Published:Updated:

கொடைக்கானலில் குறையும் பிளம்ஸ் பழ விளைச்சல்; காரணம் இதுதான்!

பிளம்ஸ் பழம்

குறுகிய கால பயிர்களில் கிடைக்கும் வருவாய் போல பிளம்ஸ் பயிரில் வருவாய் கிடைப்பது இல்லை என்பதாலும், நகரமயமாதல் வேகமாக நடந்து வருவதாலும் பிளம்ஸ் சாகுபடி குறைந்து கொண்டே வருகிறது. 

கொடைக்கானலில் குறையும் பிளம்ஸ் பழ விளைச்சல்; காரணம் இதுதான்!

குறுகிய கால பயிர்களில் கிடைக்கும் வருவாய் போல பிளம்ஸ் பயிரில் வருவாய் கிடைப்பது இல்லை என்பதாலும், நகரமயமாதல் வேகமாக நடந்து வருவதாலும் பிளம்ஸ் சாகுபடி குறைந்து கொண்டே வருகிறது. 

Published:Updated:
பிளம்ஸ் பழம்

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் விளையக்கூடிய பழ வகைகளில் பிளம்ஸ் பழத்துக்கு மவுசு அதிகம். பிளம்ஸ் பழம் பல்வேறு மினரல்கள் ஊட்டச்சத்துகள் நிரம்பியது. கொடைக்கானலில் பெரும்பள்ளம், மேல்பள்ளம், பெருமாள்மலை, வில்பட்டி, அட்டுவம்பட்டி, குறிஞ்சி நகர், பேத்துப்பாறை, வடகவுஞ்சி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் பிளம்ஸ் பழ மரங்கள் அதிகமாக இருக்கின்றன. ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் பிளம்ஸ் பழ விளைச்சல் அதிகமாக இருக்கும். ஒரு கிலோ 100 முதல் 200 ரூபாய் வரை தொடக்க மகசூல் காலத்தில் விற்கப்படும். சராசரியாக கிலோ 50 முதல் 80 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

பிளம்ஸ் பழம்
பிளம்ஸ் பழம்

கடந்த சில ஆண்டுகளாக கொடைக்கானலில் பிளம்ஸ் பழம் மகசூல் வெகுவாக குறைந்து வருகிறது. பிளம்ஸ் பழங்கள் அறுவடை செய்த பின்னர் சந்தைப்படுத்துதலில் பல்வேறு சிரமங்கள் இருக்கின்றன. நிலையான விலை கிடைக்காத சூழல் ஏற்பட்டு பிளம்ஸ் பழங்கள் விவசாயத்தில் விவசாயிகள் அக்கறை காட்டாத ஒரு சூழலும் ஏற்பட்டுள்ளது. பிளம்ஸ் விவசாயத்தை காப்பதற்கு பிளம்ஸ் பழங்களில் கிடைக்கக்கூடிய ஜாம், உள்ளிட்ட பழ ரசங்கள் தயாரிக்கக் கூடிய சிறு தொழிற் சாலைகளை அரசு உருவாக்க வேண்டும் என்பது பிளம்ஸ் விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அறுவடை
அறுவடை

கொடைக்கானலில் விளையக்கூடிய பிளம்ஸ் பழங்கள் மிகுந்த ருசியாக இருக்கும். இதனால் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் கொடைக்கானல் பிளம்ஸ் பழத்திற்கு நல்ல மவுசு உள்ளது. கொடைக்கானலில் பலநூறு ஏக்கர் அளவிற்கு பிளம்ஸ் பழமரங்கள் வைக்கப்பட்டு விவசாயம் செய்யப்பட்ட இந்த சூழலில், தற்போது சில நூறு ஏக்கர் அளவிற்கு பிளம்ஸ் பழங்கள் மரங்கள் வெட்டப்பட்டு இப்பகுதி வேறு பயன்பாட்டிற்கு இந்த பகுதிகள் மாற்றப்பட்டுவிட்டது.

வினோத்
வினோத்

இதுகுறித்து பிளம்ஸ் விவசாயி வினோத்திடம் பேசினோம். ''பிளம்ஸ் மரங்களில் குச்சி எடுத்து பதியம் போட்டும், பிச்சீஸ் குச்சிகளை நட்டு 4 ஆண்டுகள் வரை வளர்த்து அதில் ஒட்டுப் போட்டும் பிளம்ஸ் மரங்கள் உருவாக்கப்படுகின்றன. பதியம் போடும் மரக்கன்றுகளில் பழம் எடுக்க 10 ஆண்டுகள் ஆகும், ஒட்டுப்போடும் மரக்கன்றுகளில் 6 ஆண்டுகளிலேயே பழம் எடுக்கலாம். இந்த மரங்கள் 60 ஆண்டுகள் வரை கூட தொடர்ச்சியாக பழம் கொடுத்துக்கொண்டே இருக்கும். ஒரு ஏக்கருக்கு 150 மரங்கள் வரை நடலாம். ஊடுபயிராக உருளை உள்ளிட்ட பயிர்களை நடவு செய்யலாம்.

கொடைக்கானல்
கொடைக்கானல்

இம்மரங்களை வளர்க்க பெரிய அளவில் பராமரிப்பு செலவு தேவையில்லை. கொடைக்கானலில் உள்ள இயற்கையான சூழலில் தானாக வளரக் கூடியது. ஆண்டுக்கு ஒருமுறை கவாத்து செய்தால் மட்டும் போதுமானது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை கொடைக்கானலில் பிளம்ஸ் ஒரு நாளைக்கு 100 டன் அளவுக்கு விளைச்சல் இருந்தது. ஆனால் தற்போது 15 டன் கிடைப்பது கூட அரிதாக உள்ளது. கொடைக்கானலின் சீதோஷ்ண நிலை மாறிக்கொண்டே வருவதும் விளைச்சல் பாதிப்புக்கு காரணமாக இருக்கிறது. குறுகிய கால பயிர்களில் கிடைக்கும் வருவாய் போல பிளம்ஸ் சாகுபடியில் வருவாய் கிடைப்பது இல்லை என்பதாலும், நகரமயமாதல் வேகமாக நடந்து வருவதாலும் பிளம்ஸ் சாகுபடி குறுகிகொண்டே வருகிறது'' என்று சொல்லி முடித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism