அதுவரை கிணறுகள்தான் கைகொடுத்தன. இந்தக் குடியிருப்பில் 32 வீடுகள் உள்ளன. முன்பு திறந்தவெளியில்தான் கிணறுகள் இருந்தன. பார்க்கிங் வசதிக்காகத் தற்போது இரும்பு தகடுகள் கொண்டு கிணறுகள் மூடப்பட்டுள்ளன. அதேபோல, சாலையில் தேங்கும் தண்ணீரும் கிணற்றுக்குள் சேகரமாகுமாறு சாலை ஒரத்தில் ஒரு சிறு குழியைத் தோண்டி, குழாய் மூலம் கிணற்றுடன் இணைக்கப்பட்டது. இதனால், சாலையில் தேங்கும் நீரும் அந்தக் கிணற்றுக்குள் செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சாலையில் நீர்த்தேங்குவது தடுக்கப்பட்டது மட்டுமல்லாமல் நிலத்தடி நீர்மட்டத்தையும் உயர்த்த பயன்பட்டது.

தண்ணீர்ச் சுத்திகரிப்பில் நம்முடைய பாரம்பர்ய முறையே சிறந்தது. சமையலறைக் கழிவுகளைத் தவிர்த்து, குளித்த தண்ணீரும் துணி துவைத்த தண்ணீரும் நாம் உபயோகிக்கும் மொத்த தண்ணீரில் 60 சதவிகிதமாகும். குடியிருப்புகளிலிருந்து வெளிவரும் இந்த நீரை ஒரு சிமென்ட் தொட்டியில் மண், மணல், ஜல்லிக் கற்கள், தாவரங்கள் (வாழை, கல்வாழை, சேனைக்கிழங்கு, ஹெலிகோனியம் போன்றவை) கொண்டு அமைக்கப்பட்ட அமைப்பில் செலுத்தினால், அதிலுள்ள கரிமப் பொருள்கள் கிரகிக்கப்பட்டு அந்த நீர் சுத்திகரிக்கப்படும். இதைக் குழாய் மூலமாகக் கொண்டு சென்று கிணற்றுக்குள் சேகரிக்கலாம் அல்லது வீட்டுத்தோட்டங்களுக்கு நேரடியாகப் பயன்படுத்தலாம். கிணற்றில் சேகரிக்கும் சுத்திகரிக்கப்பட்ட நீரை மோட்டார் மூலம் மீண்டும் வீடுகளில் கழிப்பறையில் ஃப்ளஷ் செய்யவும் பயன்படுத்தலாம். இந்த அமைப்பைச் சென்னை, சைதாபேட்டை, ஸ்ரீநகர் காலனியில் உள்ள பிரசாந்தி நிலையம் அடுக்குமாடி குடியிருப்பில் என்னுடைய ஆலோசனையின் பேரில் 2005-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறார்கள்.

 இந்துகாந்த் ரகடேவுடன் வி.எச்.பிரசாத்,  கல்வாழை...
இந்துகாந்த் ரகடேவுடன் வி.எச்.பிரசாத், கல்வாழை...

அடையாறில் உள்ள ஒரு வீட்டிலும் தண்ணீரைச் சுத்திகரிக்கக் கல்வாழையை மட்டும் பயன்படுத்தி வருகின்றனர். சுத்திகரிக்கப்பட்ட நீர் மூலம் நிலத்தடி நீரைச் செறிவூட்டுகிறார்கள். ஹெலிகோர்னியம், சைப்ரஸ் போன்ற அழகுத் தாவரங்களையும் தண்ணீரைச் சுத்திகரிக்கப் பயன்படுத்தலாம். கழிவுநீரில் உள்ள வேதி உப்பு மற்றும் எண்ணெய் (சோப் மூலம் கலந்தவை) போன்றவை நீக்கப்பட்டாலே 90 சதவிகிதம் சுத்தமாகிவிடும். மழைநீர் சேமிப்போ, கழிவுநீர் சுத்திகரிப்போ எதுவாக இருந்தாலும் அதை வீடு கட்டும்போதே அமைத்துவிட வேண்டும்.

மழைநீர்ச் சேகரிப்பு மற்றும் கழிவு நீர்ச் சுத்திகரிப்பு குறித்து, ‘செல்ப் ரிலையன்ஸ் இன் வாட்டர்’ (Self Reliance in Water) என்ற ஆங்கில மொழியில் வெளிவந்துள்ள புத்தகத்தில் நிறைய தகவல்களைக் குறிப்பிட்டிருக்கிறேன். எனவே, இயற்கையான முறையில் கழிவுநீரைச் சுத்திகரித்து நம்முடைய தேவைகளுக்கே பயன்படுத்திக்கொள்ள அனைவரும் முன்வர வேண்டும்.

- சுத்தமாகும்

தொடர்புக்கு, இந்துகாந்த் ரகடே,

தொலைபேசி: 044 28153506

மின்னஞ்சல்: isragade@yahoo.com

பெரியளவில் செலவாகாது!

பிரசாந்தி நிலையம் அடுக்குமாடி உரிமையாளர் வி.எச்.பிரசாத், “எங்கள் குடியிருப்பில் 8 வீடுகள் இருக்கின்றன. 8 வீடுகளிலிருந்தும் கழிப்பறையிலிருந்து வரும் கழிவுநீரை ஜல்லி, மணல், மண், கல்வாழைகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள தொட்டிக்குள் செலுத்திச் சுத்திகரிக்கிறோம். சுத்திகரிக்கப்பட்ட நீர், கிணற்றில் சேகரமாகிவிடும்.

கிணற்றிலிருந்து நீரை பம்ப் செய்து தோட்டத்துக்கும் கழிப்பறையில் ஃப்ளஷ் செய்யவும் பயன்படுத்துகிறோம். ஒரு நாளைக்குச் சுமார் 700 லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது. ஒரே நாளில் தண்ணீர் முழுதும் சுத்திகரிக்கப்பட்டுவிடும். கட்டடத்தின் இரண்டு பக்கங்களிலும் கழிவுநீரைச் சேமித்து மறுசுழற்சி செய்யும் அமைப்புகளை ஏற்படுத்தியிருக்கிறோம். இதற்குப் பெரிய அளவில் செலவாகாது” என்கிறார்.