Published:Updated:

"விவசாயம் லாபகரமா இல்லைனு சொன்னா நான் நம்பமாட்டேன்!" மருத்துவர் ராமதாஸ்

மருத்துவர் ராமதாஸ்
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவர் ராமதாஸ்

முயற்சி

"விவசாயம் லாபகரமா இல்லைனு சொன்னா நான் நம்பமாட்டேன்!" மருத்துவர் ராமதாஸ்

முயற்சி

Published:Updated:
மருத்துவர் ராமதாஸ்
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவர் ராமதாஸ்

‘‘1974-ம் ஆண்டு நான் டாக்டரா வேலை செஞ்சுகிட்டிருக்கப்போ வாங்கின இடம் இது. அப்போ மேடும் பள்ளமுமா கரடுமுரடுமா இருந்துச்சு. டாக்டர் தொழில் பண்ணிகிட்டே இந்த நிலத்தைத் திருத்திச் சரி பண்ணேன். இன்னிக்கு இந்த இடத்துல நின்னு மரம் செடி கொடிகளைப் பாக்குறப்போ மனசுக்கு அவ்வளவு நிறைவா இருக்கு” சிலாகித்துப் பேசுகிறார் பா.ம.க நிறுவனர், மருத்துவர் ராமதாஸ்.

மருத்துவர் ராமதாஸையும் அவருடைய தைலாபுரம் தோட்டத் தையும் அரசியல்ரீதியாக அனைவரும் அறிந்திருப்பார்கள். ஆனால், இயற்கை விவசாயத்தின்மீது அவருக்குள்ள ஈடுபாட்டையும் தைலாபுரத்தில் அவர் செய்துவரும் இயற்கை வேளாண்மை யையும் பலரும் அறிந்திருக்க வாய்ப் பில்லை. தைலாபுரத்தில் தன் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் நிலத்தில் வெகுசிறப்பாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். காய்கறிகள், பழங்கள், பயிர் வகைகள், மலர்கள் என அனைத் தும் அந்தத் தோட்டத்தில் விளைவிக்கப் படுகின்றன. ‘நானும் விவசாயிதான்’ பகுதிக்காக அவரைத் தொடர்பு கொண்டபோது உற்சாகத்துடன் வரவேற்றார்.

தோட்டத்தில் மருத்துவர் ராமதாஸ்
தோட்டத்தில் மருத்துவர் ராமதாஸ்

ஓர் அதிகாலையில் தைலாபுரம் தோட்டத்துக்குச் சென்றோம். தோட்டத்திலிருக்கும் தென்னை மரங்களை ஆரத் தழுவியவாறு பேச ஆரம்பிக்கிறார் ராமதாஸ். “இந்த இடத்துல ஆயிரம் தென்னை மரங்களுக்கு மேல இருக்கும். அத்தனையும் நானே என் கையால நட்டது. இன்னிக்கு எப்படி வளர்ந்து நிக்குதுன்னு பார்த்தீங்களா?” என்று மகிழ்ந்தவர், ‘‘அப்போ 20 அடியிலயே தண்ணீர் பீறிட்டுக் கிளம்பும். இன்னைக்கு தண்ணி வேணும்னா 450 அடி ஆழத்துக்கு போர் போடணும்” கவலையோடு சொன்னவர், பேச்சைத் தொடர்ந்தார்,

தோட்டத்தில் மருத்துவர் ராமதாஸ்
தோட்டத்தில் மருத்துவர் ராமதாஸ்

‘‘நான் மருத்துவர்ங்கிறதால ரசாயன உரங்கள் பயன்படுத்தி விளைவிக்கப்படுற உணவுப்பொருள் உடம்புக்கு உண்டாக்குற பாதிப்பும் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவமும் எனக்கு நல்லா தெரியும். இன்னைக்கு நாம சாப்பிடுற உணவுப் பொருள்கள்ல ஏராளமான ரசாயனங்கள் கலந்திருக்கு. உதாரணமா, கீரையை எடுத்துக்கலாம். பார்க்குறதுக்கு நல்லா பச்சை பசேல்னு இருக்கும். ஆனா, கீரை சாகுபடிக்கு இப்போ பயங்கரமான நச்சுக்களை பூச்சிக்கொல்லியாகப் பயன்படுத்துறாங்க. அப்படி விளைவிக்கப்படுற கீரையைச் சாப்பிடுறதால 100 விதமான பக்கவிளைவுகள், நோய்கள் வரும். உடலையும் கெடுத்துக்கக் கூடாது; மண்ணை மலடாக்கக் கூடாதுன்னு முடிவெடுத்துதான் இயற்கை விவசாயத்தை ஆரம்பிச்சேன். கிட்டத்தட்ட 30 வருஷங்களுக்கு மேலா இயற்கை விவசாயம் செஞ்சுகிட்டிருக்கேன்” என்றபடி, காய்கறித்தோட்டத்துக்கு நம்மை அழைத்துச் சென்றார்.

தோட்டத்தில் மருத்துவர் ராமதாஸ்
தோட்டத்தில் மருத்துவர் ராமதாஸ்

ஒருபக்கம் செடி கொடிகளில் காய்கள் காய்த்துத் தொங்கிக்கொண்டிருக்க, மறுபுறம் அடுத்த சுழற்சி சாகுபடிக்கு உழவு நடந்துகொண்டிருந்தது. ‘‘வாழைக்காய், வெண்டைக்காய், பாவக்காய், பூசணிக்காய், புடலங்காய் இப்படிக் காய்னு முடியுற எல்லாக் காய்களும் இங்க இருக்குது. அதேபோல, அரைக்கீரை, சிறுகீரை பாலக்கீரை முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, மணத்தக்காளி கீரை, பொன்னாங்கன்னி கீரைன்னு எல்லா வகையான கீரைகளும் இங்கிருக்குது. இன்னிக்கொரு கீரை சாப்பிடுவேன் நாளைக்கொரு கீரை சாப்பிடுவேன். பறிச்சுட்டு வந்ததும் அலசிட்டு அடுப்பங்கரைக்குப் போயிரும்.

தோட்டத்தில் மருத்துவர் ராமதாஸ்
தோட்டத்தில் மருத்துவர் ராமதாஸ்

நம்ம பாரம்பர்ய காய்கறிகள் மட்டுமல்ல... மலைப்பிரதேசத்துல மட்டுமே விளையுற ‘புரோக்கோலி’, கேரட்டெல்லாம்கூட இங்கே பயிரிடுறோம். சுழற்சி முறையில காய்கறிகள் பயிரிடுறதால வருஷம் முழுக்கக் காய்கறிகள் கிடைக்கும். அறுவடை முடிஞ்சு அடுத்த பயிர் செய்யறப்போ மண்ணை மாத்துறோம். செம்மண்ணும் எருவும் கொண்டு வந்து கலந்து இந்த நிலத்துல போடுறோம். காய்கறிகள் மட்டுமல்ல... மல்லி, முல்லை, ராமர் பானம்னு நிறைய பூச்செடிகளும் இங்கே வெச்சிருக்கோம். பெண்களுக்கு வேணும்ல” என்று சிரிக்கிறார்.

கத்திரி
கத்திரி
கத்திரி வயல்
கத்திரி வயல்

பூக்கள் மட்டுமல்ல நிறைய பழ மரங்களை யும் வைத்திருக்கின்றனர். குறிப்பாக, அரை ஏக்கரில் கொய்யா தோட்டம் இருக்கிறது. தவிர அன்னாசி, முள் சீத்தா, சப்போட்டா உள்ளிட்ட பழ மரங்களும் இருக்கின்றன.

‘‘ஒரு மனிதன் வாரத்துல மூன்று நாள்களுக்கு முருங்கைக்கீரை, அகத்திக்கீரை சாப்பிட்டான்னா அவனுக்கு ஹீமோகுளோபின் குறையவே குறையாது.’’

‘‘ஒரு மனிதன் வாரத்துல மூன்று நாள்களுக்கு முருங்கைக்கீரை, அகத்திக்கீரை சாப்பிட்டான்னா அவனுக்கு ஹீமோ குளோபின் குறையவே குறையாது. அதனால தான் திவசம் கொடுக்கறப்போ அகத்திக்கீரை கொடுப்பாங்க. சிலர் மாட்டுக்கு அகத்திக் கீரை கொடுக்கிறதைப் பார்த்திருப்பீங்க, கறக்கிற பால்ல அந்தச் சத்து கலந்திருக் கணுங்கிறதுக்காகத்தான் அப்படிக் கொடுக் கிறாங்கன்றது என்னோட எண்ணம்’’ என்றவர், கோவக்காய் கொடியைக் காட்டியபடி, “இது ரொம்ப அற்புதமான காய், இதில் ‘மல்ட்டி வைட்டமின்கள்’ அதிகம். எங்க தோட்டத்துல கோவக் காய்க்குன்னு எப்போதும் இடம் ஒதுக்கிருவோம். தக்காளி பயிரிட்டிருந்தோம் காய்ப்பு முடிஞ்சிருச்சு. அதை எடுத்துட்டுப் புதுசா போடப்போறோம். நாலு விதமான கத்திரிக்காய் பயிரிட்டிருக்கோம். ஒண்ணு நீட்டமா இருக்கும், ஒண்ணு குட்டையா இருக்கும், இன்னொண்ணு கலரா இருக்கும். ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு குணம் இருக்கு. வாரத்துல இரண்டு நாள் கத்திரிக்காய் சாப்பிட்டா ரொம்ப நல்லது. புதினாகூட இங்க சாகுபடி பண்றோம். ‘இங்கே பாருங்க பீர்க்கங்காய்...’” என்று பீர்க்கங்காயைப் பார்த்து ஆனந்தமானவர், ‘‘இதை வதக்கிக் கொஞ்சமா மசாலா போட்டுச் சப்பாத்திக்கு தொட்டுக்கிட்டா ரொம்பச் சுவையா இருக்கும்” இப்படித் தன் தோட்டத்திலிருக்கும் ஒவ்வொரு காயையும் அறிமுகப்படுத்தி அதற்கான மருத்துவப் பலன்களையும் விளக்கியது அத்தனை ஆச்சர்யம்

கத்திரி
கத்திரி
காய்கறி வயல்
காய்கறி வயல்
புடலை
புடலை

‘‘இதைத் தவிர ஐந்தாறு ஏக்கர்ல மா மரம் வச்சிருக்கோம். மாமரத்தில் என்னென்ன ரகங்கள் இருக்கோ அத்தனையும் இங்கே இருக்கு. வீட்டுக்குத் தேவையான அளவு நெல் பயிரிடுறோம். எங்க வீட்டுக்கு, சென்னையில இருக்கிற என் மகன் வீட்டுக்கு, மகள் வீட்டுக்கு, திண்டிவனத்தில் இருக்கிற மருமகன் வீட்டுக்கு இங்க விளையுற பொருள்கள்தான் போகுது. அத்தனையும் இயற்கையா விளைவிச்சதுதான். எல்லாத்துக்கும் பசுந்தாள் உரங்களும், வேப்பம் புண்ணாக்கும்தான் நாங்க பயன் படுத்துறோம். பூச்சி அடிச்சதுன்னா... வசம்பு, பூண்டு, வேப்பிலை, இஞ்சி... இதையெல்லாம் அரைச்சு ஊற வெச்சு நாலைஞ்சு நாள் கழிச்சு அடிப்போம். இது தவிர, பஞ்சகவ்யாவும் பயன்படுத்துறோம்’’ என்றவர் நிறைவாக,

பாகற்காய்
பாகற்காய்
நெல்லிக்காய்
நெல்லிக்காய்
சப்போட்டா
சப்போட்டா
தென்னை
தென்னை
தென்னை
தென்னை
பண்ணை
பண்ணை
மாமரங்கள்
மாமரங்கள்

‘‘இப்போ விவசாயம் செய்யறதுல இளைஞர்கள் ஆர்வம் காட்டுறாங்க. எதிர்காலத்துல இயற்கை விவசாயத்துல ஒரு புரட்சி நடக்கும்னு நம்புறேன். விவசாயம் லாபகரமான தொழில் இல்லைன்னு யாராவது சொன்னா நான் நம்பமாட்டேன். விவசாயத்தை அவங்க சரியா பண்ணலைன்னு தான் அர்த்தம். ரெண்டு ஏக்கர்ல காடு கரம்பு இருந்தா போதும். சுற்றிலும் வேலி போட்டு 100 ஆடுகள், பத்து, இருபது கறவை மாடுகள் வாங்கி வளர்த்தா வருஷத்துக்குக் குறைஞ்சது ரெண்டு லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்” என்று நம்பிக்கை வார்த்தைகளுடன் முடித்தார் மருத்துவர் ராமதாஸ்.

தோட்டத்தில் ராமதாஸ்
தோட்டத்தில் ராமதாஸ்

ஒரு லட்சம் பரிசு!

விவசாயத்தில் மட்டுமல்ல, மரம் வளர்ப்பிலும் பெரும் ஈடுபாடு உள்ளவர் ராமதாஸ். தன் கல்லூரியில் ஏராளமான மர வகைகளை வைத்திருக்கிறார். அதுகுறித்துக் கேட்டதற்கு, “எங்கள் கல்லூரியில உள்ளதைப்போல மரங்களை வேறு எங்கேயும் பார்க்க முடியாது. எந்த ஊருக்குப் போனாலும் அங்க புதுசா செடியைப் பார்த்தேன்னா வாங்கிட்டு வந்துருவேன். என்னோட கல்லூரியில இருக்கிற மரம், செடி, கொடிகளை வகைப்படுத்தி அதனுடைய பெயரைச் சொன்னால் ஒரு லட்சம் ரூபாய் பரிசுன்னு சொல்லிட்டு இருக்கேன். ஆனால், இதுவரைக்கும் யாரும் அந்த பரிசை வாங்க முன்வரல” என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism