Published:Updated:

`நிரந்தர தடைதான் சரி! - மரபணு மாற்று உணவுப் பொருள் அனுமதி குறித்து பி.ஆர் பாண்டியன்

Genetically modified food (Representational Image) ( Pixabay )

``கொரோனா போன்ற பெரும் ஆட்கொல்லி நோய் வகைகள் உலகத்தை ஆட்டிப் படைத்து வருகிறது. இதனை எதிர்கொள்வதற்கு பாரம்பரிய விவசாய முறைகளில் உற்பத்தி செய்யக்கூடிய மருத்துவ குணம் கொண்ட உணவுப் பொருட்கள் பயன்படுத்துவது அவசியம்." - பி.ஆர் பாண்டியன்

`நிரந்தர தடைதான் சரி! - மரபணு மாற்று உணவுப் பொருள் அனுமதி குறித்து பி.ஆர் பாண்டியன்

``கொரோனா போன்ற பெரும் ஆட்கொல்லி நோய் வகைகள் உலகத்தை ஆட்டிப் படைத்து வருகிறது. இதனை எதிர்கொள்வதற்கு பாரம்பரிய விவசாய முறைகளில் உற்பத்தி செய்யக்கூடிய மருத்துவ குணம் கொண்ட உணவுப் பொருட்கள் பயன்படுத்துவது அவசியம்." - பி.ஆர் பாண்டியன்

Published:Updated:
Genetically modified food (Representational Image) ( Pixabay )

மரபணு மாற்றப்பட்ட விதைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களை உட்கொள்வதற்கு அனுமதிப்பது குறித்து கருத்து கேட்பு வரைவுத் திட்ட அறிக்கையை இந்திய உணவு பொருள் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் (FSSAI) வெளியிட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.

இதுகுறித்து பேசும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர் பாண்டியன், ``மரபணு மாற்றப்பட்ட உணவுப்பொருட்களை பயன்படுத்த, மத்திய - மாநில அரசுகள், நிரந்தர தடை விதிக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

பி.ஆர் பாண்டியன்
பி.ஆர் பாண்டியன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது தொடர்பாக மேலும் பேசிய அவர், ``இந்தியா உட்பட உலகத்தில் பல்வேறு நாடுகள் மரபணு மாற்றப்பட்ட விதைகளையும், உணவு வகைகளையும் பயிரிடவும் பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளன. இதற்கு அடிப்படை காரணம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்கள் நஞ்சாகிவிட்டது. இதனால் நோய் தாக்குதல்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது.

இதனை கட்டுப்படுத்த மருந்துகளைக் கூட கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், தற்போது கொரோனா போன்ற பெரும் ஆட்கொல்லி நோய் வகைகள் உலகத்தை ஆட்டிப் படைத்து வருகிறது.

இதனை எதிர்கொள்வதற்கு பாரம்பர்ய விவசாய முறைகளில் உற்பத்தி செய்யக்கூடிய மருத்துவ குணம் கொண்ட உணவுப் பொருட்கள் பயன்படுத்துவது அவசியம் என்பதை பின்பற்றி வருகிறோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் மரபணு மாற்று விதைகள் பயிரிடுவதையும், உணவு வகைகள் பயன்பாட்டிற்கும் தடை விதித்துள்ளனர். இந்நிலையில் மாநில அரசுகளின் கருத்துகளை அறியாமல் இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட விதைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களை குழந்தைகள் தவிர்த்து மனிதர்கள், விலங்குகள் உட்கொள்வதற்கு அனுமதிப்பது குறித்து கருத்து கேட்பு வரைவுத் திட்ட அறிக்கை இந்திய உணவு பொருள் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.

Genetically modified food (Representational Image)
Genetically modified food (Representational Image)
Pixabay

இதனைத் திரும்பப் பெறுவதோடு,மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகளை இந்தியாவில் அனுமதிக்க நிரந்தரத் தடை விதித்து கொள்கை முடிவு எடுக்க மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறோம். தமிழக அரசு தனது முழு எதிர்ப்பை கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஆணையத்திற்கு பாதிப்பு குறித்து எங்களது எதிர்ப்பை கடிதம் மூலம் தெரிவித்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism